Thursday, May 14, 2020

சர்வதேச குடும்பதினம் (International Day of Family) இன்று.

துயரத்தில் அணையா அன்போடு தூணாகும் துணையாய்; தொய்வின்றி தொடர்ந்து குடும்பத்திற்கு துணைபுரிவோம். 


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், ஆ.யு. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


சர்வதேச குடும்பதினம் (International Day of Family) 15.05.2020 இன்று. குடும்ப ஒற்றுமையை முக்கியத்து வப்படுத்தி அதனை எல்லாரும் உணர வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை(ஐ.நா) 1992ஆம் ஆண்டு இத்தினத்தை பிரகண்டனப் படுத்தியது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் வைகாசி 15-நாள்  இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எவ்வகையான சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், எவரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதைச் சர்வதேச குடும்பதினம் எமக்கு வலியுறுத்துகின்றது. குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத் தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

சமுதாயத்தின் முதல் நிறுவனமானகுடும்பம் இன்று சீரழிக்கப்படுவது ஒட்டு மொத்த சமுதாயத்தின், அத்திவாரத்தையே அசைக்க செய்கிறது. இன்றைக்கு பல குடும்பங்களில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும்,தொலைக்காட்சியும், செல்போனும், இணையமும் பொன்னான நேரங்களை பொசுக்கி விடுகின்றன.அதேபோல்,பிள்ளைகள் தங்களுக்கு நேரமில்லை, க~;ரம் என்ற போர்வையில் தங்களது பெற்றோர்களையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் அவலமும் அரங்கேறுகிறது. நாம் பலநேரங்களில் பொருளாதாரத்தை மட்டுமே இன்று இலக்காக வைத்து குடும்ப செயற்பாடுகளை சீர்குலைத்து விடுகின்றோம். இங்கு பைபிளில் சீராக் புத்தகத்தில் 3ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்து: சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்; தாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும். 

வேடம் ஏற்கும் வாழ்க்கை:- 
ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு மனிதரும் இன்று குடும்பத்தில், வேலையிடத்தில், சமூகத்தில் என்ற மூன்று வேடங்களை ஏற்க நேரிடுகிறது. ஷவேலையிடத்தில், சமூகத்தில்| என்ற இரண்டும் எப்போது வேண்டுமானாலும் ஒருவருக்கு மாற்றத்திற்குள்ளாகலாம். ஆனால், இன்பத்திலும் துக்கத்திலும், சோதனையிலும் வேதனையிலும் என்றும் மாறாதது குடும்பம்தான் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது. எம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்று வேலையிடம், சமூகம் ஆகிய இரண் டும் அதிக இடத்தை எடுத்து குடும்ப உறவுகளுக்கான நேரத்தை எடுத்துக் கொள்கின்றது. இதை தவிர்க்க நாம் குடும்ப உறவுகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, அவர்களுக்குரிய நேரத்தை யும் சரியாக ஒதுக்க வேண்டும். முக்கியமாக உறவுகளை பலப்படுத்துவதற்குரிய பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். கூடிக் குலாவி ஒற்றுமையாக வாழ்வதற்கு, வேற்றுமைகளை புறந்தள்ளுவோம், 

அற்புத அமைப்பு குடும்பம்:-
குடும்ப ஒற்றுமையை உலகிற்கு முதலில் சொன்னது தமிழர்கள்தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது தமிழ் பழமொழி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது புறநாநூறு. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக நமக்குள் சந்தோ~ங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் மாபெரும் சமுத்திரம் எனலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் இன்று குழுக்கள் உருவாக்கி குடும்ப உறவுகள் கூட்டாக வாழ்கின்ற நிலையே மேலோங் கியிருப்பது வேதனைக்குரியது. பாட்டிகள், பார்க்குகள், பீச்சுகள்;, சினிமா கொட்டகைகள் என இவைகளை தாண்டி ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி உண்டென்றால் அது குடும்பத்தில் மட்டுமே என்று ஆணித்தரமாக கூறலாம். நாம் இழந்துவரும் பண்பாடுகளில் தற்போது மிக முக்கியமானது குடும்பமாகும் ஒற்றுமையும்தான். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, மனிதனுக்கு வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை என்று உறுதிபடக் கூறலாம்.  

முதியவர்களும் அடைக்கலாம் குருவியும்
இன்று தனி மனிதனின் சுதந்திரம் என்று பலர் குடும்பத்தை தவிர்த்து தனியாக வாழ முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். இதனால் பல குடும்பங்கள் சிதைந்துபோகும் நிலை உருவாகின்றது. இதனால் நாம் தனிக்குடும்ப வாழ்வில் மட்டும் விலகி நிற்க வில்லை. அன்பு, பாசம், நேசம் போன்றவற்றிலிருந்து சிறிது சிறிதாக விலகி தூரமாக போய்விடுகிறோம். முன்பு எம்குடும்ப வாழ்வில் முதியோர் இல்லம் இருந்ததா என்று வினவினால் இல்லை என்று சட்டென பதில் தரலாம். இன்றோ காணும் இடமெங்கும் முதியோர் இல்லம் முளைத்துள்ளதை வேதனையோடு கண்நோக்கும் நிலை. முதியவர்கள் இல்லதா வீட்டில் அடைக்கலாம் குருவி தங்கியிருப்பதில்லை என்று எனது ஆச்சி அன்று கூறியது இன்று என் நினைவுக்கு வருகிறது. தாத்தா, பாட்டி, என்ற வாழ்வியல் முறைமிகவும் இன்பமானது என்பதை நாம் மறந்தே போய்விட்டோம். எனவே பொருளாதார தேடலுக்காகவும் வேறு தேவைகளின் நிமிர்த்தம் பிரிந்திருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடி மகிழ்ந்து குடும்ப உறவுகளை போற்றுவோம் என இந்த சர்வதேச குடும்ப தினத்தில் உறுதியேற்போம்.


மூத்தவர்களும்  கட்டுப்பாடும் அரவணைப்பும்
முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட குடும்ப வாழ்வில் கட்டுப்பாடான வாழ்க்கை முறை மேலோங்கியிருந்தது, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கை முறை என நன்றாகவே எம் குடும்ப அமைப்பு இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன என்பது வேதனை நிறைந்த உண்மை. 
வீட்டில் மூத்தவர்கள் இருந்தால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். அரவணைப்பும், கண்டிப்பும் மிகுந்திருக்கும் அத்துடன் தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. இன்று தாயே சேயைத் தந்தைக்கு தலையிலே அடிக்கும்படியும் கூறி வளர்க்கும் நிலை கண்டு நிம்மதியிழக்கின்றோம். ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை இன்று ஏற்படுகிறது. அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், சினிமா, நண்பர் என ஆங்காங்கே திரியவும் நேரிடுகிறது. 

உறவு முறைகளைத் தெரியா குழந்தைகள்: 
எம் பிள்ளைகளில் பெரும்பாலனவர்களுக்கு  இன்று தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரிவதில்லை என்பதும் வேதனைகலந்த உண்மை.உறவினர்கள் வீட்டு விசே~ங் களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போகிடைப்பதில் லை என்கிறார்கள் பலர். இதனால் பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மனஅழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று இவர்களால் முடிவு கூட எடுக்கக்கூடத் தெரிவதில்லை. குடும்பங்களின் சுய நம்பிக்கையை வளர்த்து துன்பங்களை சகிப்புடன் எதிர் கொண்டு புத்துணர்ச் சியோடு செயற்படத் தூண்டுவதையும் இது போன்ற மக்களின் இயல்புச் சக்திகளை மேலோங்கச் செய்வதையும் இத்தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வலியுறுத்துகின்றன. பால் இன பாகுபாடின்றி, மக்களிடையே சமத்துவத்தை பேணி வளர்ப்பதையும் பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதையும் இத்தினம் வலியுறுத்துகின்றது. குடும்பத்தை நேசிப்பவர்களால்தான் தேசத்தையும் நேசிக்க முடியும். தேசத்தை நேசிக்கும்போதுதான் நாம் மக்களுடன் மனிதநேயத்துடன் பழக முடியும் என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது. 

குடும்ப தினம் என்றால், கணவன், மனைவி, குழந்தை என்று சிறு குடும்பமாக வாழ்கிறவர்களுக் கான தினம் என்று பலரும் நினைக்கிறார்கள். குடும்பம் என்பது இந்த மூன்று நான்கு பேர்கள் மட்டுமல்ல. சங்கிலித்தொடர்போல பல உறவுகளை இணைத்துச் செல்வதுதான் குடும்பமாகும். தொட்டி செடி போன்றது அல்ல குடும்பம். பல விழுதுகள் விட்டு வளரும்.  ஆலமரம் போன்றது குடும்பம். ஒரு குடும்பம் என்பதில் மூன்று தலைமுறையினராவது கலந்திருக்க வேண்டும். அந்த காலத்தில் வீடென்றால், தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, மாமா, அத்தை, அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என்று ஒன்றாக இருப்பார்கள். ஆனால், இப்போது குடும்பம் என்பது குட்டிக் கூடாரங்கள் ஆகிவிட்டது.


குடும்ப உறவுகளின் அன்பே, அணையா ஒளிவீசி வாழ்வின் துணையாய் துயர வழிகளில் தூணாகும் விளக்காய் உயர வழிகாட்டும் உணர். அன்பினை பகிர்ந்திடுவோம். உறவினை போற்றிடுவோம். உணர்வினை பகிர்ந்திடுவோம். அறத்தினை வளர்த்திடுவோம். ஆதரவு தந்திடு வோம் ஆனந்தம் கண்டிடுவோம். மனம்திறந்து சிக்கலை தீர்த்திடுவோம். சிரித்தி பழகிடுவோம். சிறப்பென வாழ்ந்திடுவோம். தூய அன்போடு தொய்வின்றி தொடர்ந்திடுவோம். குழப்பத்தை தவிர்த்திடுவோம். குலத்தினை காத்து வளர்த்திடுவோம். எனவே நல்ல குடும்பத்தை உருவாக்குவதும், இருக்கின்ற குடும்பத்தை தக்க வைத்துக் கொள்வதும் எமது கடமையாகும். நமக்கு முன் வாழ்ந்துவிட்டுச் சென்ற முன்னோர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நல்ல குடும்பங்களை அமைப்போம். 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff