தொடர்பாடல் வளர்ச்சிப் போக்கு:-
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்- தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை ஆசிரியர்- யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
'எண்ணங்களை, சிந்தனைகளை, தகவல்களை, உணர்வுகளை, மற்றும் கருத்துக்களை சமிக்ஞைகள், அபினயங்கள், குரலொலி, குறியீடுகள், சைகைகள், வெளிப்படுத்தல்கள் ஊடாக ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு பரிவர்தனை செய்துகொள்வது தொடர்பாடல்" என சாதாரணமாக நாம் கூறிவிடலாம். எந்தகையான தொடர்பாடல் செயன்முறைக்கும் அடிப்படையாக மூன்று மூலக்கூறுகள்-பண்புக்கூறுகள் மிகவும் முக்கிய மானதாகிறது: அனுப்புநர், செய்தி, பெறுநர், தனித்திருக்கும் நபர்களிடையே இடைத்தொடர்புகளை ஏற்படுத்துவதே தொடர்பாடலின் அடிப்படை எனப்படுகின்றது.
இன்று தமிழில் தொடர்பாடல் என்று அழைக்கும் இந்த சொற்பதத்தை ஆங்கிலத்தில் 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து Communicationஎன்று அழைக்கின்றோம். இந்த Communication என்னும் சொற்பதம் இலத்தின் மொழியில் இருந்தும் பிரெஞ் மொழியில் இருந்தும் ஆங்கில மொழிக்குள் வந்ததாக நம்பப்படுகிறது. Communication என்ற சொற்பதம் இலத்தின் மொழியின்; இரண்டு சொற்பதங்களான:- “ “Communis (கொம்யூனியஸ்) and Communicare” (கொம்யூகெயர்) ஆகியவற்றுடன் தொடர்பு பட்டிருக்கின்றது. இங்கு “Communis” என்பது பெயர்ச்சொல்லைக் குறிக்கின்றது. இதனுடைய அர்த்தம்: பொதுவானதாக்கு அல்லது எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இடம் அல்லது பகிர்ந்து கொள்ளுதல் என்று குறிக்கின்றது. இங்கு “Communicare” என்பது வினைச்சொல்லைக் குறிக்கின்றது. இதனுடைய அர்த்தம்: பொதுவாக ஒன்றை உருவாக்குதல் ஆகும்.
பிரெஞ் மொழியில் இதனை Comunicacion என்று அழைக்கின்றோம். அறிஞர்கள் பலர் Communication என்னும் ஆங்கிலப் பதத்திற்கு வேறோரு ஆங்கிலப் பதத்தை:Community என்பதனையும் ஒப்பிட்டனர்: இது தமிழில் சமுதாயம் அல்லது சமூகம் என்று பொருள்படும். சமுதாயம் என்பது உறவுத்தொடர்பால் உருப்பொற்றிருக்கிறது என்பதனைக் கருத்தில் கொண்டும் அவர்கள் அவ்வாறு கூறியிருக்கலாம்.
கொம்யூனியஸ்- கொம்யூகெயர் என்னும் இந்த பதங்களுக்கு இன்று: பொதுவானதாக்கு,பகிர்ந்துகொள்ளல்,வெளிப்படுத்தல்,அலைவழித்தொடர்பு எனப் பொருள் கொள்ளப்படுகின்றன..
எது எவ்வாறயினும் இன்று நாம் Communication என்னும் ஆங்கிலப் பதத்திற்கு தமிழில் தொடர்பாடல் என்னும் பொருள்படும் சொல்லை பயன்படுத்து கின்றோம்.
தொடர்பாடல் எப்போது ஆரம்பித்தது எனப்தைத் திட்டவடட்மாகக் கூற முடியாது. ஆயினும் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்து தொடர்பாடல் ஆரம்பித்திருக்கும் என்று கூறலாம்.
ஆனால் 49ஆவது உலக சமூகத்தொடர்பு தினத்தில் உலகக் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சீஸ் உலக சமூகத் தொடர்பு தினச் செய்திக்காக கருத்துரைக்கும் போது பின்வருமாறு கூறுகின்றார். எம்மைத் தங்க வைக்கின்ற தாயின் வயிறானது தொடர்பாடலின் முதற் பாடசாலையாகும். இந்த தாயினதும் வயிற்றில் இருக்கும் சேயின் தொடர்பானது இறுகப் பிணைக்கப்பட்டிருப்பினும் இருவருக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. நிறைய வாக்குறுதிகளைத் தரும் இந்தச் சந்திப்பானது தொடர்பாடலின் முதல் அனுபவமாகும்.
பைபிளில் புதியேற்பாட்டில் உள்ள நூலான லூக்கா புத்தகத்தை நோக்கும் போது (லூக்காஸ்1: 39-58) பின்வரும் பகுதி தொடர்பாடலுக்கு மிக முக்கிய விடயத்தை தருகின்றது:-
இயேசுவின் தாயாரான புனித மரியாள் எலிசபேத்தை சந்தித்த நிகழ்வும் அச்சந்திப்பு நிகழ்வில் எலிசபேத்தின் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளிய நிகழ்வும் இதற்கு சான்றாகும்
மரியா புறப்பட்டு யூதா மலைநாட்டில் உள்ள ஒரு ஊருக்கு விரைந்து சென்றார். அங்கே செக்கேரியாவின் வீட்டை அடைந்து எலிசபேத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபேத் கேட்ட பொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று… என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
இந்தப் பகுதியை மேற்கோள் காட்டித் திருத்தந்தை முதலில்; தொடர் பாடலானது எப்படி உடல் மொழியுடன் இறுகப் பின்னிப் பிணைந்தது என்பதைக் காட்டுகிறார். மரியாளின் வாழ்த்தைக் கேட்டதும் எலிசபேத்தின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால்; துள்ளுகிறது. இது தனித்திருந்த மற்றவர்களைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியாகும். நாம் பிறப்பதற்கு முன்னரே கற்கின்ற இந்த மற்றவர்களைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியானது ஒருவகையில் மற்ற எல்லா தொடர்பாடல்களின் அறிகுறி யாகும். இதனாலென்னவோ தனித்திருக்கும் நபர்களிடையே இடைத் தொடர்புகளை ஏற்படுத்துவதே தொடர்பாடலின் அடிப்படை எனக் கூறுகின் றார்கள்.
தொடர்பாடல் என்பது வெறும் பேச்சை, கலந்துரையாடலை, பலவற்றைக் கேட்டலை, உரையாடுவதை, வெறும் கருத்துக்களை, உணர்வுகளைக் கருதாது, ஒன்றுபடுதல் அதாவது கருத்துக்களை– உணர்வுகளைப் பகிர்ந்து தனித்திருக்கும் நபர்களிடையே இடைத்தொடர்புகளை ஏற்படுத்தி ஒன்று படுதல், ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்தல் என்பதனைக் கருதிக்கொள்ளமுடியும்.
இதன்படி தொடர்பாடல் விருத்தியடைந்து இன்றுவரை செல்கிறது. மனிதன் தனித்து வாழ முடியாதென்பதால் கூட்டாகவே வாழ வேண்டியேற்பட்டது. ஒவ்வொருவருக்கும் இடையிலான தொடர்பு தொடர்பாடலினூடாகவே நிகழ்ந்தது. மிக அடிப்படையான தொடர்பாடல் முறைகள் தொடக்கம் நவீன தொழினுட்ப ரீதியான தொடர்பாடல் முறை வரை, தொடர்பாடல் விருத்தி யடைந்து செல்கிறது.
தொடர்பாடல் என்றால் என்ன என்பதை சமூகவியலாளர்கள், கல்வியிய லாளர்கள், அரசியலறிஞரக்ள், விஞ்ஞானிகள், வேறுதுறை சார்ந்த, அறிஞர்கள் பிற்;காலத்தில் ஆராயத் தொடங்கி அது தொடர்பான பல்வேறு எண்ணக்கருக்களை அமைக்கவும், முன்வந்தனர்.
- 'தகவல்களை, எண்ணங்களை, கருத்துக்களை, உணர்வுகளை, இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தமக்கிடையே பரிமற்றிக்கொள்ளல் தொடர்பாடல்" என்று Willam Newman and Charles Summer அறிஞர்கள் தமது கருத்தை 1977 ஆண்டு முன்வைத்தானர்.
- 'கூறுதல், கோட்டல், விளங்கிக்கொள்ளுதலின் முறையான, தொடர் சியான செயல்முறையை உள்ளடக்கியதே தொடர்பாடல்" என Louis Alexander Allen என்று தெடர்பியல் அறிஞர் தனது கருத்தை முன்வைத்தார். (இங்கு செயல் முறை என்பது வடிவமைக்கப்பட்ட ஒர் இலக்கை அடைவதற்கு தனித்துவமான ரீதியில் அமைக்கப்பட்ட படிமுறை செயல்முறை (Process ) என அழைக்கப்படும்.
அதன்படி தொடர்பாடல் என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது. தற்காலதத்தில் தொடர்பாடல் என்பது வெறும் தகவல் பரிமாற்றம் என்பதி லிருந்து வெகுதூரம் சென்றுள்ளது. ஒரு சமூகத்தைக் கையாளும் உபகர ணமாக இன்று தொடர்பாடல் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்பு வெறுப்புக்கள், கருத்துக்கள், மனப்பாங்குகள், மக்கள் கருத்துக்கள், கலாசாரங்களை மாற்றிய மைப்பதற்கு, விருதத்தி செய்வதறகு மட்டுமனறி உடைத்தெறிவதற்கும் தொடர்பாடல் இன்று பயன்படுத்தப்படுகிறது. இதன்படி தொடர்பாடற் கற்கையினை ஆழமாகக் கற்பதற்கான அத்திவாரத்தை இன்றிலிருந்தாவது இடுவது மிக முக்கியமாகும். எனவே நாம் தொடர்பாடல் பற்றி விரிவாகக் கற்றுக்கொள்ள முனைவோம்.
தொடர்பாடலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி:
தொடர்பாடலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி:
- ஆரமப் காலத்தில் சமிக்ஞைகள், குறியடுகள், அடையாளங்கள் தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
- அதனையடுத்து தீ, புகை, மேளம், நிறங்கள் என்பன தொடர்பாட லுக்காகப் பயன் படுத்தப்பட்டன.
- முதலில் மொழியும் இரண்டாவதாக அரிச்சுவடியும் மூன்றாவதாக எழுத்தும் உருவாக்கப்பட்டன.
- முதலில் பேச்சும், இரண்டாவது எழுத்தும் இடம் பெற்றது.
- இதற்குச் சமாந்தரமாக சித்திரம், உருக்கள் வரைதல் ஆரம்பமானது.
- எழுதுவதற்காக கற்பாறைகள், களிமண், தட்டுக்கள்;, ஓலைகள், பப்பிரஸ் ஓலைகள், தோல், புடவை, மரப்பட்டைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
- பிற்காலத்தில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டது.
- அச்சுக்கலை கண்டுபிடிப்பு தொடர்பாடல் வரலாற்றில் திருப்பு முனையாகும்.
- பிற்காலத்தில் அச்சுக்கலை விருத்தி, தொலைபேசி முறை, கம்பியுடன் கூடிய, கம்பியில்லாத ஒலித் தொடர்பாடல்கள், தொலைக்காட்சி மற்றும் நவீன ஊடகங்கள் தோன்றியமையால் தொடர்பாடல் விருத்திய டைந்தது செல்கிறது.
No comments:
Post a Comment