Saturday, May 16, 2020

சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் இன்றாகும். -17.05.2020 '"

சடக்கென தட்ட செடக்கென  விழும் திரையில் அகிலத்தின் அசைவுகளை அறிய துணைபுரியும் தொலைத்தொடர்பு.

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை



சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூகதினம் இன்றாகும். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (ச.தொ.ச) International Telecommunication Union (ITU) 1865இல் உருவானது. இது நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே17ம்திகதி சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் உறுப்பினர்கள் இந்தத் தினத்தை கொண்டாடுகின்றார்கள். மனிதனுக்கு தொலைத்தொடர் ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத் திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் எவ்வாறு உதவி வருகிறது என எடுத்துக் காட்டுவதாகும். 

மக்கள் குழுக்களாக- சமூகமாக வாழத் தொடங்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள- ஒரு பந்தத்தினை ஏற்படுத்த தகவல் தொடர்பு அவசியமாயிற்று. மொழிகளோ எழுத்து வடிவமோ இல்லாத காலத்தில் உடலசைவுகள், சீட்டிகையொலி, புகை எழுப்பல், வர்ணம் தீட்டுதல் போன்றவற்றை குழுவிற்கேற்ப சமிக்ஞை மொழியில் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மன்னர்கள் முதல் மங்குனி வரை அன்றைய உலகின் மிகப்பெரிய சவால் தொலைத்தொடர்பு ஆகும்.


சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட முகவர் நிலையமாக தமது சேவையை முன்னெடுத்து வருகின்றது. பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய பயணத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் தர நிர்ணயங்களை எட்டுவதற்கான வழிமுறைகள், அதற்காக நடைமுறைபடுத்தக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது இதன் முதன்மை நோக்கமாகும். 

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்று. ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை தொலைதூரத்தில் உள்ளோருக்குப் பரிமாறி புறாக்களைப் பயன்படுத்தினான் என்கிறது வரலாறு. புகைவழி செய்தியனுப்பி குறியீடுவழியாகத் தொடர்பாடல் கொண்டு, ஊருக்கு ஊர் பறைமுழக்கம் அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று அகிலவுலகுடனும் நொடிப் பொழுதில் சுடுக்கொன தொடர்பு கொள்ள வைக்கும் புதிய ஊடகங்காளன: மின்னஞ்சல், குறுஞ்செய்திப் பரிமாற்றம், சடக்கெனத் தட்ட சுடுக்கொன தகவலைப் பரிமாற்றும் சமூக ஊடக செயலிகளின் தகவல் பரிமாற்றம், கூகுளின் போன்ற செயலிகளின் தகவல் பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே போவது வியக்க வைக்கின்றது. 

தொடர்பாடலின் வரலாற்றைப் பின்னநோக்கி பார்க்குமிடத்து நவீன தகவல் தொடர்பாடலின் வரலாறு 1450இல்ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹான்னஸ் குட்டன்பேர்க்த் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித் தது நவீன அச்சிடல் நுட்பமுறையை ஆக்கியமை வரை பின்நோக்கி செல்கின்றது எனக்குறிப்பிட்டாலும் யாரும் மறுப்பதிற்கில்லை. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோஹான்னஸ் குட்டன்பேர்க்த்தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார் என்பது பலரும் அறிந்திராத வேறு கதை. அச்சிடல் தொடர்பாடலுக்கு ஆணிவேரக அமைந்தது இவரது செயற்பாடுகளே.


செமாபோர் லைன்கள்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் 17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த செமாபோர் லைன்கள் (ளநஅயிhழசந டiநௌ) கருவிகளுடனான செயற்பாடு தொலைத்தொடர்பின் ஆரம்பம் என்று கூட கூறலாம். ஒரே நேர் கோட்டில் உயரமான கோபுரங்கள் அமைத்து அதல் கண்காணிப்பு கண்ணாடியுடன் (ராடர்கள்) அமைக்கப்பட்டிருக்கும். செமாபோரின் இயந்திரக் கைகள் அசைவுகளை வைத்து எழுத்துக்கள் கிரகிக்கப்பட்டு வாக்கியங்களாக படித்து அறிந்து கொண்டனர். பிரெஞ்சு புரட்சி நடைபெற்று கொண்டிருந்த நேரம். ஆறு நாடுகள் பிரான்ஸ் நாட்டை சுற்றி வளைத்து கொண்டது. செமாபோர் லைன்களை சுமார் 3000 மைல்களுக்கு நிறுவியதால் உள்நாட்டு விரைவான தகவல் தொடர்பிற்கு அவை பெரிதும் உதவியது. மேற்கு யூரோப்பை மாவீரன் நெப்போலியன் கைப்பற்ற அதன் செமாபோர் லைன்கள் மேல் இருந்த ஆசையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

'மோர்ஸ் கோட்" 

இதனைத்தொடர்ந்து 19நூற்றாண்டின் ஆய்வாளர்களின் குறிப்பாக சாமுவேல் எப்.பி.மோரிஸ். அலெக்ஸ்சாண்டர் கிரகம் பெல், குக்லியெல்மோ மார்க்கோணி ஆகியோரின் உன்னத செயற்பாடுகள் தொலைத் தொடர்பின் அடுத்தபடியான திருப்புமுனையாக அமைகின்றன: கம்பிவழியாக மின் சமிக்ஞை அனும்புகின்ற மின்சார வழி தந்தி தொடர்பு முறையை 1838ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். அவர்கள் கண்டறிந்தது இரண்டு தந்தி இயந்திரங்கள் மின்சார வயர்களின் உதவியுடன் இயக்கினால் பட்டன்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக அடிக்க செய்ய முடியும். அகவே இதன் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளலாம் என்பதை அறிந்தனர். உலக நாடுகள் முழுவதும் தந்தி வழி சேவையின் சமிக்கைகளை 'மோர்ஸ் கோட்" என்றே அழைத்து மோரிசை நினைவு கூர்கின்றனர். 


அலெக்ஸ்சாண்டர் கிரகம் பெல்லின் சாதனை 

கம்பிவழியாக ஒலியை அனுப்புகின்ற தொலைபேசி முறையை கிரகம்பெல் அவர்களும், கம்பி இல்லாமல் மின்சமிக்ஞைகளை அனுப்பும் தொலை ஒலிகடத்தி முறையை மார்க்கோணி அவர்களும் அறிமுகப்படுத்தி முதன்மை பெறுகின்றனர். மார்க்கோணி தனது 21 வயதில் கண்டு பிடித்த மகத்தான வாய்மொழி ஊடகமான வானொலி வகைதொகை இல்லாது உலகிக் குக்கிராமம் வரை வருடு-ஊடுருவி இன்றும் செவிப்புல ஊடகமாக கேட்போரை பரகசிக்க வைக்கின்றது. கலைஞனின் கலைத்துவமும் வினைஞனின்  கைவன்மையும் விமர்சகனின் வினைத்திறனான தெளிந்த பார்வையையும் இணைத்துக்கொண்ட நெஞ்சை விட்டகலா வானொலி இன்றும் மார்க்கோணியின் கதை பேசுகின்றது. எதைச் சொல்லலாம் என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தபின் எதையும் தவறவிடாமல் இருக்க எழுத்துச் சுவடியை தன்னகத்தே கொண்டு அது எவ் ஊடகத்தினுள் இணைக்கப்பட்டாலும் தரணியில் இன்றும் மார்க்கோணி கதை செல்லுகின்றது. 
இங்கு கிரகம் பெல்லினால் ஆரம்பித்து வைக்கப்படும் தொலைபேசிக் புத்தாக்க கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத் தைப் பெறுகின்றது. கம்பிவழியாகதந்தி முறையை மேம்படுத்த கிரகம்;பெல் எடுத்த முயற்சிகளின் உழைப்பே தொலைபேசி ஆகும். அலெக்ஸ்சாண்டர் கிரகம் பெல் தனது ஆராய்ச்சிப் பணிக்கு தோமஸ் வாட்சன் என்ற துணை ஆராய்ச்சியாளரை பணிக்கு அமர்த்தினார். இருவரும் பணிகளில் ஈடுபடும் போது தொலைப் பேசியைக் உருவாக்கினர். அலெக்ஸ்சாண்டர் கிரகம் பெல் தொலைப்பேசி கண்டுபிடிப் பான காப்பீட்டு உரிமத்தை 1876ல் பெற்றார். கிரகம் பெல் மார்ச்10, 1876அன்று தொலைபேசியில் பேசிய முதல் வார்த்தைகள்: Mr.Watson,Come here, I want to See You என்று கூறுகின்றார்கள். அவரது உதவிப்பணியாளராக இருந்த தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்திருந் தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது கிரகம்;பெல்லின் மூளையில் முழைந்த முன்யோசனையாகும். ஒரேநேரத்தில் இரு சமிக்ஞைகள் வயர் மூலம் தந்தி அனுப்ப 1875-ஆம் ஆண்டில் ஏப்ரல் 6ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்ததாக அறியமுடிகின்றது. கிரகம்; பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் வயர் மூலம் தந்தியாக பரிமாறச் செய்து காட்டினார். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலை தொடர்பின் மூலங்கள், கம்பியில்லாத்தந்தி கண்டுபிடிக்கப் பட்டதும், தொழினுட்பரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியதைக் காணலாம். இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, மோர்ட்டலோ, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம்,திறன் தொலைபேசிகள் (சூட்டிகைத்தொலை பேசி);, செய்மதித் தொடர்புகள் என விரிந்து செல்லும் கண்டுபிடிப்புக்கள் தொலைத் தொடர் புத்துறையில் மனிதன் புத்தாக்க கண்டுபிடிப்புக்களின் சாதனைச் சரித்திரங்களாகும். 

தகவல் தொடர்புப்பணிகள்

மனிதனின் தகவல் தொடர்புகள்: தனித்திருப்பவர்களிடையே இடைத் தொடர்புகளை ஏற்படுத்தல், செய்மதிப் பரிமாற்றம் செய்தல், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், அறிவித்தல் அறிவறுத்தல், பொருள்கோடல் செய்தல், பொழுதுபோக்கு காட்டல், கலை வெளிப்பாடு, வர்த்தகம், கண்காணிப்பை மேற்கொள்ளல்- முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்குஎன தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. இயற்கை அனர்த்தங் களின் போது, போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய்-கொரோணா போன்றனவற்றின் போது அறிவுறுத்தல்களை வழங்கி பொதுமக்களை முதற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க துணை புரிகின்றது. கொரோணாவின் தாக்கத்தால் உருவான ஊரடங்கு வேளையில் வறிய மக்களுக்கு நிவாரண நடவடிக்கை களை செய்வதற்குக் கூட இன்று தூக்கிச்செல்லும்; தொலைபேசி மூலம் தூரதேசத்திலிருந்தும்கூட துரித மாக மேற்கொள்ள முடிகிறன்றது. 
கணனிகள்-இணையம் தொலைத்தொடர்பில் பெரும் பங்கிளை வழங்கு கின்றன. செய்மதி மூலம் வழங்கப் படும் இணைய சேவையில்: தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப் படுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள். மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்தவலை (WWW) போன்ற பலவகையான செயலிகளின் பரிமாணங்கள் நாளுக்குநாள் நமக்கு கிடைத்துக்கொண்டே போகின்றது. மேற்குலக நாடுகளில் செய்மதி களின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன 'நெவிகேடர்"மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும். இன்று சூட்டிகைத் தொலைபேசியிலும் இச் சேவையை நாம் பெற முடிவது குறிப்பிடதக்கது.

ஜப்பானியர்களின் பங்கு

தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உறுதுணையாக உதவுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் இலத்திரனியல் துறையில் இன்று கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர்கள் என்றால் மிகையாகாது. தொலைத் தொடர்பில் ஜப்பான் படைத்துவரும் பாரிய சாதனைகள் மூலம் தொலைபேசி இலத்தி ரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி யாகும். 

உலகளவிய ரீதியில் செல்பேசி பயன்படுத்துவோர்4பில்லியனுக்கு மேல் தாண்டிவிட்டதாக ஐ.நவின் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவிக்கின்றது. கணனி மற்றும் தொடர்பாடல் செயலொளுங்குகளிற்கும்,  தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு உள்ளதை இன்று நாம் காணலாம். தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இதனை இணையம்-இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இணையம்-இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் எமக்கு கிடைத்த அதி நவீன சாதனையாகும். ஊலகில் அனைத்து நாடுகள் இந்தவலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன இன்று கூறலாம்.

புதிய-பின்நவீனதுவத் தகவல் தொடர்தொடர்பாடல்

எனவே புதிய-பின்நவீனதுவத் தகவல் தொடர்தொடர்பாடலில் இன்றிய மையாத இணையத்தைப் பற்றி இங்கு சற்று குறிப்பிடுவது சாலப் பொருத்தம். எதிர்பாராமல் எம்முடன் இணையம் என்கிற இணையற்ற தகவல் புரட்சியின் விளைவுகள் கூட இன்று யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறப்பிக்ப்பட்டது. இந்த இணையம் உலக மயமாதலைப் பின்தொடர்ந்து உலகத்தினுள் ஊடுருவிப்பரவியது. இணையம், தகவல் தொழில்நுட்பம் மற்றும்  தொலைத்தொடர்பு என்கிற இருபாரிய தொழில்நுட்பத் தொழில் துறைகள்  கைகோர்த்துக் கொண்டதால் எழிச்சிபெற்றது. ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளன. எனவேதான் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று இணையம் இன்று அழைக்கப் படுகிறது. ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாசாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தது. சந்தையை முதன்மைப்படுத்துவதற்கு மாற்றாக, பலபிற துணைக் கலாசாரங்களுக்குக்  பாலமா கவும் இணையம் இருக்கிறது. அது எம்மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விடயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஓர் ஊடகம் இதுவரை மிகச்சிறப்பாக வந்ததில்லை எனலாம். 


விரல் நுனியால் சடக்கென தட்ட செடக்கென விழும் திரையில் அகிலத்தின் அசைவுகளை இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளும் அளவு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வளர்ந்துள்ளது வியப்பே. தொலைக்காட்சியின் றிமோட் கொண்ரோளாக இன்று கைத்தொலைபேசி பயன்படுத்தப் படுமளவிற்கு சில நாடுகளில் தொலைத் தொடர்பு வளர்ந்து கொண்டிருக் கின்றது. 'எதற்கு எடுத்தூலும்  கூகுளில் பார் என்னும் தொடர்பாடல் முறைகள் இன்று எம்மத்தியில் வந்துவிட்டது: 'அதன் அர்த்தத்தை கூகுளில் கண்டு பிடி", 'கூகுள் லைட்டை போடு", 'கூகுள் நெவிகேடரைப் பார்த்து நட",'இன்றைய பருவநிலை என்ன", 'இன்றைய எனது பணிகளுக்கான அட்டவனையைப்படி" என்று எமது நாளந்த நிகழ்ச்சி நிரல் நீள்கின்றது. இப்படி ஊடகம் வழியாக பெறுநர்களின் வாழ்க்ககையில் பலைதுறைகள் மீதும் பதிப்பு நிகழ்த்தப் படுவது பரகசியமான விடயமாகும்:  பெறுநரின் நடத்தை மாற்றப் படுகின்றது. ஊடகத்தால் தனிநபர்களின் நாளாந்த நிகழ்ச்சி நிரல்கள் தீர்மானிக்கப்படுகின்றன, பெறுநரின் எண்ணங்கள் மனப்பாங்குகள் ஊடகத்தாலேயே வழிநடத்தப்படுகின்றன. இதற்கு இன்று வழியமைந்தது தொலைத்தொடர்பின் அதித வளர்ச்சியே என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். இணையதள ஜாம்பவானான கூகுள் தகவல் தொடர்புத் துறையை புதிய பரிமாணத்துக்கு எடுத்து சென்றுகொண்டு இருக்கின்றது. 


தொலைத்தொடர்பு, மனிதனுக்கு இன்று இன்றியமையாத ஒன்ன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைபின் நன்மை தீமைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது. தொலைத்தொடர்புக்கும், மக்களின் அபிவிருத் திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கியம். தொலைத்தொடர்பின் அபிவிருத்தி யானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலை தொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக்கொள்வதற்குப் பயன்படுத் தப்படுவது நாம் காண்பது கண்கூடு. இவை பாரியபிரச்சினைகளை எதிர்காலத்தில் எமதுலகில் ஏற்படுத்தி விடும் என எதிர்பார்கின்றார்கள். எது எவ்வாறா யினும் பின்நவீனத்துவ யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக தொலைதொடர்பு மாறிவிட்டதை கருத்திற் கொண்டு விழித்துக் கொள்வோம்.


உசாத்துணை நின்றவை:-
  1. https://tamil.oneindia.com/cj/puniyameen/2009/0517-world-information-society-day.html
  2. https://roar.media/tamil/main/history/a-sweet-story-of-communications/
  3. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, மின்னியக்க பத்திரிகை இயல் ஓர் அறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2005, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  4. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
  5. https://tamil.news.lk/news/political-current-affairs/item/29571-50


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff