Monday, May 25, 2020

கருத்துப்படம்- அவை உணர்த்தும் கருத்து வடிவங்களுக்கேற்ப ஐந்து வகையாகப் பிரிக்கலாம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




ஆசிரியர் தலையங்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்தைக் கருத்துப்படங்கள் பெறுகின்றன. ஆசிரியர் தலையங்கத்தை இன்று எல்லோரும் விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் படத்தினை எல்லோரும் நேரமில்லதபோது அவசரம் அவசரமாகப் பார்த்துவிட்டு போகிறவர்களுக்கு பார்த்த சமயத்திலேயே புரிந்துகொள்வதற்கு கருத்துப்படம் துணைபுரிகின் றது.கருத்துப் படத்தில் கருத்துத்தான் முக்கியமானது கொடுக்கப்படு கின்றது. ஆசிரியர் தலையங்கத்திங்குப் படம் வரையப்படும்போது அது படத்தலையங்கம் எனவும் அழைக்கப்படும். 

ஆமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற ஷ பலிட்சர் விருது- Pரடவைணநச தினை வழங்கும் குழுவினர் கருத்துப்படத்திற்கு விளம்கம் தரும் போது: கருத்துப்படத்தில் தெளிவான ஒரு கருத்து இருக்கவேண்டும். படம் நன்கு மனதில் பதியத் தக்கதாக அமையவேண்டும். இது ஒரு உன்னத இலச்சியத் திற்கு அல்லது கொள்கைக்கு உதவுவதாக அருத்தல் வேண்டும் கூறுகின்றனர்

ஓன்று சேருங்கள் அல்லது செத்துமடியுங்கள். என்னும் கருத்துப்படத்தை ஷபென்சில்வேனியா கசற்| என்னும் பத்திரிகை 1754 இல்  வெளியிட்டது. ஒரு பாம்மை 8 துண்டுகளாக வெட்டி அது சிதறுண்டு இருப்பதாகக் காட்டப்பட்ட படம் அமெரிக்காவில் சிதறுண்ட கொலனிகளை குறிப்பதாக காட்டப்பட் டது. 


தமிழ்நாட்டில் பெயர்போன ஆனந்தவிகடன் இக்கருத்துப் படங்களை வெளியிடுவதில் பிரபல்யம் பெற்ற ஒரு சஞ்சிகையாகும். 

கருத்துப் படம் என்பது ஏதாவது மையக்கருத்தை மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் எளிமையான படங்களைக் கொண்டதாக இருக்கும். படத்தைப் பாப்பவர்களிடையே ஒரு கருத்தை உருவாக்குவதாகவும். சொற் குறைப்புடனும் அல்லது சொற்கள் இல்லாமலும் பொருள்செறிவுடனும் கருத்தைப் புலப்படுத்துவதாக கருத்துப்படம் அமையும் கருத்துப் படம் கேலிச்சித்திரம் (caricature) அல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ் பத்திரிகைகள் மற்றும் வாரஇதழ்களில் வெளியாகும் கருத்துப்படம் அவை வெளிப்படுத்தும் -உணர்த்தும் கருத்து வடிவங்களுக்கேற்ப ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறன. அவை:- 

1. தலையங்கக் கருத்துப்படம்
2. அரசியல் கருத்துப்படம்
3. கட்டத்திற்குள் கருத்துப்படம்
4. அட்டைப் பட கருத்துப்படம்
5. சமூகச் சிறப்புக் கருத்துப்படம்

தலையங்கக் கருத்துப்படம்:-

ஆசிரியர் தலையங்கத்தில் எழுப்பப்படும் கருத்தினையும் செய்தியையும் வாசகர்களுக்கு புரியவைப்பதற்கு வரையப்படும் கருத்துப்படம் படத்தலை யங்கக் கருத்துப்படம் அல்லது தலையங்கக் கருத்துப்படம் என அமைக்கப் படும்.

அரசியல் கருத்துப்படம்:- 

கருத்துப்படங்களில் அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் நடப்புக்களும் வரையப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் அழைக்கும் போது அது அரசியல் கருத்துப்படம் எனப்படும். 

கட்டத்திற்குள் கருத்துப்படம்:-

ஒரு குறிப்பிடப்பட்ட கருத்தினை விளக்க கட்டம் கட்டி வரையப்படும் கருத்துப்படம். கட்டக் கருத்துப்படம் அல்லது கட்டத்துள் கருத்துப் படம் எனப்படும். 



தொடரும்…

உசாத்துணை நின்றவை:-

  1. முனைவர்: .ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004.
  2. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளைபத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம்யாழ்ப்பணம்.
  3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D, Accessed on 16.05.2020
  4. http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on 19.05.2020
  5. https://www.oneindia.com/photos/daily-cartoons-57493.html#photos-1,Accessed on 25.05.2020


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff