Monday, May 18, 2020

எழுத்துலக அரிமாக்கள் எழுதும் எழுதுகோலின் அற்புதங்கள்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




மன்னன் கோல் எடுத்தல் அது செஞ்கோல், காவி உடைகாக்க தீட்சை பெற்றவன் கோல் எடுத்தால் அது துறவுக்கோல், இடையர் கோல் எடுத்தால் அது மேய்ப்பர் கோல், எண்ணற்ற எண்ணங்களை ஆட்சி செய்திட எழுத்தாளர் கோல் எடுத்தால் அது எழுது கோல்

இவ்வாறு பல கோல்கள் இந்த வியனுலகில் தோன்றினாலும் அவற்றை விழக்கி வியந்திட, விளக்கங்கள் கோரிட எழுதுகோல்தான் வேண்டும். ஒரு செய்தியை விளக்கி விரித்துரைக்கும் தகுதியோடு –அந்த எழுத்துக்கள் ஆளப்படுபவரால்-எழுத்துக்கள் ஒருகருத்து வடிவமாக ஆட்சி செய்யப்படுவதால்  எழுத்தாளர் என்ற பெயர்ச் சொல்லுடன் உலகில் வலம் வருகின்றது. 

இத்தகைய எழுத்தாளர்களின் செயல், எழுத்துத்திறன், எழுத்துக்கலை, இலக்கியப் படைப்பு, ஏட்டாக்கம், இலக்கியப்பத்திரிகை, பொருளாதார, அரசியல், அறிவியல் சார்ந்த நூற்கள், கட்டுரைகள், கவிதைகள், எழுதப்பட்ட வரலாறுகள், ஆவணங்கள். ஓர் இனத்தின், சாம்ராச்சியத்தின் பண்பாடு, நாகரிகங்களின் வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும், உணர்ச்சிகளையும், புரட்சிகளையும், முன்கூட்டியே அறிவிக்கும் நிகழ்ச்சிகளாக உலகில் இன்றும் நடமாடி வருகின்றன. 


இதைத்தான் கி.பி.1694-1778 வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு பேனாமுரைப்புரட்சி வாதியான வால்டேர்- Voltaire 'வாளின் வலிமையை விட எனது பேனாமுனை கூர்மையான பலம் வாய்ந்தது.  எனது எழுகோல் ஒரு கொடுங்கோல் சாம்ராச்சியத்தையும் அழிக்கும். ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும்" என்று எடுத்துரைத்தார். அதாவது பேனாமுனை உலகில் சமையப் பற்றின்மை சமைய நிலை, ஐயப்பாட்டு வாதக்கோட்பாட்டை உருவாக்கி பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு விதைபோன்று விழங்கியது நாமறிந்ததே. 

வால்டேர, ரூசோ, மான்டெஸ்கியூ, எழுத்துலக அரிமாக்கள், எழுதிய எழுதுகோலின் அற்புதங்கள் அந்தந்த நேரங்களில் உலகையே உலுக்கின என்றால் அவை வரலாறு படித்தோருக்கு நன்கு புரியும். வியக்கத்தக்க வகையில் பத்திரிகை எழுத்துக்கள் உலகில் பரபரப்பு ஊட்டி வருவதற்கு அவர்களைப் போன்ற பலர் காரணகத்தாக்களாக விளங்கி வருகின்றார்கள்,  


'தமிழ் இதழ்கள்; தோற்றம், வளர்ச்சி" என்ற நூலில், அ.மா. சாமி என்னும் பத்திரிகையாளர் 'ஐர்னல் ((Journal)"  என்றால் இதழ் என்று கூறுகின்றார். தமிழ் அறிஞர்கள் அந்தச் சொல்லையே நாளடைவில் பத்திரிகை, செய்தித்தாள், தாளிகை என்று குறிப்பிட்டார்கள். மேற்கண்ட சொற்களில் பத்திரிகை, செய்தித்தாள் என்ற பெயர்களே மக்கள் மனவானில் விண்மீன்களாக இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.  

பத்திரிகை-செய்தித்தாள் வெகுசனத்தொடர்பாடலில் இன்று முக்கிய இடம் பிடித்துள்ளதை நாம் அறிவோம். ஒரு ஜனநாயக சமூகத்தின் முக்கிய அங்கமாக பத்திரிகை உள்ளது. பொதுமக்கள் விரும்பிப் பார்க்கும் செய்தி விளம்பரங்கள் கருத்துக்கள் மற்றும் வேறு விடயங்களை உள்ளடக்கி தினசரி மற்றும் வாராந்தம் வெளியாகும் அச்சு ஊடகமே பத்திரிகை ஆகும். என ஒக்ஸ்பேட் அகராதி குறிப்பிடுகின்றது. இங்கு பக்கங்;கள் கட்டும் சாதனங்கள் கொண்டு இணைக்கப் பட்டிருக்காது.

பத்திரிகை என்றால் என்ன என்பதற்கு தாமஸ் ஜெபர்சனின் கூற்றை இங்கு குறிப்பிடுவதும் நல்லது: 'எங்கள் சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தது, அதை இழக்காமல் மட்டுப்படுத்த முடியாது. சிறந்த முடிவுகளை எடுக்க அவர்கள் பயன்படுத்தக்கூடிய சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் பத்திரிகை வழங்குகிறது". விக்கிப்பீடியரின் கருத்துப்படி, பத்திரிகை என்பது சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அறிக்கைகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகும். 

எனவே மேலே உள்ள வரையறைகளை நோக்கும் போது பத்திரிகை என்பது ஒரு வகையான தொடர்பு என்று சொல்வது தவறல்ல. இருப்பினும், இது பத்திரிகையாளரிடமிருந்து படிப்பவர்களுக்கு ஒரு வழி செய்தி என்ற பொருளில் மற்ற தகவல் தொடர்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதன் தனித்துவத்திற்கு மேலதிகமாக, பத்திரிகையாளர் தனது அகநிலை எண்ணங்கள் அல்லது தனிப்பட்ட கதையை விட ஒரு புறநிலை கதையைப் பற்றிய அவதானிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தகவல்களை தருகின்றார்கள்.

இவற்றை நோக்கும் போது பத்திரிகையில் பல விடயங்கள் உள்ளடக்கங் களாகக் காணப்படுகின்றன. எனவே  செய்தித்தாளின் 'உள்ளடக்கம்"என்பது யாது எனின்: செய்தித்தாளின் பக்க அமைப்பாகிய சட்டத்திற்குள் வரும் பல்வேறு வகையான செய்திகளும் மற்றும் சுவைகளும் கூடிய விடயங்களைக் கொண்ட பகுதிகளே 'உள்ளடக்கம்" என நாம் கூறிவிடலாம். இவ்வாறு பத்திரிகையில் உள்ளடங்கும் விடயங்கள் ஒவ்வொன்றும் தனித்ததன்மைகள் வாய்ந்ததாகும் அவையாவன:- 

செய்தி, ஆசிரியர்தலையங்கம், சிறப்புக்கட்டுரை, கேலிச்சித்திரம், விடயக் கட்டுரை, புகைப்படங்கள்- புகைப் படக் கட்டுரை- விளக்கங்கள், விளம்பரம், சித்திரிப்பு எழுத்துக்கள், பத்தி எழுத்துக்கள்-அறிவுரைப் பத்தி எழுத்துக்கள், சிறப்புப் பத்தி எழுத்துக்கள்,ஆசிரியருக்குரிய கடிதங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழிகாட்டி, விளையாட்டு நிகழ்வுகளின் செய்திகள், விமர்சனங்கள், திறனாய்வுகள், வானிலை அறிக்கை, சிந்திக்கத் தூண்டும் தலையங்கம், துணுக்குகள், கருத்துப்படங்கள், பல்வேறு வகை அட்டவணைகள், விளம்ப ரங்கள், வானிலை அறிக்கை, சான்றோர் வாக்குகள்- பொன்மொழிகள்- நற்சிந்தனைகள், விலைவாசி நிலவரம் முதலிய பல்வேறு வகையான குறிப்புகளும் உள்ளடக்கங்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரு பத்திரிகை முதற்பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை ஏதாவரு ஒரு பக்கத்தில் வெளிவரக்கூடிய தகவல் கட்டமைப்புக்கள் ஆகும்.

செய்திப் பத்திரிக்கையின் உள்ளடக்கத்தின் இவ்வாறு பல பகுதிகள் உள்ளடங்கினாலும் அவற்றுள் பிரதான பகுதிகளாக அமைவன: செய்தி, சிறப்புக் கட்டுரைகள், விளம்பரங்கள் என்பனவாகும் என்பதை நாம் நிலைவில் வைத்துக்கொள்ள வேண்டும்


இந்த வகையில் இன்று பலவலாகப் பேசப்படும் பத்தி எழுத்துக்கள் என்றால் என்ன என அடுத்த பிரசுரிப்பில் நோக்குவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff