Friday, May 22, 2020

உயிரோட்டமான வண்ணங்கள் கொண்ட கேலிச்சித்திரக் கருத்தோவியங்களைக் கண்டு களிக்க முனைவோம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டம் வல்லமை கொண்ட கேலிச் சித்திரம். அதைப் பார்த்ததும் அழுதவன் சிரிக்க ஆரம்பித்து  வைக்கின்றது, சிரித்தபடியே, அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும் எனும் சிந்தனை வரியையும் கேலிச்சித்திரம் விபரிக்கின்றது.


கேலிச்சித்திரம் பயன்படுத்தப்படும் முறை

 கேலிச்சித்திரங்கள் மொழி கடந்தவை. 'இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக் காட்டுவது கேலிச்சித்திரமாகும்". மிகைப்படுத்தல் கேலிச்சித்திரத்தின் தனிப்பண்பு. கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றம் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. 'கேலிச்சித்திரங்கள் மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றன:-
1. ஒரு நபரையோ அல்லது செயலையோ நையாண்டி செய்வது
2. ஒரு நபரையோ அல்லது செயலையோ புகழ்வது
3. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவது 

இதில் பெரும்பாலும் அவர்களை அடையாளப்படுத்துகின்ற மனித உறுப்பு களை மிகைப்படுத்திக் கிண்டல் செய்து சித்திரம் வரைவர். இதனால் வாசகர்கள் மத்தியில் இந்தவகைக் கேலிச்சித்திரம் அங்கதச்சுவைமிக்கதாக-எள்ளல் நடையைக் கண்முன்னால் காட்டும் படமாக, சுவாரசியமாக இடம் பெற்றுவருகிறது. அப்படி வெளியிடப்படும் கருத்துக்கள் மக்கள் மனதில் நன்கு பதியும்.


மேற்போந்த மூன்று வகையில் கேலிச்சித்திரங்களைப் பயன்படுத்தலாம். எனினும் சாதாரணமாகக் கேலி செய்வதற்காகத்தான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நையாண்டி கையாளப்படுகின்றது. 

நாட்டுத் தலைவர்களிடம், கற்றுத்தேர்ந்தவல்லுணர்களிடம் மக்கள் நன்றியு டையவர்களாக இருக்க அவர்களைப் பெரியவர்களாகவோ, அரிமாக்களா கவோ மனதில் பதியும் படி சித்தரித்துக் காட்டப்படுவதும் ஒரு வகையான கேலிச்சித்திரம் எனலாம்.

மக்கள் உணர்ச்சியை ஒரு குறிப்பிட்ட துறையில் தூண்டி விடுவதற்காக கேலிச்சித்திரங்கள் கையாளப்படும். வாசகர்களின் மனோபாவங்களையும், உலக ஞானத்தையும் தூண்டி விடக்கூடிய முறையில் கேலிசித்திரங்கள் வரையப்படும் கேலிச்சித்திரங்கள் மக்கள் பிரச்சினைகளை, அன்றாடம் சந்திக்கும் அல்லல்களை, அரசின் அடவடித்தனங்கள் -நடவடிக்கைகள் சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது என சிறிய சித்திரம் மூலம் உணர்த்துபவை. அவற்றை அனைவரும் இரசிப்பார்கள், அதே நேரம் அவை சொல்ல வரும் கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைக்கும். ஒரு கேலிச்சித் திரத்தால் மக்களைத் தூண்டிவிடவும் முடியும், மக்களை திசைப்படுத்தவும் முடியும்.

செய்தித்தாள்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலவரம்புக்குள் அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினை புரியுமாறு கேலிச்சித்திரங்க ளை உருவாக்குவது அவசியம். 


கேலிச்சித்திரங்களின் நோக்கம்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பத்திரிகைக் கேலிச்சித்திரங்களின் நோக்கம் நகைச்சுவையையும் கிண்டலையும் தருவதுதான், கேலிச்சித்தி ரங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் படுமோசமாக (Abysmal) கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச்சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில பல செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது. அவை சமூக மாற்றங்கள், தவறுகள், தோல்விகள், வெற்றி, சாதனைகள் மற்றும் முக்கிய சமகால நிகழ்வுகள் பற்றிய ஒரு வகையான வர்ணனையாகும்.

கேலிச்சித்திரங்களின் பேசு பொருள்

கேலிச்சித்திரங்கள் பல்வேறு பேசுபொருள்களை -உள்ளடக்கங்களை உணர்துகின்றன.  கேலிச்சித்திரங்கள அரசியல், பொருளாதாரம், இலஞ்சம், ஊழல் சமூக கலாசார விழுமியம், மிகமுக்கிய சம்பவங்கள் என பற்பல விடயங்களையும் தன்னுள் உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. கேலிச்சித்தி ரங்களாக நாளந்த நிகழ்வகள், சம்பவங்களே அதிகம் வரையப்படுகின்றன: அரசியல் மாற்றங்கள், இலஞ்சஊழல் பிரச்சினைகள், மோசடிகள், பிரபல தனி நபர்களின் நடத்தைகள், போன்ற விடயங்களை பிரதிபலிக்கும். பத்திரி கையில் பிரதான செய்திகளை பிரதிபலிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் இன்று வரையப்படுவதையும் நாம்  காணலாம் 


கருத்துருவாக்கத்திற்கான கேலிச்சித்திரங்கள்

கேலிச்சித்திரங்கள் ஊடகவும் தொடர்பாடலின் தகவல் வழங்கும் பணி (அறிவுறுத்தல் அறிவித்தல் அறிவுரை செய்தல்) நிகழ்த்தப்படுகின்றது. ஒரு பத்திரிகையின் கருத்தினை அல்லது நிலைப்பாட்டினை ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்துகின்றது. இதற்கு பக்கபலமான கருத்துக்களை வாசகர்கள் மனங்களில் விதைப்பதில் கேலிச்சித்திரங்களுக்கு காத்திரமான பங்கு இருக்கின்றன. அரசியல் கருத்துக்களை வெளியிடும் புதுவகை என்றே கூறலாம். கேலிச்சித்திரம் ஒருவகையான படைப்பாற்றலாகும். பல பக்கங் கள் எழுதி சொல்ல முடியாத ஒன்றை ஒரு கேலிச்சித்திரம் தத்துருவமாக தந்துவிடும். கேலிச்சித்திரங்கள் அடுத்தவர் இரசிக்கும் படியாகவும் அதில் ஆழமாக இடித்துரைக்கும் படியாகவும் கருத்துக்கள்- விடயங்கள் இருக்கும்.

கேலிச்சித்திரப் படங்கள் எமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் சில 

கேலிச்சித்திரம் நம் சொந்த மொழியை எவ்வாறு பேசுவது என்று நமக்குக் கற்பிக்கின்றன. கேலிச்சித்திரம் நம் வாழ்க்கையை நேர்மறையான (நேர்) வழியில் தாக்கம் செலுத்துகின்றது ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் கேலிச்சித்திரத்திடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளில் நாங்கள் பார்த்த கேலிச்சித்திரம்; இன்று நாம் எவ்வாறு உருவாக்கியிருக்கின்றோம் என எடுத்துக்காட்டும் ஏனென்றால் நாம் அனைவரும் கேலிச்சித்திரங்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அதனால்தான் கேலிச்சித்திரம்; மிகவும் முக்கியமானவை.

கேலிச்சித்திரம்; முக்கியம், ஏனென்றால் அது நம் வாழ்க்கையில் ஆரம்பத்தி லிருந்து முடிவுவரை பல விடயங்களை கற்றுக்கொடுக்கின்றன. கேலிச்சித் திரம்  சரியான வழியில் வளர உதவும் பல விடயங்களை நமக்குக் கற்பிக்கின் றன. எல்லோரும் கேலிச்சித்திரம் அனைவரும் பார்கின்றார்கள். சிறியவரோ வயதானவரோ கூட பார்க்கிறார்கள். நாம் அனைவரும் சிறியவர்களாக இருந்தபோது விடயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்கு கேலிச்சித்திரங் களும் உதவுகின்றன.



தொடரும்…

உசாத்துணை நின்றவை:-
  1. https://en.wikipedia.org/wiki/Cartoon, Accessed on  15.05.2020
  2. https://wikidiff.com/caricature/cartoon , Accessed on  15.05.2020
  3. https://www.ukessays.com/essays/media/cartoon-entertainment-is-not-only-for-kid-media-essay.php, Accessed on  15.05.2020
  4. https://www.thehindu.com/news/national/karnataka/cartoons-add-value-to-newspapers/article7884141.ece, Accessed on  15.05.2020
  5. http://www.sci-int.com/pdf/636446896679486612.pdf, Accessed on  15.05.2020
  6. https://askopinion.com/do-you-love-daily-cartoons-in-newspapers, Accessed on  15.05.2020
  7. https://ict4peace.files.wordpress.com/2011/03/madyawalokana-tamil.pdf, Accessed on  15.05.2020
  8. https://www.vikatan.com/lifestyle/kids/151108-a-story-of-walt-disney-to-create-disneyland
  9. http://14.139.13.47:8080/jspui/bitstream/10603/102770/9/09_chapter%203.pdf, Accessed on  15.05.2020
  10. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/200114/12/12_chapter%205.pdf, Accessed on  15.05.2020
  11. http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on  15.05.2020

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff