அரச நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள்:-
தொடர்பாடலும் ஊடகக்கற்கையும் என்னும் கற்கைநெறியினை ஒரு மாணவர் கற்றுக் கொள்வதனால் அரச நிறுவனங்களான: மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம் பிரதேசசபை, வைத்தியசாலை, பொலீஸ் பிரிவுகள் இவற்றுடன் இன்னும் பல அரச நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள் சிலவற்றை முதலில் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்: தொடர்பாடல் மற்றும் வெளிக்களப்பணிகள் தலைவர். நிறுவனத்தின் மேலதிகாரி, நிறைவேற்றுப்பணிப்பாளர், நிறுவனமுகாமையாளர், மனிதவள முகாமை யாளர்கள், வெகுசனத் தொடர்பாடல் அதிகாரி, பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர், தகவல்தொடர்பு உத்தியோகத்தர், ஊடகத்தொடர்பு அதிகாரி,ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர், மக்கள் தொடர்பு உத்தியோ கத்தர், பொதுமக்கள் உறவுகள் நிபுணர்கள், கூட்டங்கள் ஒருங்கிணைப்பாளர், ஊடகத்திட்டமிடலாளர்,சுகாதாரகல்வியாளர்கள்-உத்தியோகத்தர்கள், ஒப்பந் தங்களை மேற்கொள்ளும் மற்றும் ஆவணமாக்கல் அதிகாரிகள், பொலீஸ் ஊடகப்பேச்சாளர், பொலீஸ் இணையச் செய்தியாளர், செய்திப் புலனாய்வாளர், ஊடகஇணைப்பாளர், முதன்மைத்தகவல் அலுவலகர்,தகவல் அலுவலகர், உதவித்தகவல் அலுவலகர், கல்லூரிகள் அபிவிருத்தி உத்தியோ கத்தர்கள். அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள், இவைதவிர அரச ஊடக நிறுவனங்களில் உள்ள வேலைவாய்புக்கள். இவற்றைவிட இன்னும் பலபதவிகள் பணிக்காக காணப்படுகின்றன: தேடுதல் பிரிவின் தலைவர், ஆய்வு உத்யோகத்தர், குடும்ப உதவித்தலைவர்,குடும்பஉதவி உத்தியோ கத்தர், மொழிபெயர்ப்பாளர், முகாமைத்துவ உதவியாளர், அபிவி ருத்தி உதவியாளர், பாதுகாப்புத்தலைவர், நிறுவன அதிகாரிகளின் தனிப்பட்ட செயலாளர்கள், இவை தவிர ஒரு பட்டதாரிக்குப் பொருத்தமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்புக்கள் போன்றன ஆகும்.
எனவேஇப்போதும்-எதிர்வரும் காலங்களில் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் என்னும் கற்கைநெறி ஊடாக இளமாணிப்பட்டம் பெற்றவர் களுக்கே இப்பதவிகளில் வேலைகள் வழங்கப்படும் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் இப்போது அரச வர்த்தகமானி அறிவித்தலில் இப்பதவிகளுக்கான தகைமைகளின் கீழ் படிப்படியாக தொடர்பாடல் இளமாணிப்பட்டம் தேவை என தெளிவாக கோரப்படுவதை நாம் காண முடிகின்றது.
தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள்:-
கற்கைநெறியினை ஒரு மாணவர் கற்றுக் கொள்வதனால் தனியார் துறைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைவாய்ப்புக்கள்: ஐ.நா சபை நிறுவனங்களின் ஊடக-தொடர்பாடல் இணைப்பாளர்கள், (இலங்கiயிலும் வெளிநாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்). மற்றும் சர்வதேச, உள்ளநாட்டு தனியார் நிறுவனங்களில் (INGOs,NGOs) மேலே அரச நிறுவனப்பதவிகளில் நாம் குறிப்பிடப்பட்டவற்றுடன் மேலதிகமாக ஊடகதிட்ட மிடலாளர், சமூகஊடக முகாமையாளர், வணிக நிருபர்கள், விற்பனைபிரதிநிதிகள், தொடர்பாடல் மற்றும் நிதிதிரட்டும் முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர், உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர், தனிப்பட்ட செயலாளர்கள். தனியார் பாடசாலை யில் ஆசிரியர்கள், இவைதவிர தனியார் ஊடக நிறுவனங்களில் உள்ள வேலைவாய்புக்கள் என்பன ஆகும்.
No comments:
Post a Comment