Thursday, May 14, 2020

தமிழ்த் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்


ம.பிரான்சிஸ்க் - M.A ஆசிரியர் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், யா-பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை.

சிந்தனையின் வேகத்துடன் விரைந்து சென்று எண்ணத்தில் உதிப்பதை எழுத்தில் பொறிக்கும் தட்டச்சு பொறி



தமிழ்த் தட்டச்சுப் பொறி என்றவுடனே எம் எல்லோரின் மனக்கண்முன்னே நினைவுக்கு வரும் காட்சி அர்ச்சுனின் முதல்வன் படம்தான். ஒருநாள் முதல்வராக இருந்து அரச துறையில் தவறு செய்பவர்களை கணப்பொழுதில் பணிநீக்கம் செய்வதற்கு அவர் பயன்படுத்தும் தொடர்பாடல் அலுவலக உபகரணம் இந்த தமிழ்த் தட்டச்சுப் பொறிதான். 

சிந்தனையின் வேகத்துடன் விரைந்து சென்று எண்ணத்தில் உதிப்பதை எழுத்தில் பொறிக்கும் திறமை தட்டச்சு ஒன்றினாலேயே முடியும் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் தமிழ்த் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர் யாழ்ப்பாணத் தமிழரான இராமலிங்கம் முத்தையா அவர்கள் அவார்.

தொடர்பாடற் செயற்பாட்டில் அன்று ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்கு வதற்கும் ஆங்கிலம் மொழிகளுள் அகில மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு பொறி (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள். 'ரெமிங்டன் தட்டச்சு பொறி" 1875-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சுப் பொறியை விரும்பி வாங்கினார்கள். இதனால் எண்ணக்களை எழுத்தாக எழுதுவதற்கு உபயோ கிக்கப்பட்ட ஊற்றுப் பேனாவின் உபயோகம் நளடைவில் குறைந்து சென்று கொண்டிருந்தது.

எழுதும் போது எண்ணத்துடன் எழுதுகோல் விரைந்து செல்வதில்லை. மிக விரைவாக எழுதுபவர்களால் கூட ஒரு வினாடிக்கு 20 சொற்களையே அழகாக எழுதமுடிகிறதாம். ஆனால் அச்சடிக்கும் போது சராசரியாக 40-60 வரையான சொற்களை பொறித்துவிட முடிகிறதாம். 

சிந்தனையின் வேகத்துடன் விரைந்து சென்று எண்ணத்தில் உதிப்பதை எழுத்தில் பொறிக்கும் திறமை தட்டச்சு ஒன்றினாலேயே முடியும் என்றால் அது மிகையாகாது. இந்த செயற்பாட்டால் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் இடைவெளி தோன்றுவதில்லை. இதனால் தட்டச்சுப்பொறி அன்று ஆங்கில எழுத்தாளர் களுக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. 

ஆங்கிலத்தில், தட்டச்சுப்பொறி இருந்ததால் பணி எளிமையாக இருந்தது என எண்ணிய இ.முத்தையா நிர்வகத்தில் திறமை கொண்டு சிங்கப்பூரில் செயல்பட்ட அய்ல்ஸ்பெரி என்கிற ஆங்கிலேய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் கணக்காளராக பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்தது முதல் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். தகவல்களை சுருக்கெழுத்தில் எழுதுவதை, படிப்பதை கற்றார். ஆசியா அளவிலான நடைபெற்ற சுருக்கெழுத்து போட்டியில் 1913ல் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றார்.

அவர் தமிழில் ஒரு தட்டச்சுப் பொறி இல்லாமை கண்டு சிந்திக்கத் தொடங்கினார். தமிழ் மொழியிலும் தட்டச்சுப்பொறி இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணி தீவிரமாக உழைத்தார். அதன் பலனாக தமிழ் தட்டச்சுப் பொறியையும் தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கினார். அதனாலேயே அவர் தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆனால்  தட்டச்சு பொறியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் லதாம் சோல்ஸ் ஆவார். 

வாழ்க்கை வரலாறு
இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியா ளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான இ.முத்தையா அவர்கள்.

இராமலிங்கம் முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் 1886 பெப்ரவரி 24 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் இராமலிங்கம். ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். இராமலிங்கத்திற்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் இந்த முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்ணியோவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேவேலை வாங்கித்தருவதாகச் சொல்ல அப்படியே ரெயில்வே இலாகாவில் அவரை வேலைக்கு அமர்த்தினார். சில நாள்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வணிக நிறுவனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம எழுத்தராக உயர்ந்து, 1930 வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார்.



தட்டச்சுப்பொறி இயந்திரம் உருவாக்கம்
முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை ஸ்டாண்டர்ட் பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்ப தால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப் பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது 'வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள 'வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக் கையின் சிறு விரலால் இயக்குவர்.

தமிழ் தட்டச்சுப்பொறி விற்பனை 
முதலாம் உலகப் போர் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜேர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வணிக நிறுவனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். தமிழில் தட்டச்சு இயந்திரம் 1930களில் தான் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை உருவாக்கியவர் இ.முத்தையா ஆவார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க, 'பிஜோ", 'ஐடியல்" ஆகிய 'போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே 'ஆர் ஸ்", 'எரிகோ", 'யுரேனியா", 'ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின. தற்போது வழக்கத்தில் அதிகம் வந்துவிட்ட கணினிகளில் தமிழில் ஒளியச்சு செய்யும் முறைக்கு இந்த தமிழ்த் தட்டச்சு முறைதான் முன்னோடியாகும்.

சமூக சேவைப் பணிகள் 
இராமலிங்கம் முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். அன்று தெய்வசிகாமணி ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு உழைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் அச்சாவதற்கு முன்னரே முத்தையா அவர்கள் தமது 73 ஆவது வயதில் 11.02.1959 அன்று காலமானார்.

இன்று தமிழ்த் தட்டச்சுப் பாவனை மிக அரிதாகி உள்ள போதிலும், அதன் இடத்தை நவீன கணினி பிடித்துள்ளது. கணினியில் பாவனையில் உள்ள தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளில் சில மாற்றங்கள் உள்ள போதிலும், இராமலிங்கம் முத்தையா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விசைப்பலகையே அடிப்படையாகப் பாவிக்கப்படுவது எமக்கு பெருமையே என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும் இலங்கைக் கலைத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்ட ஒரு பாடநெறியாகும். முதலில் தரம்-10இல் இருந்து மாணவர்களுக்கும் இப்பாடநெறியினை 13ம் தரம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. புத்தக வெளியீடுகளுக்கு இலங்கையில் பொறுப்பாக உள்ள இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம்-10க்கான தொடர்பாடலும் ஊடகவியற் கற்கையும் என்னும் புத்தகத்தில் (2014முதல் பதிப்பு செய்யப்பட்டு 2019 நான்காம் பதிப்புச் செய்யப்பட்டுள்ள) தகவலைப் பரிமாற்றல் ஊடக உபகரணங்கள் என பல இயந்திரங்கள்  படங்களுடன் தரப்பட்டுள்ளது ஆனால் இந்த தட்டச்சுப் பொறி இயந்திரம் தரப்படவில்லை. அல்லது அதற்கு மேல் தரங்களில் உள்ள புத்தகத்திலோ தரப்படவில்லை. இத்தகவல் பரிமாற்றல்  ஊடக உபகரணத்தை தருவதும் சலச்சிறந்தது என் கருதுகின்றோம்.   

உசாத்துனை நின்றவை:-


1.      https://onlinetyping.org/blog/invention-of-the-typewriter.php, accessed on 14.05.2020 at 14:30
2.      http://namathu.blogspot.com/2018/02/1886-24.html  , accessed on 14.05.2020 at 14:45
3.      https://www.hindutamil.in/news/opinion/columns/7964-23-1868.html , accessed on 14.05.2020 at 14:50

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff