வகை வகையான கேலிச்சித்திரங்களைப் பார்ப்போமா
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
கேலிச்சித்திரம் என்பது, வரைகலைஞர்கள் காட்சி வழித்தொடர்பாடலைச் செய்யக்கூடிய தயாரிப்புகளான: பத்திரிகைகள், சஞ்சிகைகள், சுவரொட்டி கள், பாரிய விளம்பர பலகைகள் போன்ற வடிவமைப்பதில் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த வினைத்திறனான விளக்கம் தரும் கருவியாகும். அடிப்படையில் ஐந்து வகையான கேலிச்சித்திர வரைபடங்கள் உள்ளன. அவை விகடக் (Gag Cartoon)கேலிச்சித்திரம் அல்லது பொக்கெட் --(Pocket Cartoon)கேலிச்சித்திரம், நகைச்சுவைத்துணுக்குக் கேலிச்சித்திரம் (Comic Strip Cartoon), உயிரியக்கம் உடையது போல தோண்றும் கேலிச்சித்திரங்கள்;((Animated Cartoon), ஆசிரியர் தலையங்க கேலிச்சித்திரம் (Editorial Cartoon), மற்றும் விளக்க-விபரித்துக்கூறும் (Illustrative Cartoon) கேலிச்சித்திரம் ஆகும். காட்சி வகைகளில் ஒவ்வொரு வகைகளும் அவற்றின் தனித்துவமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஐந்து வகையான கேலிச்சித்திரங்கள் உள்ளன:-
1. பொக்கெட் கேலிச்சித்திரம் அல்லது விகடக் கேலிச்சித்திரம் '"
பத்திரிகைகளின் முதற்பக்கத்தில் ஒரு நிலையான இடத்தைக் கொண்டு ஒரு நெடுவரியைக் (கொலம்-Column) கேலிச்சித்திரம் இது ஆகும். இந்த பொக்கெட் கேலிச்சித்திரங்கள் சாதாரன பொதுமக்களின் வாழ்க்கையியலுடன் தொடர் புபட்டதாக அமைக்கப்படுகின்றன.அவை இரக்கமுள்ள தாக, நகைச்சுவை யாக அல்லது அங்கதச்சுவையுடையதாக- நையாண்டியாக அமையலாம். இவ்வகைக் கேலிச்சித்திரங்கள் பொதுவாக ஒரு கருத்து அல்லது தோற்றப் பாட்டைக் கொண்டிருக்கும். கட்டுரைகள் அல்லது செய்திகள் பேன்றவற்றால் வழங்கப்பட்டிராத மேலதிகமான செய்தியை அல்லது தகவல்களை அவை வாசகர்களுக்கு தெரிவிக்கின்றன.
இங்கு 'விகடம்" என்பதன் கருத்து 'நகைச்சுவை" (நகைத்திறத் துணுக்கு) ஆகும். விகடம் கேலிச்சித்திரங்கள்; பொதுவாக ஒரு நெடுவரியைக் கேலிச்சித்திரம் ஆகும். இவை பொதுவாக மக்களைப் பற்றி வேடிக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கேலிச்சித்திரங்கள் மிகைப்படக் கூறுவதன் பயன்பட்டின் ஊடாக நகைச்சுவையை உருவாக்கு கின்றன. அவை பொழுதுபோக்கு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின் றன. சில நேரங்களில், அவை மனிதர்களின் களங்கங்கள் அல்லது தவறு களை முன்னிலைப்படுத்தவும் வேடிக்கையாக ஏளனம் செய்யவும் பயன்ப டுத்தப்படுகின்றன. கேலிச்சித்திரங்கள் கார்ட்டூன்களுடன் ஓர் ஒற்றை வாக்கிய தலைப்புடன் சேர்ந்து வரக்கூடும். இவ்வாக்கியம் அந்த ஒர பாத்திரத்தின் (ஒரு நபரின்) பேசப்பட்ட சொற்களாகக்கூட இருக்கலாம்.
2. அரசியல் கேலிச்சித்திரம்:
அரசியல் கேலிச்சித்திரத்தின் வரலாறு செய்தித்தாள்களின் வரலாற்றை விடப் பழையது. அரசியல் கேலிச்சித்திரம் சமகால அரசியல் முன்னேற் றங்கள் அல்லது நிகழ்வுகளை கையாள்கின்ற ஓர் ஆசிரியர் தலையங்க் கேலிச்சித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு கொஞ்சம் மக்கள் சிரிப்பதை துண்டும் விதமும் காணப்படும். அரசியல் கேலிச்சித்திரங்கள் பாரம்பரியமாக மூன்று நெடுவரிசைகளைக்கொண்டதான கேலிச்சித்தி ரங்களாக அமைக்கப்படுகின்றன. இவை எப்போதும் நகைச்சுவையானதாக அமைவதில்லை, மாறாக மிகவும் விமர்சன ரீதியானதாக அல்லது கிண்டலா னதாக-கேலியானதாக அமைக்கப்படுகின்றன. வழக்கமாக, நிகழ்வின் முக்கியத்துவம் அல்லது தாக்கத்தைப் பொறுத்து இவ்வகை கேலிச்சித்தி ரங்கள் பத்திரிகையின் முதற்பக்கத்தில் தோற்றுகின்றன. ஒரு சிறந்த அரசியல் கேலிச்சித்திரம் ஒருவரை சமகால அரசியல் எழுவினைகள் பற்றி சிந்திக்க தூண்டும் அத்துடன் அது அவருடைய கருத்தை கேலிச்சித்திரம் வரைவபரின் பார்வைப் கோணத்தின் பால் வளய வைக்க முனைகின்றது.
அரசியல் கேலிச்சித்திரங்களின் பெரும்பகுதிகள் பெரும்பாலும் இரண்டு கூறுகளைக் கொண்டவை:
- கேலிச்சித்திரம்-Caricature இது தனிநபரை மக்கள் சிரிக்கும்படி அவரது சில பாணியை மிகைப்படுதி கிண்டல் செய்வது.
- சங்கேதவழியில் (மறைமுக உசாத்துனை) வெளிப்படுத்தல்-Allusion புதிய சந்தர்ப்பம், சூழ்நிலை உருவாக்கி அதனுள் தனிமனிதன் வைக்கப்பட்டுக் காட்டப்படல் அல்லது, ஒரு சந்தர்ப்பம் அல்லது உணர்வை உருவாக்க உதபுபவை.
2.1 ஆசிரியர் தலையங்க கேலிச்சித்திரங்கள்
இவ்வகை ஆசிரியர் தலையங்க கேலிச்சித்திரங்கள் செய்தித்தாள் வெளியீட்டிற்காக தயாரிக்கப் படுகிறது. அவை ஆசிரியர் தலையங்க பக்கத்தில் ஒற்றை வரைபடங்களாகத் தோன்றுகின்றன, அவை ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் தலையங்கக் கருத்தினை மேலும் வெளிச்சம் போடப் முன்னுரிமைப்படுத்த பயன்படுகின்றன. அவை சிறுதலைப் புகளுடன் அல்லது சிறுதலைப்புகள் இல்லாமல் தோன்றக்கூடும். பல ஆசிரியர் தலையங்க கேலிச்சித்திரங்கள் அரசியல்வாதிகள், இசைக்கலை ஞர்கள் போன்ற பிரபலமானவர்களை வேடிக்கையாக்கி பார்க்கிகும் கேலிச்சித்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஆசிரியர் தலையங்க கேலிச்சித்திரங்கள் அன்றைய பிரதான ஆசிரியர் தலையங்கத்தை ஆதரித்தும் அமைக்கப்படலாம் அல்லது அன்றைய நாளுக்கான செய்தியில் வேறு சில நிகழ்வுகளையும் ஆதரித்தும் அமைக்கப்படலாம்.
3. நகைச்சுவைத் துணுக்குக் (துண்டு) கேலிச்சித்திரம்-
இந்த வகை கேலிச்சித்திரம் சிரிப்பை உண்டுபண்ணக்கூடிய துணுக்குகள் ஆகும். அவை வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. அவை பொதுவான வாசகர்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையி னருக்கு செய்தித்தாளை கவர்ச்சிகரமானதாக்கி மிக வும் கவர்ந்ததாகவும் ஆக்குகின்றன. துணுக்கு கேலிச்சித்திரம்; சமூகசெய்திகளையும் வழங்குகின் றன. இந்தவகை கேலிச்சித்திரம் செய்தித்தாள்களில் அறியப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களுடன் வழக்கமான சித்திரிப்புக்க ளுடன்; தோன்றுகின்றன. ஒரு கதையை விளக்குவதற்கு அல்லது சொல்வதற் கு இவ்வகை கேலிச்சித்திரங்கள் தொடராக சித்திரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துணுக்கும் -துண்டுக்கும் பலூனில் இணைக்கப்பட்ட எழுத்துக் களின் சொற்களைக் கொண்ட தொடரை உள்ளடக்கி இருக்கும். அவை ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் ஒன்றாக வெளியிடப்படுகின்றன.
4. உயிரியக்கம் உடையது போல தோண்றும் கேலிச்சித்திரம்
இது ஒரு சிறிய-குறுகிய, கணினிமூலம் வரையப்பட்ட கேலிச்சித்திரம் ஆயினும் இது கையால் வரையப்பட்டுள்ளது போலவே காட்சியளிக்கும். இயக்கம், நகர்வு மற்றும் செயலின் மாயையை உருவாக்க இவ்வகை கேலிச்சித்திரம் தொடராகத் தயாரிக்கப்படுகின்றன. அவை சினிமா ஒளிப்பதிவுகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை கட்புல செவிப் புல திரைகளில் வெளியிடப்படுகின்றன.
5. விளக்க-விபரித்துக் கூறும் கேலிச்சித்திரங்கள்
விளக்க கேலிச்சித்திரங்கள் குறிப்பிட்ட கருத்துக்களை நேரடியான மற்றும் எளிமையான முறையில் சித்திரிக்கின்றன-வர்ணிக்கின்றன. இந்த வகை கேலிச்சித்திரங்கள் கதைகள், கற்பித்தல் உபகரணங்கள் அல்லது விளம் பரங்களை விளக்க-வர்ணிக்க உதவுகின்றன. இவ்வகை கேசில்சித் திரங்கள் இவற்றுடன் இணைந்து வரும் எழுத்துருவை மேலும் விளக்குகின்றன. பள்ளிகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் பொதுவாக இவ்வகை கேலிச்சித்தரங்கள் காணப்படுகின்றன. இவை பாடவிடயத்தை அல்லது உள்ளடக்கத்தை விளக்க உதவுகின்றன.
தொடரும்…
உசாத்துணை நின்றவை:-
- https://ezinearticles.com/?The-Types-of-Creating-Cartoon-Drawings&id=9538498, Accessed on 15.05.2020
- http://www.angelfire.com/comics/central1/uses.html, Accessed on 15.05.2020
- https://wecommunication.blogspot.com/2018/10/importance-of-cartoons.html, Accessed on 15.05.2020
- https://hti.osu.edu/opper/editorial-cartoons-introduction, Accessed on 15.05.2020
- http://ignited.in/a/55931, Accessed on 15.05.2020
No comments:
Post a Comment