Thursday, June 28, 2012

தொடுவோம். பரிமாறுவோம். புதுவாழ்வு வாழ புதுமனிதர்களாக மாறுவோம்.

01.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. அச்சம், அவநம்பிக்கை, அழுகை, துயரம், கலக்கம், ஓலம், புலம்பல், அமளி, வியப்பு, மலைப்பு, நகைப்பு அங்கே இருக்கின்றன. இத்தனையும்  இறைநம்பிக்கையின் எதிரிகள் இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு,“அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார். இயேசுவின் குணமாக்கும் தொடுதலை இன்று நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு தம் பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கினார். பிறர் தன்னைத் தொட்டுக் குணம் பெறவும் அனுமதித்தார். மைக்கிள் ஆஞ்சலோ, இறைவனின் படைப்பை வரையும்போது, இறைவனின் வல்லமை உள்ள கை, மனிதனைத் தொடுவதாக வரைந்துள்ளார்;. மனிதன் உயிரோட்டம் பெறுகிறான். தொடும்போதெல்லாம் புதிய ஒரு வாழ்வு உதயதாவதைக் காண்கிறோம்.

அதிசய செயல்களால் கவரப்பட்டார்கள். போதனையைக் கண்டு வியந்தவர்கள் இயேசுவை பின்சென்றார்கள். இயேசுவின் எதிரிகளோ அவரிடத்தில் குற்றம் காண்பதற்காக அவரை அணுகினார்கள் இவ்வாறு இயேசுவின் காலத்தில் பலரும் பல நோக்கங்களோடு இயேசுவிடம் சென்றதை நற்செய்தியில் பார்க்கின்றோம். இயேசு ஏற்றுக்கொண்டவர்கள் இயேசுவிடம் வெளிப்பட்ட வல்லமை கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடவுளின் வல்லமையை இயேசுவிடம் கண்ட மக்களுக்கு இயேசு மனமிரங்கி நன்மை புரிந்த தருணங்கள் பல உண்டு. அவற்றில் இன்றைய புதிமைகளை நாமும் கவனிப்போம்.

இரண்டு பெண்கள் இயேசுவின் வல்லமைச்செயலால் புத்துயிர் பெறுகிறார்கள். இரத்தப் போக்கினால் 12 ஆண்டுகள் அவதிப்பட்ட பெண் முதலில் குணம்பெறுகின்றார். அடுத்து சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோன பெண் குணம்பெறுகின்றார். இன்று  மாற்கு நற்செய்தியாளர் இயேசு புரிந்த இந்த இரு உவமைகளையும் விரிவாகத் தருகிறார். இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்ததால் இயேசுவிடம் சென்று தன் நோயைப் போக்க மன்றாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆயினும் இயேசுவின் மேலுடையையாவது தொட்டுவிட்டால் போதும், தனக்குக் குணம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார். அப்படியே இயேசுவின் 'மேலுடையின் ஓரத்தை” தொடுகிறார். அவருடைய நம்பிக்கையால்  நோய் நீங்கி நலம் பெறுகிறார். இயேசுவைத் தொட்டுக் குணம் பெற்ற மனிதர்களில் ஒருவராகப் பெருமை அடைகிறார். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வாடிய பெண் இயேசுவைத் தொட விரும்பியது அவரது நம்பிக்கையையும், துணிவையும் எடுத்துக்காட்டுகிறது. சிறுமியின் தந்தையிடம் இயேசு, அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் என சிறுமியின் கையைப் பிடித்து சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்தார்.  அச்சிறுமி எழுந்து நடந்தாள்.
 
கைகள் தொடுவதால் இரு வேறு நிகழ்ச்சிகளில் வல்லமை கைமாறுவதை இங்கு காண்கிறோம். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண். இயேசு கையை பிடித்த சிறுமி என இரு பெண்களில் புதுமைகள் நிகழ்கின்றன. அப்பெண் இயேசுவைத் தொட்டதால், இயேசுவின் ஆற்றல் கைமாறியதால் அவள் குணமடைந்தாள். இயேசு அக்குழந்தையைத் தொட்டதால், இங்கும் அவரது ஆற்றல் கைமாறியதால்,இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றது.

தொடுவது நலம் தரும் அனுபவம் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் உணர்ந்திருக்கிறோம். நமது தொடுதல் பிறரை நலமடைய வைப்பதாக இருக்க வேண்டுமேதவிர, பிறரைத் துன்புறுத்துவதற்காக, இழிவு செய்வதற்காக அமையக்கூடாது. அவை மனித மாண்பைக் குறைப்பனவாகவும் விளங்கக்கூடது. பிறரைத் தொடும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பரிமாற்றம். அன்பையும் ஆற்றலையும் வாழ்வையும் பகிர்ந்து கொள்ளும் இறை அனுபவம். இத்தகைய புனித பரிமாற்றம் நாம் கடவுளைத் தொடும்போதும், கடவுள் நம்மைத் தொடும்போதும் நடைபெறுகிறது. நற்கருணை வாங்கும்போது மிகச் சிறப்பாக இப்புனித பரிமாற்றம் அரங்கேறுகிறது. ஒவ்வொரு முறை பிறரைத் தொடும்போதும், வாழ்வளிக்கும் இப்புனித பரிமாற்றத்தை நாம் செயல்படுத்துவோம். ஆகவே இறைவனையும் பிறரையும் நாம் தொடுவதன் சிறப்பை, மாண்பை, மகிமையை உணர்ந்து செயல்படுவோம். எனவே, ஒவ்வொரு முறையும் நாம் பிறரைத் தொடும்போது அது நலம் தரும் அனுபவமாக அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

இன்றைய அதிசய நிகழ்ச்சிகள் புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய நிகழ்ச்சியாகவும் இருக்கின்றன. அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே இயேசு கூறிய வார்த்தைகள்; நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. எனவே இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ் புதுமனிதர்களாக மாறுவோம்

Tuesday, June 19, 2012

உள்ளதை உள்ளவாறு சொல்லி உண்மைக்கு சான்று பகர்வோம்.

24.06.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம்  திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.  ஆண்டவர் இயேசு, அன்னை மரியா இவர்களோடு பிறப்பு விழாவைக் கொண்டாடும் ஒரே புனிதர் இவர்; மட்டுமே. “ மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது” என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப் பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய இவரது புரட்சிக் கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்திருந்தன.

இன்று எம் நாட்டின் நிலவரம்போல் அன்று திருமுழுக்கு யோவான் காலத்தில் அங்கு அரசியல் பொருளாதார ரீதியில் இஸ்ராயேல் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. அரசியலை எடுத்துக்கொண்டால் பிறநாட்டவருக்கு அடிமைகளாய் இருக்கவேண்டிய கட்டயநிலை. மக்களுள் பலர் வறுமைப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.  எனவே அவர்களின் தேவையை மையமாகக் கொண்டு அரசியல் ரீதியாக நிரந்தர விடுதலையும் பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றமும் பெறுவதற்கு இஸ்ரயேல் மக்கள் ஏக்கத்துடன் துடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  திருமுழுக்கு யோவான் தம் போதனையின்போது ஆன்மீக மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். அவர்; மெசியாவை நாட்டு அரசியலுக்குள் புகுத்தி விடாமல் ஆன்மீகம் காத்து முழுமனித வளர்ச்சியை வழங்கக் கூடியவராகவே பார்க்கிறார்.

 திருமுழுக்கு யோவான் உள்ளதை உள்ளவாறு சொல்லி உண்மைக்கு சான்று பகர்கின்றார். அஞ்சா நெஞ்சத்தோடு மன்னரது தவறுகளையும் சுட்டிக்காட்டியவர். மக்கள் அவரை மெசியாவாக நினைத்துக் கொண்டு அவரை நெருங்கியபோது அவர்களின் அறியாமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தானேதான் மெசியா என்றுசொல்லி இறைவனின் மீட்புத் திட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திடவில்லை. அவர்இயேசுவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தி  நல்வழிப்பாதையில் வாழ வழிகாட்டியவர். இயேசுவுக்கும் திருமுழுக்குக் கொடுத்தவர். அதுபோது இயேசுவை மக்களுக்கு வரவிருந்த மீட்பர் இயேசுதான் என அறிமுகப்படுத்தினார். நற்செய்தி நூலில்  திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வை காண்கின்றோம். வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர்அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள் என யோவான் நற்செய்தியில் பார்கின்றோம்.

நம் உறவுகளும் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக பலரை நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம் அவர்களை இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. ஆனால்,இந்த அறிமுகம் நம் உறவுகளுக்கு நடைபெறுகிறதா? நாம் வாழும் இன்றைய அவசர உலகில் இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? அல்லது, இறைவனை நாம் கோவில்களில் பூட்டிவிட்டு அவ்வப்போதுமட்டும் நம் உறவுகளுக்குத் திறந்து காட்டுகிறோமா? இவ்வாறு இறைவனைக் கோவில்களில் மட்டும் பூட்டிவைப்பதால், இறைவன் நம் தலைமுறைக்கு அந்நியமாகிப் போய்விட்டாரோ? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும்.

சின்ன மீன் ஒன்று கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் நீந்தி எதையோ தேடுவதைப் போல் இருந்தது. இதைப் பார்த்த ஒரு பெரிய மீன் அதனிடம், என்ன தேடுகிறாய்?" என்று கேட்க, சின்ன மீன், கடல், கடல் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே, அது எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதாம். கடலுக்குள் இருந்துகொண்டே கடலைத் தேடிய சின்ன மீனைப் போல, இறைவனின்; இல்லத்தில் இருந்துகொண்டே இறைவனை அறியாமல் சின்ன மீன்போல் தேடுகின்றோம் நாம். எம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கும்போது, பல நேரங்களில் காற்றைப் போல, கடலைப் போல இறைவன் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருந்ததை இப்போது எண்ணிப் பார்க்கலாம். முக்கியமாக, நம் துன்ப நேரங்களில் இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம். கடவுள் நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு அறிமுகம் ஆகிக் கொண்டே இருப்பார். இவர்தான் இறைவன் என்று நாம் எல்லைகளை வரையும் ஒவ்வொரு நேரமும், அந்த எல்லைகளை உடைத்து, மாறுபட்டதொரு வழியில் நமக்கு மீண்டும் இறைவன் அறிமுகமாவார். எல்லைகளற்ற இறைவனின் அழகு இது. வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில் இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பது உண்மை.

திருமுழுக்க யோவான் படைத்த இந்த வரலாறு 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்போம் உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க நாம் கருவிகளாவோம்.


Thursday, May 31, 2012

இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் மண்னில் முழுமையாக மலரவேண்டும்

03.06.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுளின் திருவிழா திருச்சபையில் மிக முக்கியமான ஒரு திருவிழா. இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது. தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள்,மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும்,திருச்சபைத் தந்தையர்,தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

நாம் இன்று  நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ); என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார். ' '

புனித அகுஸ்தின் தன் வாழ்வின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் 'எப்படி' என்ற கேள்விக்குப் பதில் 'ஏன்' என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் கண்டறிந்தருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டி, நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம்: நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? 'அவரைப் பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித் தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்'.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம்: நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுத அந்தப் பாடம்.உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டுவோம்;. 
அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்' என்று புனித அகுஸ்தின் ஒருமுறை  சொன்னார்

நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்பு மயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. தமத்திரித்துவம் என்பதே ஒரு குழுமம். கடவுளே அன்பு என்று சொல்லும் போது மூன்று ஆட்களாகிய கடவுளுக்குள் நிகழ்கின்ற அர்த்தமுள்ள அன்பின் அனுபவத்தையே குறிக்கிறது.
இன்று குடும்பம் என்ற அமைப்பு சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். இந்நிலை சுயநலத்தை ஆழமாக வளர்த்து விடுகின்றது. சமூகத்தோடு இணக்கம் கொள்ளாநிலை, ஊரோடு ஒத்துவாழும் நிலையை பண்பினை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் வளர்ந்தால் பல்வேறு மனநிலை பாதிப்புக்களை உள்ளாக்கிவிட்டு தன்னைத்தானே சமூகத்திலிருந்து பிரித்து விடுகின்ற போக்கை அதிகரித்துவிடும்.

ஓன்றிப்பின் அன்புறவில் வாழ வேண்டிய ஒரு மனிதரின் திருமண வாழக்கையைப் பற்றி நான் அறிந்த சப்பவம் இது. 'திருமணமான முதல் ஆண்டில் மனைவி பேசினாள் கணவர் கேட்டார். இரண்டாம் ஆண்டில் கணவர் பேசினர் மனைவி; கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும்; ஒரே நேரத்தில் பேசினர்; ஊரே கேட்டது' இறுதியில் கணவர் இன்நொரு பெண்னுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டார். மனைவியும் பிள்ளைகுளும் தந்தையின் அன்புறவை இழந்தனர். இவ்வாறாக குடும்ப வாழ்வு நடத்துபவர்கள் ஏராளம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். 'என் மீது அன்பு கொண்டுள்ளவர் நாம் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என்பதை வாசிக்கின்றோம்.

இறைவன் தமக்குள் ஒன்றாய் இருப்பது போல் அவரில் நம்பிக்கை வைத்து குடும்பஉறவில் இணைவோரும் இருக்க வேண்டும் என்பது இக்கதை உணர்த்தும் உண்மை. இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் முழுமையாக வேண்டும் என்பதை கடவுள் விரும்புகிறார். கடவுள் தம்மோடு கலந்திட நம்மை அழைப்பதற்கு ஆதாரமாய் நிற்பது மனிதர் மீது அவர் கொண்ட அளவற்ற அன்பு. மனிதரோடு உறவுகொள்ள இயேசுவும் தம்மையே தாழ்த்திக் கொண்டார். கடவுள் தன்மை கொண்ட மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக அன்புற்று வாழ்வது போன்று நாமும் நம் குடும்பங்களில் அன்புடன் வாழ வேண்டும். பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்கவேண்டும். அன்புற்று ஒன்று பட்டு ஓர் உயிரும் ஓர் உடலுமாக நாம் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். மூவொரு கடவுள் நம் குடும்ப வாழ்வின் ஒற்றுமைக்கு மாதிரி. நம் குடும்பத்திலும் மற்றனைவரோடும் நாம் பாசத்தோடு பழகி வாழ வேண்டும்

எனவே தம்மையே நமக்குத் தந்த திரித்துவ உறவுகளை வலுப்படுத்த உறவுகளின் ஆழம் மனித மனங்களை ஒன்றிணைக்கும். கடின உள்ளத்தாரையும் இளகிய உள்ளத்தினராக்கும். குடும்ப உறவுகளை சீராக்க மூவொரு இறைவன் அழைக்கின்றார். சகோதர பாசத்தை ஆழப்படுத்த அழைக்கின்றார். அயலாரோடான உறவை சரி செய்ய அழைக்கின்றார்.
'என் மனதிற்கு பிடித்தமானவை மூன்று அவை ஆண்டவன் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை: அவை உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பவரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்' எனக் கூறும் சீராக் ஆகமம் வார்த்தைகளை மனதில் நிறுத்தி கடவுள் முன்னும் மனிதர் முன்னும் அழகுடையவர் ஆகுவோம்.

Thursday, May 24, 2012

மனிதபணியில் மறுமலர்ச்சி மலர தூயஆவியின் செயல்களுக்கு எம் இதயங்களை திறப்போம்.

27.05.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்த மிகப்பெரிய விழா தூய ஆவியின் பெருவிழாவாகும். இதனைப் பெந்தக்கோஸ்து என்றும் கூறுகின்றோம். உயிர்ப்புப் பெருவிழாவின் ஐம்பதாம் நாள் பெந்தக்கோஸ்து திருவிழா கொண்டாடப்படுகின்றது. தூய ஆவியின் வல்லமையால் திருச்சபை தோன்றிய நிகழ்வைத்தான் நாம் பெந்தக்கோஸ்து திருநாளில் நினைவு கூர்கின்றோம். உண்மையில் எருசலேம் மாடி அறையில் மரியாவும் திருத்தூதர்களும் கூடியிருந்த போது முதல் பெந்தக்கோஸ்து நடைபெற்றது. பெந்தக்கோஸ்து நிகழ்விலே மனிதர்களை நோக்கி ஒரு பாலத்தைக் கடவுள் தூயஆவியாரை அனுப்புவதன் மூலம் கட்டத் தீர்மானித்தார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் கொடையே பெந்தக்கோஸ்து. பெந்தகோஸ்து புதுமை என்பது மனித குலம் இழந்து விட்டிருந்த ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல் எனும் கொடையை மீண்டும் பெற்றுக்கொள்வதாகும்.

தூய ஆவியின் அருள்பொழிவால் நாம் அனைவரும் உறுதியுடன் வாழ்ந்து வருகின்றோம். தூய ஆவி கடவுளின் புதிய மற்றும் வல்லமைமிக்க தொடர்பாளராய் இருந்து கடவுளின் பணியில் ஒன்றிப்பை ஏற்படுத்துகின்றார். உயிர்த்தெழுந்த இயேசுவைப் பறைசாற்றிட, புதிய மாற்றங்களை எற்படுத்திட திருத்தூதர்களுக்கு வல்லமை அளிக்கின்றார் தூய ஆவியார். தூய ஆவியார் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு விசுவாசிகள் பயப்படத் தேவையில்லை. தூயஆவியரின் கொடைகளை நன்கறிந்து அதன்படி வாழ்ந்தவர்கள் பெருந்துன்பத்திற்குள்ளான வேளையில் அவர்களுக்குத் தூய ஆவியார் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் வல்லமையாகவும் இருந்தார். ஆனால் இன்று எம்மில் பலர் தூயஆவியனவரின் கொடைகளைப் பற்றி அறியதவர்களாய் தான் வாழ்கின்றோம். இந்;தவேளை ஒரு கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். “வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர் சாகும் தருவாயில் கடைசி மகனை அழைத்து மகனே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் இந்த கோப்பையை ஒரு பணக்காரப் பெண்மணி வீட்டுக்குப்பையலிருந்து எடுத்தேன் எனக் கூறிக் கொடுத்தார். தந்தை இறந்தபின் மகன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஒரு தங்க ஆசாரி ஒருவர் அவனுடைய கோப்பையில் காசு ஒன்று போட்டபோது கேட்ட சத்தம் அவரை ஒரு நிமிடம் அந்தக் கோப்பையைச் சோதிக்கச் செய்தது. அந்தக்கோப்பை சுத்தத் தங்கத்தால் செய்யப்படிருந்தது தெரியவந்தது. இளைஞனே ஏன் உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு பணக்காரன் நீ வைத்திருக்கும் கோப்பை பல லட்சம்; மதிப்புள்ளது எனக்கூறினார் அந்த தங்க ஆசாரி. இதை அறியாது இன்றுவரையும் வாழ்கின்றேனே என பெருமூச்சு விட்டான் அந்த மகன். நாமும் அந்த பிச்சைக்காற தந்தை, மனனைபோல நம்மிடமிருக்கும் செல்வத்தைப் பற்றித் தெரியாது வாழ்கின்றோம். நம்முள் வாழும் தூய ஆவியானவரின் கொடைகள் பற்றித் தெரியாது இருக்கிறோம் அவர் தரும் அருள் விலை மதிப்பில்லாதது. உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம் ,பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள். பாவமன்னிப்புப் பெற்று சமாதான வாழ்வு வாழ இவ்விழா நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும் இக்கால அன்றாட வாழ்விலிருந்து கடவுளின் ஆவியை ஒதுக்கி வைத்தால் நம்முள் மனித மாண்பும் நீதியும் சுதந்திரமும் மலராது. அவரை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும். மனித மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை  நீதியில் உருவாக்க முடியும். ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே மக்கள் இயேசுவிடத்திலும் தூய ஆவியினிடத்திலும் ஈர்ப்பைப் பெறுவார்கள். அப்போதுதான் மனிதபணியில் மறுமலர்ச்சி மலரும். எனவே எம்முள் உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு எம் இதயங்களை முற்றிலுமாகத் திறப்போம். சான்றுபகர்வோம்.

பெந்தக்கோஸ்து திருவிழாவன்று நாம் தூயஆவியாரில் நமக்கிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றோம். ஆனால் அந்த விசுவாசத்திற்கேற்ற நடைமுறை நம்மிடம் உள்ளதா? நமது விசுவாசம் சில வழிபாட்டு முறைமைகளில் அடங்கிவிடுகிறதா? நம்மிடம் விசுவாசம் இருந்தால் விசுவாசத்திற்கேற்ற வாழ்வை நாம் வாழவேண்டும். தேர்ந்து கொள்ளப்பட்ட இறைமக்கள் இப்போது உறைந்துபோன இறைமக்களாகிவிட்டனர் என்று பேராயர் புல்டன்ன் ஒருமுறை சொன்னார். இன்று உறைந்து போன கிறிஸ்தவ வாழ்வு, சாரமற்ற உப்பாகிவிட்ட வாழ்வு, அரைகுறை கிறிஸ்தவ வாழ்வு, நற்செய்தி விழுமியங்களுக்கு சான்று பகராத வாழ்வு, நற்செய்தியை அறிவிக்கத் தயங்கும் வாழ்வு, உலகியல் மனப்பாங்கில் உழலும் வாழ்வு, துரிதகதியில் எதிலும் செயலாற்றி, இறையுண்மைகளை மறந்துவிடும் வாழ்வு ஆகியவையே நம்மிடம் உள்ளன.  இந்நிலையில் புதிய வாழ்வை நம்மில் தூண்டியெழுப்பிட தூய ஆவியானவர் நமக்கு உறுதிதருகின்றார். எனவே குறைகூறும், பொறாமைப்படும், பிறர் பெயரைக் கெடுக்கும் செயல்கள், சுயநலச்செயல்களை விட்டுவிடுவோம். எனவே நாம் அமைதி, சாந்தம் அன்புச் செயல்களுக்கு எற்ப வாழ தூயஆவியாரிடம் வேண்டுவோம். நாம் தூய ஆவியாரின் அருள்பெற்று மக்கள் பணியில் மறுமலர்ச்சி மலர வாழ்வோம்.

Wednesday, May 16, 2012

நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். நற்செய்தியில் நம் வாழ்வை உருமாற்றுவோம்.

20.05.2012 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.
உயிர்ப்பின் மேன்மை உணர்ந்தவர்களாக நாம் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவை இன்று கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்பு அடைந்ததை கண்டவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நாயகன் மீண்டும் வருவார் என நம்பிக்கை தளாரமல் இருந்தனர். இங்கு நம்பிக்கை நனவானதைபற்றி நான்வாசித்த ஒருகதையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: “இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது நாசி முகாம்களில் பல கைதிகளுக்கு சரிவர உணவோ உடையோ வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அதிகக் கடுமையான வேலைகள் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இக்கைதிகளில் நேர்மையாளரான விக்டர் பிராங் என்பவரும் ஒருவர். இந்தக் கொடூரமான நிலையில்; சோர்ந்து பலவீனத்தில் விழுகின்ற கைதிகளை நாசி வீரர்கள் இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றார்கள். விக்டர் பிராங் தன்னைச் சுற்றியிருந்த கைதிகள் பலர் இவ்வாறு கொல்லப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஆனால் அவர் மனம் தளரவில்லை. என்றைக்காவது போர்முடிந்து தனக்கு விடுதலை கிடைக்கும். தனது குடும்பத்தை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அவர் வாழ்ந்தார். எனவே அவர் அந்த நிலையிலும் உற்சாகத்தோடு காணப்படுவதற்காக உடைந்துபோன கண்ணாடித் துண்டுகளை வைத்து முகச்சவரம் செய்தார். கிழிந்துபோன உடைகளை துவைத்து சுத்தமாய் அணிந்து காணப்பட்டார். கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டபோது முகமலர்ச்சியோடு செய்தார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த முகாம்களில் இறந்து போனார்கள். ஆனால் விக்டர் பிராங் இறுதிவரை உயிரோடு இருந்து விடுதலையாகி தனது குடும்பத்தை சந்தித்தார்.”

இக்கதை உண்மைக்கு முடிவில்லை. நேர்மைக்கு அழிவில்லை நம்பிக்கைக்கு இறப்பில்லை. என எடுத்துகாட்டுகின்றது. இயேசு இவ்வுலகில் தனக்கு நேர்ந்த பல துன்பங்களை இறைசித்தத்தை நிறைவேற்ற பொறுமையோடு தாங்கினார். ஆண்டவர் மேல் அவர் வைத்த நம்பிக்கையே அவருக்கு ஆற்றல் கொடுத்தது. இதனால் இறைவன் இயேசுவை உயர்த்தினார். இயேசுவும்விண்ணேற்படைந்தார். இயேசுவின் விண்ணேற்பு ஆண்டவன் பார்வையில் நாமும் இயேசுவைப் போல் உண்மைக்காக நீதிக்காக அன்பிற்காக நம்பிக்கையுடன் வாழும்போது உயர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உண்மைக்கு சாட்சியம் பகிர்வதே எனது பணி என்று கூறிய இயேசு தான் உயிர்தெழுந்தபின் தான் உயிர்த்தெழுந்ததை உலகிற்கு அறிவிக்கவும் அதற்கு சாட்சியம் பகிரவும் அழைப்பு விடுக்கிறார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக நாம் அனுப்பப்படுகின்றோம். நாம் சமுதாயத்தில் புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்; செயல்படவேண்டும். அப்போதுதான் சமுதாயம் கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்து உரம் பெற்று உறுதியுடன் உயிர்த்துடிப்புள்ள அங்கமாக கடவுளின்பக்கம்; தடம் பதிக்கும். 
இயேசு கொண்டுவந்த நற்செய்திதான் என்ன?:கடவுள் நம்மை அன்புசெய்கிறார்;. நாம் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்;. கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அளித்தார்;. அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து இயேசு உயிர்தெழுந்ததை உலகிற்கு அறிவித்து அதற்கு சாட்சியம் பகிரவேண்டும் என்பதே இயேசு கொண்டுவந்த நற்செய்தியின் சுருக்கம்.  உலகில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே எமக்கு தரப்பட்ட பொறுப்பு. 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி 'நற்செய்தி அறிவித்தலே.” இதை நாம் வெறும் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடாது. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் சான்று பகிர்தலே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகிர்ந்தால்அனைவரும் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள்.
சிலுவைப்பாடுகளின்; கொடூரமான நிலையிலும் தந்தை தன்னை காப்பாற்றி உயிர்த்தெழச் செய்வார் என உறுதியாக இயேசுநம்பினார். சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடுகளாயின. அதுவே உன்னதமான மகிமைபெற வழிவகுத்தது. அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா. இயேசு மாட்சிமையடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகின்றது. இயேசு அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதிமயங்கி இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு தரப்பட்ட பணியை நிறைவேற்றவே அழைக்கப்படுகின்றோம். இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக நம்பிக்கை முளைத்திடும் திடலாக மாற்றியமைத்திட நாம் உழைக்கவேண்டும் என்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். நாம் தூயஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறி நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்தினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெறும். இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா எம்மில் அர்த்தம்பெறும்.

காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதக் கற்றுக்கொள்வோம்.

13.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மோடு நட்பாக, நண்பனாக இருக்க ஆசைப்படுவதைப் பார்க்கின்றோம். உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. நண்பர்கள்;தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள் என்பார்கள். நட்பின் சிறப்பை உணர்ந்த “இயேசு, தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார். தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?” என்ற இயேசுவின்  உயிரை உறைய வைத்த அந்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிட்டது. இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இன்று எங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் நண்பர்களே என்பவர்களும் உண்டு. கவிஞன் ஒருவன்: இறiவா, என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று என்று கதறியதையும் கேட்டிருக்கின்றோம். உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கின்றோம். சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக் கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நடத்தேறுகின்றன. அத்துடன் நயவஞ்சகம் காட்டி நண்பனை கொலைசெய்வோரையம் நாம் இன்று காண்கின்றோம்.

இந்த இடத்தில் ஒருமுறை நான் நட்பு  பற்றி வசித்த ஒரு கதையை சொல்லித்தான் ஆகவேண்டும்:  இரண்டு நண்பர்கள் பலைவனத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்தனர். பாதிவழியில் இருவருக்கு மிடையில் வாக்குவாதம் பலமாகிசெல்ல திடிரென ஒருவர் மற்றவரது கன்னத்தில் பளாரென அறைந்தார். அப்பொழுது தாக்கப்பட்டவர்: “இன்று எனது உற்ர நண்பன்  எனது கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்று மணலில் எழுதினார். பின்னர் இருவரும் பலைவனத்தில் நீர் பகுதியை காணும் வரை தொடந்து நடந்து கொண்டே சென்றனர். இறுதியில் நீர் பகுதிக்குள்  இறங்கி குழித்துக் கொண்டிருக்கும்போது அடிவேண்டியவர் சேத்துக்குள் திடிரென மூழ்கத்தொடங்கினார். உடனே அறைந்தவர் அவரை மிகுந்த கஸ்ரத்துடன் இழுத்தெடுத்து காப்பாற்றினார். அப்போது “இன்று எனது உற்ர நண்பன்  எனது உயிரை காப்பாற்றினார் என்று எழுதினார். இதையும் கண்ணுற்ற அறைந்த நண்பன் “நான் உன்னை காயப்படுத்தியபோது மணலில் எழுதினாய். இப்போழுது  கற்பறையில் எழுதினாய். இது ஏன் என வினாவினார்”. அதற்கு மறுமொழியாக மற்றவர்கள் எம்மை காயப்படுத்தும் போது நாம் மணலில் எழுதவேண்டும். அதனை மன்னிப்பு என்னும் காற்று அங்கே தடயமில்லாது அழ்த்துவிடும். ஆனால் மற்றவர்கள் எமக்கு நன்மை செய்யும் போது கற்பாறையில் செதிக்கிவிடவேண்டும் அதனை எந்த புயல்காற்றும் அழித்துவிடாது என்று பதில்கூறினார். மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. நாம் இயேசுவை காயக்படுத்தும்போதெல்லாம்  அரவணைத்திட முன்வந்தார். நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதப்பழகுவோம்.

இன்றைய நற்செய்தி இயேசுவோடு ஒருவர் கொண்டுள்ள உறவை இரண்டு வடிவங்களில் காட்டுகின்றது எனலாம். “பணியாளர்”; - “நண்பன்”. எம் விசுவாசப்பயணத்தில் இந்த வடிவத்தில் ஏதாவது ஒன்று முன்னிலைபெறும் என்பது உண்மையே. அது தலைவன் - பணியாளர் உறவு அல்லது நண்பன் - நண்பன் உறவாகும். இயேசு நம்மோடு நண்பனாக இருக்கவே ஆசைப்படுவதை நற்செய்தியில் பார்க்கின்றோம்: “இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்”. நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.

தலைவன் - பணியாளர் உறவை முன்னிலைப்படுத்துவோர் நாம் இயேசுவின் முன்பு தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர். இதற்குத் தான் இயேசு “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்கின்றார். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பு அனைத்தும் இறைவனின் கொடை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். அத்துடன், இறுதியாக எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்கவும் இன்றைய வாசகம் அழைக்கிறது. “நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் கனி தரவேண்டும் என்பதற்காகவே. எனவே நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் வாழ்வோம். பகைவரைகூட நட்பனாக மாற்றவோம்.

இணைந்திருந்து இயேசுவோடு நிலைத்து வாழ்வோம்

06.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கடவுளும், சமயமும் தேவையில்லை என்ற நிலை வளர்ந்துவரும் இன்றைய உலகில் இயேசுவும் அவரது போதனைகளும் எம் வாழ்வைவும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கவைக்க வேண்டும் என்று எமக்கு கற்பிக்கின்றன. திராட்சைச் செடியாம் இயேசு தம்மோடு இணைந்த கொடிகளாக நாம் இருந்து, பலன் தருமாறு எம்மை அழைக்கும் பகுதியை இன்று நற்செய்தியில் காண்கின்றோம். நாம்  இயேசுவினுள்ளும் அவரது வார்த்தைகள் எங்களுள்ளும் நிலைத்திருந்தால் நாங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். இயேசுவே நமது வாழ்வின் மையம் என்பதை இது உறுதியாக காட்டுகின்றது. இயேசுவே உண்மையான திராட்சைச் செடி. திராட்சைச் செடியோடு இணைந்து செழிக்கும் கொடிகளைப் போல, இயேசுவோடு இணைந்திருந்து பலன்தர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திகழ்வதே, கடவுள் எதிர்பார்க்கும் பலன் தரும் வாழ்வாகும்.

“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” இறைவனைத் தேடும் இந்த தாகம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருக்கவேண்டும். “எங்களை உமக்காக உருவாக்கினீர் இறைவா, எனவே உம்மில் நாங்கள் ஒய்வு கொள்ளும்வரை எங்கள் இதயம் ஓய்வதில்லை" என்று புனித அகஸ்தின் கூறிய வார்த்தைகளை மேற்கோள் கொண்டு நாம் இயேசுவில் இணைந்து பலன் தர ஓயாமல் உழைப்போம்.

தற்போதைய உலகில் அற்புதமான பல அறிவியல் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், அவற்றில் திருப்தி அடையாமல், மனித மனம் இன்னும் ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. திராட்சைச் செடியாம் இயேசுவோடு இணைந்து செல்ல முடியாது என்பது போன்ற ஓர் எண்ணத்தை இன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிகுகின்றது. ஆயினும் இணைந்து செல்லும்போது இன்னும் பல ஆழமான உண்மைகளை உணர முடியும் என்பதற்கு  நானே திராட்சைக் செடி நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்னும் பகுதிகள்  சான்றாகும்.
 
இயேசுவின் சீடர்கள் கனி தர வேண்டும், அதுவும் மிகுந்த கனிதர வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நூறு மடங்கு எனப் பலன் தந்தன என்னும் விதைப்பவன் உவமையையும் ஆண்டவரே மொழிந்துள்ளார். எனவே, மிகுந்த கனி தருபவர்களாகப் பணியாற்றுவோம்.

மண்ணில் மனித வாழ்க்கை என்பது நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தந்து மிகுந்த கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் ஆவல். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், பலருக்குப் பயன் உள்ளதாக, ஆற்றல் தருவதாக அமையவேண்டும். பிறருக்கு பயன் தந்து இறைவனுக்கு மகிமை சேர்ப்பதே ஒருவன் வாழ்ந்ததன் பயன் எனலாம். நமது வாழ்வும், பயனும் யாரையுமே தொடவில்லையென்றால் என்னே ஒரு பரிதாபம். எனவே, கனி தரும் சொற்களைப் பேசுவோம், மிகுந்த கனிதருமாறு வாழ்வோம். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக்கருத்தை இயேசு இன்றைய நற்செய்திப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். 'இணைந்திருத்தல்”, 'நிலைத்திருத்தல்” என்னும் வார்த்தைகளை இங்கு பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது". “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்". "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது". “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." இத்த வார்த்தைகள் இதற்குச் சான்றுகள்.

இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறோம். ஆகவே கொஞ்சம்தானே நட்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றிலும்  நட்டமடைந்துவிடுவோம்.

அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், “விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்வோம். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். எம்மை பிரிக்கும் சக்திகள் காத்துக்கொண்டே இருக்கின்றன. அவைகள் எமக்கு உள்ளேயும் இருக்கும் வெளியேயும் இருக்கும். எனவே அவைகளை அடையாளம் கண்டு அழிப்போம். இயேசுவோடு இணைந்த கிளைகளாக வாழ்வோம். வெற்றி நம் கையில்.

Friday, April 27, 2012

சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன


29.04.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நானே நல்ல ஆயன் என்று இயேசு கூறும் பகுதியை இன்று நற்செய்தியில் பார்க்கின்றோம். பலதரப்பட்ட மக்களையும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் கவர்ந்த ஓவியம் இயேசு நல்லாயனாக சித்தரிக்கப்பட்ட ஓவியமேயாகும். இயேசு தமக்குத் தாமே வைத்துக்கொண்ட பெயர்களில் ஒன்றுதான் ஆயன். மண்ணகத்தோருக்காக மரித்து, உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்நாட்களில் நல்லாயனாம் இயேசுவைப் பற்றி தியானிப்பது சாலச்சிறந்ததாகும்.

நானே நல்ல ஆயன் என்று இயேசு கூறும்போது யார் இங்கு ஆடுகள்? என்ற கேள்விக்கு பதில்காணவேண்டியது கட்டயமாகிறது. நாம் தான் அந்த ஆடுகள். எனவே ஆடுகளின் குணநலன்களைப்பற்றியும் அறிவது இங்கு அவசியமாகிறது: ஆடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து கூட்டமாக வாழும். சுயமாக செயல்படாது. வழி தவறி விடும். ஓன்றை ஒன்று எப்போதும் பின் தொடரும். மிகவும் பலவீனமானவை. எளிதல் பிற விலங்குகளுக்கு இரையாகும். இங்கு இயேசு தம்மை ஒரு நல்ல ஆயராக எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். இயேசு எவ்வாறு நல்ல ஆயனாக செயல்படுகிறார் என்பது பற்றி சிந்தித்தால்: இயேசு தம் மந்தையை நன்கு அறிந்து, பாதுகாத்து, முன்னின்று வழிநடத்தி தம் ஆடுகளாகிய எமக்காக உயிரைக் கொடுக்கும் நல்லாயனாக  செயல்படுகிறார் என்பது தெளிவாகும்.

இன்றைய நாள் திருச்சபையில் நல்லாயன் ஞாயிறு என்றும், உலகளாவிய இறை அழைத்தல் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயனின் ஒரு முக்கியமான குணம் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுப்பது. இந்த இடத்தில் நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவத்தை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். “கொரியாவில் நடந்து வந்த போரின் உச்சகட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடி வந்த ஒரு வீரன், தான் இறப்பதற்கு முன், ஒரு குருவைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டான். அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொருவர் “நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், “நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, “நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்.” என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார் அந்த குரு. சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவனுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

நமது ஆயராகிய இன்றைய குருக்கள் இயேசு கொண்டிருந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிராமல், உலகியல் பண்புகளை கொண்டிருக்கின்றனரோ என இயேசுவும், இறைமக்களும்  எண்ணத்தோண்றும் காலம் விரைவில் வந்தவிடுமோ என நினைப்பவர்களும் எம்மிடையே உண்டு. இறையழைத்தல், குருமாணவர் உருவாக்கம், குருக்களின் பணியும் வாழ்வும்... போன்றவை பற்றி திருத்தந்தையர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளனர். மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜோன் பவுல். “குருவினுடைய வாழ்வும் இறை மக்களுக்காக அவருடைய திருச்சபைக்கும் ஆற்றும் சாட்சியத்துடன் கூடிய அன்புப் பணியும், சகோதர ஒன்றிப்பும், நற்செய்தி அறிவிப்பின் மீதுள்ள வாஞ்சையுமே தேவ அழைத்தலை வளர்க்கும் முதன்மைக் காரணியாக திகழ்கின்றது என்றார்.

சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன. சொற்கள் கடந்த சிந்தனை, தன்னலம் தாண்டிய வாழ்வு, சான்று பகரும் உண்மை இவையே பிறர் நம்மை நோக்கி வரச் செய்யும் காரணிகள் எனலாம். இன்று நன்னெறி கோட்பாடுகளின் நெருக்கடியால் வழிநடத்தும் குருக்களின் விழுமியங்கள் சரிவிற்கு தள்ளப்படுகிறது. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றும் வழிகளைத் குருக்கள் தீர ஆய்வுசெய்து நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்படு பணிபுரிவதன் மூலம், நிலையான நீடித்த முன்னேற்றத்தை மனித சமுதாயத்தில் கட்டி எழுப்பமுடியும். இவையெல்லாம் செயலாக்கம் பெற்றால், நல்ல குருக்கள் நம்மை வழிநடத்துவர். இதற்கு நாம் அனைவரும் செய்யக்கூடிய மிக எளிதான உதவி செப உதவிதான். எனவே இயேசுவைப் போல, திருச்சபையை வழிநடத்த நல்ல ஆயர்கள் உருவாகி உழைக்க உயிர்த்த மாட்சி மிகு இயேசுவிடம் உம்மைப் போன்ற நல்ல மேய்ப்பர்களை எங்களுக்குத் தாரும் என்று பணியாற்றும் குருக்களுக்காகவும், வருங்கால குருக்களுக்காகவும் தவறாமல் செபிக்போம். நல்லாயனாம் இயேசுவைப் போல் மக்கள் பணிக்குத் தங்களையே அளித்த பணியாளரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று இவ்இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

Thursday, December 22, 2011

முகவரி அழிந்தவர்களுக்கு முகமானவரை எம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்

 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் பிறப்பை ஆன்மீகப் பலன் தரும் வகையில் கொண்டாட உங்களுக்கும் என் செபம் நிறைநல் வாழ்த்துக்கள். மானிடரின் முழு விடுதலைக்காகத் தன்னையே கையளித்த இறைமகன் இயேசு உண்மையாகவே மானுடத்திற்கு விடுதலை அளிக்க, மனிதரின் மாண்பினை மீட்டெடுக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து மகிழ்வோம். கிறிஸ்மஸ் தன்னையும் தாண்டி சுட்டிக்காட்டுவது, சிலுவையிலும் உயிர்ப்பின் மகிழ்விலும் வெற்றியாக பெறப்பட்ட மீட்பையே. கடவுள் நம்மருகே வந்துள்ளார், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மருகே இருக்கிறார் என்ற உணர்வில் பெறும் மகிழ்வால் இந்த கிறிஸ்மஸ் பெருவிழா நம்மை நிறைப்பதாக அமையவேண்டும்.

ஓவியத்திற்கும் காவியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேட்டபோது: எனது வேலை நண்பா:; ஆறறிவு படைத்த மனிதன் வரைவது ஒவியம் மாறாக ஏழாம் அறிவு படைத்த புதுமனிதன் படைக்ககூடியது காவியம். பள்ளி மானவன்: எங்கள் ஆசிரியர்; கரும்பலகையில் எழுதுவது புரியாத ஒரு ஓவியம் அதைப்பார்த்து படித்து தேர்ச்சியடைவது நாங்கள் படைக்கும் காவியம். கல்லூரி மாணவன்: கற்பனைகோட்டையில் வரைவது நிஜமில்லா நிழலான ஒரு ஓவியம். மாறாக வாலிப பருவத்தில் படித்து சாதனைபடைப்பது நிஜமான ஒரு காவியம். பத்திரிகையாளர்: அரசியல்வாதியின் பல்வேறு வாக்குறுதிகள் கவர்ச்சி ஓவியங்கள். ஆனால் இதற்காக அவர் வாங்கிய வாக்குக்கள் அனைத்தும் எண்ணக்கூடிய காவியங்கள். மதகுரு: ஆலயத்திற்கு வருவோரின் பக்தி நிறமில்லா ஓவியம். அன்றாடம் இறைவன் பிரசன்னத்தில் வாழ்வைத்தொடங்கும் சிலரின் முயற்சி சாட்சி பகரும் காவியம். சுருக்கமாக சொன்னால் ஓவியம் கற்பனை உலகம் - காவியம் நிஜ உலகம். ஓவியமான மீட்பின் வரலாறு உண்மையான காவியமானதே இயேசு பிறப்பு விழா. ஆபிரகாம் முதல் இறைவாக்கினர் வரை இறைவன் பேசினார் அந்த குரலிருந்து இறைவனை பல்வேறுவிதத்தில் ஓவியம் தீட்டினர். அது கற்பனையளவில் ஒரு வரையறையோடு இருந்தது. இவர்கள் தொடர்ந்து கேட்ட வார்த்தை நான் உங்களோடு இருக்கின்றேன். ஆனால் இதை பொய்யென நினைத்து பிரிந்து பாதைமாறி பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டடிருந்த பொழுது இருப்பதை உறுதிப்பபடுத்தி மனிதம் வாழும் சூழலில் காவியம் ஆனதே கிறிஸ்துவின் பிறப்பு.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கி.பி8ம் நூற்றாண்டில் தாவீது அரசர் இணைத்த இஸ்ராயேல் அரசு மீண்டும் பிரிந்து இருளில் இருந்தபொழுது மெசியாவின் பேரோளியைநோக்கி வர அழைக்கின்றார். நம்பிக்ககையிழந்த நிஜமில்லா ஒவியமான வாழ்க்கையிலிருந்து நிஜமான ஒளியான இறைவன் வருகிறார் வாருங்கள் என அழைக்கிறார். அவர் தாவீதின் வழிமரபில் வருவார். நம் முன்னோரிடம் பேசி நம்மிடம் பேசி நம் கற்பனையில் ஓவியமாய் இருக்கும் இறைவன் நமக்கு அருகாமையில் நம் மத்தியில் நம்மில் மனிதமாக வருவார் என அழைக்கின்றார். அவர் வியத்தகு ஆலோசகர் வலிமைமிகுஇறைவன் என்றுமுள்ள தந்தை அமைதியின் அரசர் என்ற அடைமொழிகள் அவரின் நிரந்தர நிஜமான இருக்கபோகின்ற பிரசன்னத்தை எடுத்துரைக்கின்றன.
நற்செய்தியில் லூக்கா இயேசுவின் பிறப்பை உரோமை ஆளுநர் செசார் அகுஸ்து ஆட்சி பின்னனியில் அமைக்கின்றார். மற்றும் இயேசுவை பெத்தலேகமின் மையமாகவும் அழகுசெய்கிறார். அங்கு மறைமுகமாக யார் தாவீதின் வழிமரபில் அரியணையில் யூதர்களின் அரசராக வருவார் என கண்டெறியவும் கணக்கெடுப்பு நடந்தது. இது இயேசுவின் குடிசை காவியத்தின் முதல்படி.

யோசேப்பும்-மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்தலேகமைநோக்கி 80மைல் தொலைவு கடந்துசென்றனர். அவர் இங்கு பிறந்து வளர்ந்ததினால் அவர் அதற்கு மையமாக இருந்தார். இயேசு இறைவன் மனிதமாக பெத்லேகேமின் மையமானர் காவியமானார். முறைக்கல்வி வகுப்பு ஒன்றில் கிறிஸ்துபிறப்பின் நிகழ்வை எடுத்துரைத்து அனைவரையும் அதனை ஒவியப்படமாக வரையும்படி ஆசிரியர் கேட்டார். சறு மானவன் வித்தியாசமாக குடிவில் இரண்டு குழந்தை வரைந்திருந்தான். ஏன் என்று ஆசிரியர் கேட்டபொழுது. “நான் வரைந்தபொழுது பாலன் இயேசு உன்னோட நான் வரலாமா என்றுகேட்டர். நான் ஒரு யாருமில்லா யாருமறியா அனாதை. வெறுப்பையும் மறுப்பையுமே சம்பாதித்தவன். எப்படி வாழ்வது என தெரியாமல் தத்தளிப்பவன். ஏன்னுடன் நீ வாழ வரவேண்டாம் என்றேன்.” அப்போது இயேசு “நீ என்னோடு வா. நான் உன்னோடு உனக்காக எந்நாளும் பிறந்து கொண்டேயிருப்பேன்.” என்று கூறினார். எனவே நான் தனிமையல்ல அனாதையல்ல என்னிடம் இனிமேல் வெறுப்பு மறுப்பு இல்லை. எந்நாளும் புதுபிறப்பு ஆகவே இவ்வாறு வரைந்தேன் என்றான். இஸ்ராயேல் மக்கள் கற்பனையில் நிழலாடிய இறைவன் இவ்வுலகில் நிஜமானார் குடிசையில். முகவரி அழிந்தவர்களுக்கு முகமாய், உறவை இழந்தவர்களுக்கு உடன்பிறப்பாய், ஏழ்மையில் மூழ்கிபோனவர்களுக்கு ஏற்றமாய், வாழ்வில் தோற்றுப்போனவர்களுக்கு தோளானய், அனாதைகளுக்கு அன்பனாய்.  நாதியற்றோரக்கு நட்பனாய் நம்முன் நம்மோடு நமக்கருகில் நடக்கின்றார். ஓவியம் காவியமாகிவிட்டது நம்மில் கலந்துவிட்டது. குடிசையில் காவியமான கிறிஸ்து மக்கள் நடுவேயுள்ள குறைபாடுகளை அகற்றும் பணி நம்மால் நடைபெறவேண்டும். உலகில் மாந்தர் உள்ளவரை இக்குறைபாடுகள் இருக்கும். அதுவரையிலும் இப்பணிகள் நடைபெற வேண்டும். காலங்களைக் கடந்தவர் கால எல்லைக்குள் வந்து இப் பணிகளை எல்லாரும் எல்லாருக்கும் செய்யவேண்டும் என உணர்த்தனார். இன்று விழா கொண்டாடும் நாம் நம்மால் இயன்ற அளவில் உலகம் முடியும் வரை இப்பணியைச் செய்யவேண்டும். இந்தப்பணிகளை நாம் செய்து ஆண்டவர் முன் நிற்போம் அப்போது நாம் கொள்ளும் மகிழ்வு அளவிட முடியாதாக இருக்கும். இயேசுவுடன் இணைந்து நின்று புதிய இயேசுவாக நாம் மாறுவோம்-பிறப்போம். நாம் பெற்ற பெருவாழ்வை நம்மைச் சுற்றி வாழ்வோரும் பெறச் செய்து புதிய சமுதாயமாக அவர்களையும் பிறக்கச் செய்வோம். இந்த நல்ல உணர்வுகளப் மகிமைமிகு இயேசு பிறப்பு பெருவிழாவில் பெற்றவராய் இயேசுவை நம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்.


Thursday, December 15, 2011

குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்

குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பெத்லகேமில் இயேசு பிறந்துள்ளதை அறிந்த அரசன் ஏரோதும்  எருசலேமும் கலங்கினாலும் ஞானிகள் பிறந்த பாலன் இயேசுவை வணங்கச் சென்ற பயணம் இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. ஞானிகள் இயேசுவை  வணங்க வந்த நிகழ்வு பாலன் இயேசு பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒருவிடயம். இவர்கள் மூன்று ஞானிகள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ள ஒருவிடமாகிறது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடைபோட்டு இயேசுவைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

யார் இந்த ஞானிகள்;?
கிரேக்க மொழியிலே “மாகோஸ்” (அயபழள) என்றால் “ஞானி” என்று பொருள். இது பன்மையில் (அயப) என்பது பொருளாகும். இவர்களை நாம் பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம். பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள். மந்திரவாதிகள். நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள். தத்துவ அறிவில்கைதேர்ந்தவர்கள். குறி சொல்லும் முன்னறிவிப்பாளர்கள். இயற்கை மருத்துவத்தி;ல் கைதேர்ந்தவர்கள். கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள். வானசாஸ்திரிகள்.

இந்த ஞானிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகலாம்?
இந்த ஞானிகள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அரேபியா நாட்டிலிருந்து பயணி;திருக்கலாம் என்று மரபுகள் கூறுகையில் இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்

இந்த ஞானிகள்; எத்தனை பேர்?
நற்செய்தியில் பாலன் இயேசுவைக் காணவந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியி;ல் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுள்ளதால் தான் என்கிறார்கள்.

இந்த ஞானிகள் பெயர்கள் என்ன?
இந்த ஞானிகளின் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது  மரபாகிறது.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் என்ன செய்தார்கள்?
இயேசுவைக் காணவந்த ஞானிகள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை,  கூற முனையவுமில்லை. அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபட்டார்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்களானர்கள். கடவுளின் முகவரியை கடவுளின் படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொன்டார்கள். இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள் கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பினர். இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர்ந்தனர். இந்த ஞானிகள் வேதாகமம் கூறுவதைக் கேட்டனர். அதுவே உண்மை வழியைக் காட்டும் விண்மீனாகா தோண்றியது என்ற மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தி நின்றனர்.


இயேசுவைக் காணவந்த ஞானிகள் கொண்டுவந்த பரிசுகளுக்கு அர்த்தம் என்ன?
கஸ்பாhர் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிக்ப் பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டுவந்தர். சாம்பரணி குருத்துத்வதைக் குறிக்கின்றது. குருக்களை பெர்சிய நாட்டில் 'போன்தி ஃ பெக்ஸ்' அதாவது பாலமாக இருப்பவர்கள் - இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்து பேசி பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத் தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது தெளிவு

மெல்கியேர் வயதானவராக, நீண்ட தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதி பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானிகள்.

பல்தாசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படு;தப்பட்ட ஒரு பொருள். இது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்பு பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரை பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன.
விண்மீன் - கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.

இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். “ யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயெலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார்”. ஏன் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய மூன்று கண்ணேட்டங்கள்:
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.

ஏரோது- பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதலி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.

பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. மாறாக, இயேசு போதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.

ஞானிகள் - பக்தி பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதை கண்ட அவர்கள் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை இயேசுவைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்தி பரவசத்தில் மூழ்கினார்கள்.

ஞானிகளின் வருகை நமக்குத் தரும் பாடங்கள்-
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம். இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும். இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இறைவனே நமக்கு பரிசாக அமைவார். இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும். இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரை தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். உறுதியாக உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும்

இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதத்தை களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள். வாருங்கள் நாமும் குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்.

 

தேடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் உனது தேடல் ?

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.

 மனித வாழ்க்கை என்பது ஒரு தேடல் தேடல் இல்லையேலர் வாழ்வில் பொருளில்லை.இலட்சியப்பாதையில் இத்தேடல் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது என்பது மாற்றிவிடமுடியாத உண்மை.  வுhழ்வை சுவையாக்கிக்கொள்ள மனிதன் தேடிக்கொண்டே இருக்கிறான். இன்று மனித வாழ்க்கையில் தேடல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்பது கண்கூடு. 


தேடல்கள் பல விதம்:
வண்டுகளின் தேடல் மலர்களில் தேன்.; கவிஞனின் தேடல் மனதில் கற்பனை. குhதலனின் தேடல் வாழ்வில் காதலி. வேட்டைக்காரனின் தேடல் காட்டில் விலங்குளள். கலைஞனின் தேடல் பார்வையில் அழகு. புpச்சைக்காரனின் தேடல் பாத்திரத்தில் பிச்சை. விஞ்ஞானியின் தேடல் உலகில் கண்டுபிடிப்பு. உளவிலாளரின் தேடல் உள்ளத்தில் அமைதி. சுhத்தானின் தேடல் புமியில் குழப்பம். புக்தனின் தேடல் பரம்பொருள். ஆண்டவனின் தேடல் அகிலத்தில் ஆத்துpகன்.
எனவே எங்கும் தேடல் எதிலும் தேடல் என தேடலின்  விதங்களை விபரித்தக்கொண்டே போகலாம். புல்வேறுகாரணங்களுக்காக பலவிதமான தேடல்கள் மனிதனில் புதைந்து கிடக்கின்றன.

ஒவ்வொண்றும் ஒருவிதம்.
தேடல்கள் இல்லையேல் மண்ணில் மனித வாழ்க்கை இல்லை. தேடலில் மையங்கொண்ட மனித வாழ்க்கை. மனிதனுக்கு மனிதன் மாறுபட்டாலும் ஒவ்வொன்றும். ஒவ்வொரு விதத்தில் அமைகின்றது.
இங்கு இரண்டு வித்தியாசமான தேடல்கள் கிறிஸ்துவில் மையப்படுத்தப்பட்டுகின்றன. பாவத்தின் சேற்றில் அமைதியின்றி பரிதவிக்கும் பாவிக்கு நேசக்கரம் நீட்ட மண்ணுலகில் மனிதர் எவரும் தரமுடியாத அமைதியை தன்னகத்தே கொண்டு மனிதனை தேட மாட்டுக்கொட்டிலில் மன்னர் இயேசு பிறக்கின்றார். பிறந்த பாலனைத் தேடி ஞானிகள் ஒருபுறம் அரசன் ஏரோது மறுபுறம். ஆனால் இவர்களின் தேடலின் நோக்கம். இருவேறு முரண்பட்ட காரணங்களாக இருந்தன.

உண்மையானவரை உண்மையில் உண்மையாக தேடுகின்றார்கள். ஞானிகள் பாவத்தில் பாளாப் போன  உலகை மீட்க பாரெங்கும் நல்லமைதியை அருள நாயகன் பிறந்துள்ளார் என அவரைத் தேடுகின்றனர். ஆவரை வணங்கி அவரிடம் ஆசீர் பெற அவரைத் தேடினார்கள். உண்மையாகவே அவர்களின் உள்ளம். ஊலக மீட்பரைத் தேடும் உள்ளம் என்பதால் அதிசய வீண்மீன் அவர்களின் தேடலுக்கு  ஆறுதல் கொடுத்தது. 

ஆநிரைத்தோழுவில் அகிலத்திற்கும் அமைத அருள்பவரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினர். சுயனலமற்ற தேடல் அவர்களில் சுத்தமாக இருந்ததால். தேடய தேவனை கண்டனர். வேண்டிய அமைதியை அவரில் பெற்றனர். மண்றாடிய ஆசீரும் மனமகிழக் கிடைத்தது.

எனது அரசிற்கு போட்டியாக ஒரு அரசனா? ஊலகில் அவனை வாழவிடுவதா? ஆவனைக் கொல்ல வேண்டும். கங்கணம் கொண்ட ஏரோது நாயகன் இயேசுவை நகரெங்கும் தேடப் புறப்படுகின்றான். வுள்ளல் தேவனைக்கண்டு வணங்கி இகில மீட்பரில் ஆசிர் பெற பொய்போர்வையில் உண்மையானவரைத் தேடுகின்றான். ஏரோதின் தேடலில் ஏமாற்றும் எண்ணம் இருந்தது. ஏற்றுக்கொள்ளும் உள்ளம் அவனிடம் இல்லை. பொய்மை இருந்தது. ஊண்மை இருக்கவில்லை அநீதி இருந்தது நீதி இருக்கவில்லை.  பழிவாங்கும் எண்ணம் இருந்தது. பரிவுபசாரம் இருக்கவில்லை. வஞ்சகம் இருந்தது. நேர்மை இருக்கவில்லை. இதனால் நேச இயேசுவை அவனால் கண்டு கொள்ளவில்லை. மாறா அவன் தேசமெங்கும் பச்சிழங் பாலகரின் தலைகள் உருண்டன. புச்சை இரத்தம் ஆறாகியது. இருந்தும் தேடிய இயேசுவை கண்டு அழிக்க முடியவில்லை. காரணம் அவனது தேடலில் சுயனலம் சுற்றிப்போயிருந்தது. தேவனுக்கு அவண் தேடல் உகந்ததாக் இருக்கவில்லை.

எமது மண்ணில் இன்றைய தேடல்கள் பல விதம். குhணியைத் கைப்பற்ற கணக்கற்ற தேடலகள். புணத்தை சேமிக்க பல வழித்தேடல்கள். வீட்டைக் கடட்ட வித்ம் விதமான தேடல்கள். கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விட வெளிநாடுகளிலிருந்து முட்டியனத்து வந்து மூலைமுடுக்கெங்கும் தேடல்கள்.

இவ்வாறு இன்றைய தேடல்கள் சுயனலத்தேடல்களாக அதிகரிக்கின்றன. இதற்கு மத்தியில் நாட்டில் நல்லமைதியைத் வேண்டி ஆட்சியாளர்கள். அதைத் தேடுகின்றார்கள். பரம எதிரிகளாக இருந்தவர்கள் பக்கத்திலிரந்து இந்த அமைதியைத் தேடுகின்றனர். இவர்க் உள்ளங்களில் ஞானிகள் தேடல் உள்ளதர்? ஏரொதின் தேடல் உள்ளதா? யுhரறிவார் இந்த மண்ணிலே.

உனது தேடல்.
   
நாம் நம்முடைய வாழ்க்கையில் சுயநலத்தை வெறுப்போம். சுத்த கருத்துடன் தேவனைத் தேடுவோம். ஆலகையின் மாயயைகளை வெறுத்து ஆண்டவரைத் தேடுவோம். புளுவும் பூச்சியும் அரிக்கும் சேல்வங்களை தேடவேண்டாம். புண்ணிய செல்வங்களை பூமியெங்கும் தேடுவோம் சுய இலாபத்தால் இருண்ட இதயத்தை இடித்து விட்டு இயேசுவின் அமைதியை தேடுவோம். இனியும் வேண்டாம் ஏரோதின் தேடல்கள். வெறுப்போம் ஏரோதின் தேடல்களை. ஏம்மில் ஏற்வோம் ஞானிகளின் தேடலை. ஆப்போதுதான் தேடிய அமைதியை தேவனில் காண்போம். அவரும் அதை எமக்கருள்வார்.  தேடுங்கள் கண்டடைவீர்கள். தேவனின் மொழி இpது. மாறவேண்டும் எம் மனங்கள் தோடவேண்டும் தேவனின் அமைதியை 

வாழ்வின் சுமைகளை மறந்து வருங்காலத்தை வசந்த காலமாக மாற்றுவோம்

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

குண்டுகள் குறிபார்ப்பதை குறைக்க தொடங்கிவிட்டன. முள்வேலிகளும் ஆமி அரண்களும் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காப்பெற் வீதிகளும் கம்பனிகளும் வரதடங்கிவிட்டன. பெண்ணிமை பேசும் பெண்களின் ஆட்சியும் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேபோன்று பல விடங்கள் மண்ணிலே உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அமைதியின் ஒரு வடிவமாக இவை உதையமானலும் மறைத்து மூடிவிட முடியாத கேவலமான நிகழ்ச்சிகளும் உதயமாகிக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எங்கள் வரலாற்றை மறந்துவிட்டோம். எங்களுக்காய் மண்ணோடு கலந்தவர்களை மறந்துவிட்டோம். உள்நாட்டுப் போரின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாவில்லை என்பதை மறந்துவிட்டோம். கடவுளில் நாம் வாழாததன் பிரதிபலிப்புக்கள் தான் இன்று மண்ணிலே அரங்கேறும் அசிங்கங்கள்: திரைமறைவில் அரங்கேறும் கருக்கலைப்புக்களும் விடுதிகளிளே நடத்தப்படும் விபச்சார செயற்பாடுகளும். வீதிகளில் அரங்கேறும் இளையவர்களின் சேட்டைகளும். கோஸ்ரி மோதல்களும். கஞ்சா கடைகளும் போதைபொருட்களின் விற்பனைகளும் மதுவிற்கும் மாதுவிற்கும் மண்டியிடும் மாணவர்களின் வாழ்வும். கள்வர்களிகன் கடையுடைப்புக்களும். இன்நெற்,உலக வலைப்பின்னலின் விழுந்து அழுகும் மனித மீன்ககும். வழிதவறிப்போகும் பிள்ளைகளை தட்டிக்கேட்க துணிவற்ற தாய்மாரின் தவிப்புக்களும். திசைமாறிப்;போகும் இளையவர்களை தட்டித்திருத்தாமல் தட்டிக்கொடுக்கும் தந்தையரின் பெருந்தன்மையும். ஆடைகுறைப்புக்கள் என்று அநாகரிகமாக வீதியில் அலைந்து பெண்மையை விலைபேசும் பெண்களின நாகரிகமும். இனங்களுக்கு இடையே 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற மோதல்கள் தீர்ந்து, அக்காயங்கள் ஆறுவதற்குள், நாட்டில் திருட்டு, வழிப்பறி, நிலங்கள் ஆக்கிரமிப்பு என்று பல்வேறு வகையான வன்முறைகள் தலையெடுத்திருப்பதும். அனைவரும் கூறும் அமைதி அரும்பிலே அழியப்போவதற்கான அறிகுறிகள். மீண்டும் எமது மண்ணிலே உருவாகப்போகும் அழிவுகளுக்கான ஆரம்பம நிலைகள்.

ஞானிகளால் ஏரோதுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியும் அதில் குழப்பமடைந்த ஏரோதும் குழந்தைகளை கொலை செய்து இயேசுவிலிருந்து தொலைவிற்கு சென்று அகில மீட்பர் கொண்டுவந்த அமைதியை காணாது மடிந்தது எமக்கு பாடமாகிறது. இறைவனின் வானதூதர்களால் இடையருக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியும் அதனால் அவர்கள் கண்ட சமதானமும் அமைதியான வாழ்வும் சான்றாகி எமக்கு நிற்க அந்த அமைதியை தொலைத்து நாம் எங்கே போகிறோம்.

இதற்கெல்லாம் ஒரு காரணம் சமாதானமும் அமைதியும் எங்கிருந்தோ வருவதாக நாம் ஊகித்துக் கொள்வதாகும். அமைதியின்மையின் வேர்கள் நம்மை தவிர வேறித்திலோ, வேறொருவரிலோ இருப்பதாக நினைத்து அவற்றை சரி செய்ய முயற்சிப்பதே. இதனால் நாம் எல்லோரும் தேடும் அமைதி இன்னும் நமக்கு கிட்டாமல் தூரமாகிக் கொண்டே போகிறது. நாம் நாடித்தேடும் அமைதி நமது எம் அகத்தில் உள்ள அகங்காரத்தையும் காமத்தையும் இச்சையையும் அடக்கி ஆழ்வதினால் கிடைக்கும் என்பதைத் கிருஷ்ணபரமாத்மாவும் குருஷேத்திரத்தில் போருக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்வது நாம் அறிந்திருக்கின்றோம். இயேசு அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்’ என்கிறார். இத்தகைய அமைதியை நம்முள் கண்டு பிறரிடத்தில் விதைத்து கிறிஸ்துவின் பிள்ளைகளாவோம்.

கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வந்து பிறந்தது கிறிஸ்தவம் என்ற மதத்தை உருவாக்க அல்ல மாறக அவரைப்போல் சிந்திக்கவும், அவரைப்போல் பிறரை அன்பு செய்யவும், பிறருக்காக உயிரைக் கூட கொடுக்க முன்வரவும், அவரைப்போல் பிறரை ஏற்றுக் கொள்ள நல்ல மனம் கொண்டவராக மாறவுமே. எம்வழி சென்று பெருமை பாரட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவும் நம்மால் பெருமை கொள்ளப் போவதில்லை. மாறாக கிறிஸ்துவின் மனம் கொண்டவர்களாய் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனென்றால் கிறிஸ்து இந்த மண்ணில் பிறந்தது மதத்தை உருவாக்க அல்ல மாறாக நல்ல மனங்களை உருவாக்கவே.

இறை நம்பிக்கை என்பதை இன்று நாம் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்யும் பகிர்தலின் தத்துவமாக்கவேண்டும். இத்தகைய இயல்புநிலையை ஏற்படுத்தும் தயாரிப்புகளில் நம்மை ஈடுபடுத்துவோம். இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தேடி போவோம். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ்வைத்தேடுவோரை மீட்டெடுப்போம். இருளைப் பகைத்துக் கொண்டும், பழித்துக் கொண்டும் வாழமால் இங்கு ஒளியை ஏற்றி வெளிச்சம் பரப்ப உறுதுணையாவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது மானுட விடுதலையின் விழா. இறைப் பகிர்வின் பாசத்தின் விழா. அன்பின் உன்னத அடயாளமாக உருவெடுத்த இறைமகன் இயேசு உலகில் பிறந்த நிகழ்வை மகிழ்வுடன் நினைவுகூரும் விழா. வாழ்வின் சுமைகளை மறந்து, அச்சுறுத்தும் கவலைகளை கழைந்து, சலித்துப்போன வாழ்க்கை சூழலைத் தவித்து, அண்டவனின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி வாழ அழைக்கும் அன்பின் திருவிழா. நம்மீட்பரின் வருகையால் மகிழ்ச்சி எல்லோருக்கும் பொதுவாக்கப்படுகின்றது. இறைமனித உறவுக்குச் சான்றுபகிர்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இது மனித நேயத்தை வழப்படுத்தும் அன்பின் விழா. இறைவன் தரும் மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து வாழ்வதில் தான் இந்த அன்பின் திருவிழா அர்த்தமுள்ளதாக மாறும்.

இறைவன் தன் மகன் வழியாக தன்னையே நமக்கு கொடுக்கின்றார். நாமும் கொடுப்பதில் இனு;புமு; பெறவேண்டும். கொடுத்து, பகிர்ந்து வாழத் துவங்கினால்தான் மனிதம் மலரும். அன்பு நிலவும், சமத்துவம், சமாதானம் ஓங்கும். எல்லா ஆண்டையும் போல இந்த ஆண்டையும் அணுகாமல் வருங்காலம் எல்லாருக்கும் வசந்த காலமாக மாற முயற்சிகளை மேற்கொள்வோம். இத்தகைய நமது முயற்சிகளாலும் அணுகுமுறைகளாலும் நாம் இறைவனின் சாயல் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். 

எமது மண்ணிலே பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் சாத்தானின் சாக்கடைகளும் அவலங்களும் கேவலங்களும் அநாகரிகங்களும் அசிஞ்கங்களும் ஆரம்பத்தில் சிதைக்க நாம் சிற்பிகளாவோம். எம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மாற்றியமைப்போம். இன்றே இதற்கான அத்திவாரம் இடுவோம். உலகிலே இயேசுவிற்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்னும் நற்செய்தி எமது மண்ணிலே ஒலிக்க செய்வோம்.


Both the question and the answer within us
M.Francisk, Catholic Freeland Journalist

The Christmas is a holy time. During this prosperous period of Advent, every one exchanges and renews their ties by sending the greeting cards in order to build an affectionate rapport among them. In this period, the birth of Christ brings a life of happiness, peace, joy, hope and prosperity to all. Even on this joyful occasion, which is the bridge for human relationships, the sorrowful crying of the innocent people can be heard.

  1. Why, this Christmas for me?
This lamentation comes from a recent prick of a conscience of a woman who indulged in pleasure by fornication and had many abortions against God’s law
     
  1. Why, this Christmas for me?
A young disheartened boy perishing by his culture and despised by his society for his addiction to drugs, blue films and politician’s alluring speeches asks this question

  1. Why, this Christmas for me?
After having been besieged with her children’s weeping for food, a poor abandoned mother who lives in the inconveniences of resettlement and in the biting cold and rain asks this question in pain.

  1. Why, this Christmas for me?
A roamer who lives in the disparity of caste and status and has no places to rest even for his weariness he is raising this voice.

  1. Why, this Christmas for me?
An orphan who lost his family in the war is craving for love raises this voice.

  1. Why, this Christmas for me?
A person who has lost his left arm in a land rights which began in seeking his own land from those who had seized it, and suffered the grudge, jealousy, envy and anger, asks this question.

  1. Why, this Christmas for me?
After having been forsaken by her relatives, an old woman in the Elders’ Home raises this painful moaning.

  1. Why, this Christmas for me?
A native of Sri Lanka who craves to experience real peace raises this question.

Like these, we can keep on counting the wretched and miserable lives of the people who are full of sorrows, pains, lamentation, anxieties and losses of lives.

However, here if we think of the life of Israel, we can notice that when they were away from God, they underwent many hardships such as invasions by kings, genocide, displacements, exiles, starvation, disparity, spite, antagonism, famine, exodus through the desert, etc. during these painful moments, they, in their hearts, felt no peace, love or harmony. They were wandering searching for a peaceful life.

They cried out their voice to God in tears “Have not we redemption, freedom, peace and happy life?” Listening to their voice, God Himself came down willingly from heaven to earth. He was born in manger to give a blissful life with peace, joy and love to His people. However, they did not allow Him to experience the joys and the delights of living. They made Him an exile in Egypt. They despised Him calling Him “Nasarean”, “The carpenter’s son”. They even gave no place to lie down and to rest. They brought disgrace on Him. He lovingly accepted this pathetic life without losing His ideal. To give the people a peaceful life, He Himself became the Prince of peace, the messenger of peace, the light of life and king of love.

When we are raising the above question: “Why, this Christmas for me?” in the same minute, we ask ourselves “why are we raising this question?” we will think and ask ourselves “what we have done to bring peace and to give peace”? Then we can clearly see that our hearts – the temple of God are with human nature- Filth, envy, jealously, anger, avarice, fornication, racism, a stubborn caste system, antagonism etc. and we realize that we have changed the temple of Holy Spirit into a den of the devil.

The humanism and human values of love, justice, and harmony, have not vanished. The Sunday preaching teaches that the helpful manner of almsgivings, affectionate sharing among the needy and charitable assistance are to be followed. We will fill our hearts with the fruits of Holy spirit- love, joy, patience, kindness, goodness, faithfulness, humility, self-control. We will change ourselves to become the messenger of peace, prince of peace, the source of light, peace and joy.  From the moment each one starts practicing  the early Christian life- ASHIPA in the parishes, no people with   Filth, envy, jealously, anger, vanity, hatred, disparity, hostility, avarice,  fornication, racism, a stubborn caste system, antagonism  will exist in our country-Sri Lanka.

The real peace we are craving for ages will take source in our hearts and fill the whole Sri Lanka. We can feel that our sorrows, worries, anxieties, and weeping will peter out from our hearts. We will experience the real peace, happiness, and love as the answer of the question we raised. Why is Christmas for me? With our eyes we can joyfully watch a new beautiful world full of love. Then this Christmas surely will put a glad indestructible impression in our hearts. Then we will peacefully celebrate the birth of Jesus Christ with cheer. 



Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff