Friday, May 15, 2020

சமூக மாற்றத்திற்கான மாற்று ஊடகம் ஒரு நோக்கு


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


ஒரு செய்தி வாசிக்கின்றவர்களின் சிந்தனையை தூண்டி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக முதலாளித்துவம் இன்று விரும்புகிறது. செய்திகளைப் படிக்கும் பெரும்பாலான மக்களின் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள் ஒருபோதும் இன்று செய்தியாவதில்லை. எனவே எதைச் செய்தியாக்க வேண்டும் எனபது இன்று நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம்.

எமது செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை இன்று அடுத்தவர் துயரம், படிப்பவருக்கு நுகர்வாக பறிமாற்றப்பட்டல் போதுமே என செயற்படுவது போல் எமக்குத் தோன்றுகின்றன. களச் செய்தி சேகரிப்பு இல்லாது-புலனாய்வு செய்தி சேகரிப்பு இல்லாது இணையத்தளத்தில் இருப்பவற்றை அப்படியே சொல்லி விட்டு தப்பிக்க அவை முனைகின்றன என்றுகூடச் எண்ணத்தோற்றுகின்றது.  

கணிசமான வாசகர்கள் உள்ள ஊடகங்கள் கூட கிடைக்கும் விளம்பர வருவாயையும்-மறை முகமாகக் கிடைக்கும் இன்னபிற சலுகைகளையும் இழக்கத்தயாராக இல்லாது பக்கச்சார்பாக செயற்படுகின்றன என்பது கண்கூடு. இந்த நிலையில் ஒரு மாற்று ஊடகத்தின் தேவை பெருவாரி யான மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர் களாக மக்களை மாற்றிவிட்டபோதும்கூட, அதே மக்கள் உண்மைக்காக ஏங்குகிறவர்களாகவும் இருக்கின் றனர் என்பதைதெரிந்தும் தெரியாதவர்கள் போல் வேடம் ஏற்கின்றார்கள். மக்களின் உண்மைக் கான ஏக்கத்தை தீர்த்து வைக்கும் முன்னெடுப்பாக செயற்பட பின்னெடுப்பாக மாறுகின்றனர்.

எப்போதெல்லாம் சமூகம் புதிய மாற்றத்துக்கு தயாராகிறதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண்கிறது என்பார்கள். தான் தெரிவுசெய்த அரசு என்ன செய்கிறது என மக்கள் கேட்பது செய்தியாகாது. இவர்கள்தான் ஹீரோக்கள் என தான் தெரிவு செய்யாத தன்னார்வலர்களுக்கு கூடுதல் கவரேஜ் ஊடகங்களில் தரப்படும் துர்ப்பாக்கி நிலை. அரசுக்கு நோகக்கூடாது என நினைக்கிறார்களா அல்லது ஊடக ஆசிரியர்களின் பானையில் உள்ளதுதான் அகப்பையில் வருகிறது என அவ்வளவுதானா, அல்லது இரண்டுமே கூடவா? என்பதை ஊடக மாணவர்களில் யாராவது ஒருவராவது ஆராய்ந்து பட்டம் வாங்குவதும் இன்று வரவேற்றத்தக்கது.  

உண்மையை, மக்களின் உணர்வுகளை, இன்னல்களை ஆதாரத்துடன் சொன்ன விதத்தை நாம் தரம் என்கிறேன். உண்மையைச் சொல்லத்தான் ஊடகங்கள் தேவை. புனைவுகளை சேர்த்து சுவாரஸ்யம் கூட்டி தரப்படுவது செய்தியாக இருக்காது. அதில் தரமும் இல்லை அறமும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களை சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக கண்காணிப்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான வெகுசன ஊடகத்தின்பணி என கற்றோர் வரையறுக்கின் றார்கள். இன்றைய ஊடகங்கள் சிவில் சமூகத்தை கைகழுவிட்டு, அதிகாரத்தோடு நெருக்கமாகி விட்டன. இதனால் மாற்று ஊடகத்தின் தேவையை அவை தானாக உருவாக்கியிருக்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக, தன்னுடைய பணியைச் செம்மையாக மாற்று ஊடகங்கள் செய்து கொண்டிருக்கிறன. துன்ப வேளையில் களச்செய்தியாளர்களை வைத்துக்கொண்டு செய்திகளை தரமுடியாத போது அது தொடர்பாக பல செய்திகளை, செய்திப்பதிவுகளை தருவது மாற்று ஊடகங்கள் எனலாம். இலாபநோக்கத்தோடு செயல்படும் வெகுஜென ஊடகத்தால் இதை நிச்சயம் செய்யமுடியாது. மக்களுக்காக செயல்படுகிறவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

எம் வாழ்வியலின் அபிவிருத்தியில் பல மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இன்று மாற்று ஊடகத்தின் தேவை அவசியமாகின்றது. வெகுஜன ஊடக அளவுக்கதியமான திணிப்பிலிருந்து விடுபட, அதிகாரிகளை நோக்கி கீழிருந்து மேலான தொடர்பாடல் முறைதான் இன்றைய கலத்தின் கட்டயதேவை என உணர்த்த, இது மக்களை செயலற்ற மந்தநிலையிலிருந்து விடுவித்து செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு செல்ல மாற்று ஊடகங்கள் இன்று அவசியமாகும் 



எமது பகுதிகளின் குறைவிருத்திச் செயற்பாடகளை மக்களிடம் கூறி அபிவிருத்தியை ஊக்குவிப் பதற்கு, அரசியல் மற்றும் சட்டஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான அறிவை மக்களிடத்தில்  ஊட்ட, ஊடகஅறத்தையும், ஊடகத்தை சரியாகப் பயன்படுத்ததலை அதை மக்களிடம் கொண்டு சேர்க்க எனப்பல்வேறு விடயங்களுக்காக மாற்றுஊடகத்தின் தேவை இன்று அவசியமாகின்றது

சாதாரண மக்களை மௌனிக்கச் செய்யும் வெகுஜன ஊடகப் போக்கிற்கும், தனியாள் உரித்துடமைக்கும் எதிராக மாற்று ஊடகம் செயற்படுகின்றது. மனிதத்தை மாண்போடும் மதிப்ப தோடுபார்த்து சமூகத்தை, சமயஆதிக்கத்தை, அதிகார வர்க்கங்களின் கட்டுப்பாடுகளிலி ருந்து எடுத்து அடித்தட்டு மக்களால் ஆளப்படுவதாக இருப்பதால் மாற்று ஊடகம் நேரடித் தன்மையுடன் சுயாதீனமாக இயங்கும் தன்மை கொண்டது.

வெகுஜன ஊடகங்கள் பல்வேறு பரிணாமங்களில் மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் மாற்று ஊடகத்தை குறிப்பாக இணையம் மற்றும் பின் நவீனத்துவ செயலிகள் மூலமான மாற்று ஊடகத்தைச்சரியாக கையாழத்தெரிந்தால் நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றம் சாத்திய மாகும்.தொடர்பாடலின் மிகப்பெரும் பரப்பைப் இன்று பிரதான வெகுஜன ஊடகங்கள் ஆக்கிர மிக்கின்றன. இந்த பிரதான வெகுஜன ஊடகத்தின் வணிக ரீதியான செயற்பாடுகள் மற்றும் இழிநிலை இதழியல் மஞ்சள் ஊடகவியல் மற்றும் ஊடகவியல் செயற்பாடுகள் என்பன மாற்று ஊடகத்தின் தேவையை எமக்கு எடுத்தியம்புகின்றன. 

ஹெபமாஸ் இனது ‘பப்ளிக் ஸ்பெயார்’ (Pரடிடiஉ ளிhநசந) என்பதனை 18 ஆம் நூற்றாண்டில் மாற்று ஊடகவியலின் தொடக்கமாக நாம் கொள்ளமுடியும். அதன் பின்னர் சமூகச்செயற்பாடுகள் ஊக்கம் பெற தொடங்கிளபோது மரபு ரீதியான பலம் பொருந்திய ஊடகங்களுக்கு எதிராக 'மாற்று ஊடகவியல்" என்ற எண்ணக்கரு 1960களில் தோற்றம் பெற்றது. இன்று ஒருவகையில் பார்த்தால் மரபு ரீதியான ஊடகவியலின் தன்மையும் அதேநேரம் நவீனத்துவ ஊடகவியலின் தன்மையும் இணைந்த ஒரு தளத்தில் நகர்கிறது எனலாம்.

எனவே இங்கு மாற்று ஊடகம் என்பதனை வரையறுத்துக் கூறுவது ஒரு மிகவும் கடிமான செயலாகும். ஆனால் நம் கற்றுக்கொண்டவற்றை வைத்து நோக்கும் போது:'பிரதான நீரோட்டத்துக்கு வெளியே செயற்படும் ஒரு வெகுஜன ஊடகப்பாணியைக் கொண்ட, மக்களின் நலனுக்காக மக்களால் தகவலறிவிப்பை முன்வைக்கும்,  ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச்செய்யக்கூடிய செயற்பாட்டை செய்யும், அதேநேரம் ஜனநாயகத் தன்மை வாய்ந்த தாகஉள்ள, வியாபார நோக்கமற்ற மற்றும் இலாபநோக்கமற்ற போக்கைக்கொண்ட  ஊடகங் களை நாம் மாற்று ஊடகங்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். . 


இந்த மாற்று ஊடகங்கள். நிறுவனமயப்பட்ட வெகுசன பாரம்பரிய ஊடகப்போக்கிலிருந்து விலகி சமுக அபிவிருத்திக் கொள்கைகளுக்காகச் செயற்படுவனவாகவும் சமூகச் வளர்ச்சி சிந்தனையில் தாக்கம் செலுத்திச் அச்சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடியதாக உள்ள ஊடகங்கள் மாற்று ஊடகங்கள் ஆகுகின்றன. அதிகாரவாத ஆதிக்கத் தன்மை கொண்ட வெகுசன ஊடகங்களுடன் போட்டியிடக்கூடிய சக்திவாய்ந்ததாக இவ் மாற்று ஊடகங்கள் இயங்குகின்றன. பிரதான வெகுஜன ஊடகங்களில் கூறப்படாத அல்லது திட்டமிட்டே கூறமுடியாததாக ஆக்கப்பட்டுள்ள பல அரசியல், சமூக, பொருளாதாரம் சார்ந்த விடயங்கள், விடுதலை நோக்கிய சிந்தனைகள் வினைத்திறனாக அதிகாகவே மாற்று ஊடகங்களில் இன்று கூறப்பட்டு வருகின்றன.

ஒஸ்குட் மற்றும் வில்பர் ஸராம் ஆகிய தொடர்பியல் அறிஞர்கள் முன்வைத்த இருவழித்தொடர்பாடலின் முக்கி அம்சக்கூறான பின்னூட்டத்தையும் அல்லது எதிர்வினையையும் உடனுக்குடன் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப பொருள்கோடல் செய்து தம்மைத் திருத்திக் கொண்டு செயற்படுத் தன்மை கொண்ட மாற்று ஊடகத்தின் தன்மை இங்கு மிக முக்கிய பண்பாக கவணிக்க வேண்டியதொன்றாகும். 

தேசத்தின் பிரதான ஊடகங்களின் நீரோட்டத்தில் உள்ள பிரதான ஊடகங்களின் உள்ளடக் கத்திலும் மாறுபட்ட உள்ளடக்கங்களை மாற்று ஊடகங்கள் தன்னகத்தேகொண்டுள்ளன.  ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை இனங்கள், தொழிலாளர்களின் குரல்கள், வன்முறைகள், இனவாதங்கள், மதம்பிடித்த சமயவாதங்கள் நிறவாதம், சாதியம், பால்நிலைச் சமமின்மை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை இந்த மாற்று ஊடகங்கள் வெளிக்கொணருகின்றன. அவற்றுக்கு எதிராக விழிப்புணர்வுகளையும்ஏற்படுத்தப்படுகின்றன.முதலாளித்துவம், நுகர்வு வாதம், சனரஞ்சகக் கலாசாரம், அங்கதசுவை மிகுவாதம், ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் போன்ற கோட்பாடுகளை எதிர்ப்பவையாகவும் இந்த மாற்று ஊடகங்கள் தொழிற்படுகின்றன. பிரதான வெகுஜன ஊடகங்கள் கவர்ச்சியைக் காசாக்கா புனைவுகளை அதிகம் கவர்ச்சிகரமாக காட்ட மாற்று ஊடகங்கள், தொடர்பியல் அறியுர் போல் டி மெசுனியரின் செய்திஅறிக்கையிடல் தத்துவத்தை-(யூடீ+ஊஸ்ரீஊ): துல்லியத்தை, நடுநிலையை, தெளிவை கொண்டு நம்மகத்தன்மையை ஏற்படுத்தக் கூடியவாறு யதார்த்தத்தை நடுநிலைமையுடன் கோடிட்டுக்காட்டுகின்றன. 



மக்களுக்கு விருப்பமானதை மட்டுமல்லாது, மக்களுக்குத் அத்தியவசியமன விடயங்களையும் உண்மைத்தன்மையுடன் வழங்குவதும் ஊடகத்தின் ஒரு பணி எனலாம். இப்பணியினை இன்று அதிகார ஆதிக்கம் கொண்ட நிலையில் உள்ள,  பணம் படைத்த முதலைகளின் அருவருடி களாக இயங்கும் வெகுஜன ஊடகங்களை விடமாற்று ஊடகங்கள் அதனைக் கைச்சிதமாகமேற் கொள்கின்றன. இதன் மூலம் சாதாரண மக்களை மாற்று ஊடகங்கள் உறுதியடைச் செய்கின்றன. பயிற்றப்பட்ட தொழில்வாண்மை உள்ள பல ஊடகவியலாளர்களைக் கொண்ட பிரதான வெகுஜன ஊடகங்களில் உள்ள பரந்த வலையமைப்புத் தன்மையினால் இன்று இலகுவில் செய்திகளைப் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மாற்று ஊடகங்களில் சாதாரன தொழில் வாண்மை குறைந்த–அற்ற தனிநபர் பங்களிப்பை அதிகம் பயன்படுத்தவேண்டிய தேவை எழுகின் றது. அனேகமான நேரத்தில் அப்பணி தனியாள் முயற்சியாகவே நகருகின்ற தன்மையையும் மாற்று ஊடகங்களில் காணலாம். ஆர்வமும் பொதுநல நாட்டமும் கொண்ட வெகுசன ஊடகங்களின் செயற்படு பெறுநர்கள் மாற்றுஊடகங்களைத் தோற்வித்து செயற்படுகின்றனர் எனவும் கூறமுடியும். தமது செயற்பாடுகள் ஊடாக சமூக மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகின்றார்கள். நிர்வாக கட்டமைப்பு மற்றும் வரம்புஎல்லைக்கு அப்பாற்பட்டு எழுதக்கூடிய இயலுமை  மாற்று ஊடகங்க ளுக்கு இருந்தாலும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களைத் தகர்த்து இயங்குதல் அளப்பெரிய சவாலாக இன்று இருக்கின்றது.

ஊடக மொழி பொதுவான மொழியாக சாதாரண மக்களகும் வினைத்திறனாக விளங்கிக் கொள்ளக் கூடிய எளிய மொழிநடையில் இருப்பது கட்டயமாகும். பலவெகுசன ஊடகங்கள் இன்று மொழி நடையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ம் தன்மையும் உள்ளது. ஆனால் பிரதே சத்திற்கு ஏற்றவாறு தெளிவான எளிய மொழிநடையைக் கொண்டு சுயாதீனமாக பிரரேச மக்களும் புரியும் மொழியைக் மாற்று ஊடகங்கள பயன்படுத்து கின்றன.

உலகளாவிய ரீதியில் வெகுசன ஊடகங்கள் மற்றும் புதிய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் சமுதாய ஊடகங்கள், சஞ்சிகைகள், வலைப்பூக்கள், யூரீப் மற்றும் இணையத்தளங்கள் என எல்லம் சமூக மாற்றத்திற்கான மாற்று ஊடகங்களாகத் தொழிற்பட்டு வருவதையும் நாம் காணலாம். முதல் வெகுசன ஊடகமான அச்சு ஊடகங்கள் அதிகம் அடித்தட்டு மக்கள் வாழும் குக்கிரமாங்களுக்கு இன்று செற்றடைவது குறைவு. ஆனால் அச்சு ஊடகங்கள்தான் அதிகம் அடித்தட்டு மக்களிடம் சென்றடைகின்றது எனலாம். பிரதான வெகுஜன ஊடகத்திற்குள்ளும் மாற்று ஊடகத்திற்கான இடைவெளி காணப்படுகின்ற தன்மையும் உள்ளது எனலாம். மக்கள் ஊடகவியலிற்கான வாய்ப்புக்களைக் வெகுசன ஊடகங்கள் வாசகர் பக்கம், வாசகர் புகைப்படம் குறைகேளிர், பத்திரிகைக்கு ஒருமடல் போன்றவற் றுக்கு ஊடாகவழங்கினாலும் மாற்று ஊடகத்திற்கு அது ஈடாகாது. வர்த்தக மற்றும் இலாப நோக்கற்ற தனிநபர்கள், தன்னார்வ நிறுவனங்கள் போன்றவற்றால் உருவாக்கப்படும் சமுதாய ஊடகங்கள் மாற்று ஊடகங்களின் தொடர்பாடலில் மகத்தாகது எனலாம். 


மாற்று ஊடகங்கள் சமுக -சமுதாய வளர்ச்சிக்கு முதுகொலும்பாக முக்கிய பங்காற்றுகின்றன. அத்துடன் சாதாரண மக்களது நாட்டாரியற்கலைகளை கிரமியக்கலைகளை, சமயக்கிரிகைகளை சம்பிரதாய செயற்பாடுகளை பறை இசைமுளக்கங்களை கச்சிதமாக சொல்லோவியங்களாக, கலர்பட ரீல்களாக எமது மனத்திரையில் காட்சிப்படுத்துகின்றன என்றால் மிகையாகது இவ்வாறு அடித்தட்டுமக்களின் இயல்பு வாழ்க்கை முறையை, தொடர்பாடல் வடிவத்தை மாற்று ஊடகமாக கொண்டு செல்ல முடியும். அதே நேரம் இந்த மாற்று ஊடகங்களிலும் சொல்லோவியங்களாக்க முடியும்.

எமதுநாட்டில் (இலங்கையில்) மாற்று ஊடகங்களுக்கான தேவை இன்று அதிகரித்து வருகின்றது ஆனால் காத்திரமான மாற்று ஊடகங்கள் என்று சொல்லுமளவிற்கு எதும் இல்லை என்றுதான் கூறலாம் பொல் தோன்றுகின்றது. மாற்று ஊடகங்களின் தேவை இன்று பெரும்பாலா வர்களின் பெருங்கனவாகவே இருக்கிறது. இது கானல் நீராகவே இருந்து விடாது நாம் சிந்திக்கவேண்டிய கட்டய நேரம். இன்று தொழில்வான்மை, ஊடக அறிக்கையிடல் ஒழுக்கம் குன்றிய ஊடகக்கல்வி அறிவு, செய்தி அறிக்கையிடல் அறிவு குறைந்த-போதிய அறிவுஅற்ற சாதாரண மக்களின் ஊடகவியல் சிலநேரங்களில் மாற்று ஊடகவியலின் அடிப்படையையே மாற்றிவிடும் அபாயத் தைக் கொண்டுள்ளதது எனக்கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமூக ஊடகங்கள் பல மாற்றுச் செயற்பா டுகளை இலங்கையில் தொடர்ந்து சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் கச்சிதமாக பணிகளை பெரியளவில் செய்யவில்லை என்று தான் கூறவேண்டும். சமூக ஊடகங்களின் அதிகரித்த பாவனையால் தனியான மாற்று ஊடகத்தின் தேவை அடிமட்ட மக்களால்கூட பெரிதாக உணரப்படாமலிருக்கிறது.

'மாற்றம், கிரவுன்ட் வியூஸ், ஜே.டி.எஸ் லங்கா மற்றும் பக்கமூனோ" போன்ற இணைய ஊடகங்கள் பிரதான வெகுசன நீரேட்டத்திலிருந்து விலகி மக்களுடைய வெளிக்கொணரப்படாத பிரச்சினைகளைப் வெளிச்சமிட முனைந்தாலும் சாதாரண மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைப் பேசக்கூடிய, எழுதக்கூடிய அடித்தட்டுமக்களுக்கான தளமாக அவைஇல்லை என்பது வேதனையே. எனவே மக்கின் பங்குபற்றல் ஊடகவியல் குற்றிய ஊடகத்தை எப்படி முற்றுமுழுதாக மாற்று ஊடகமாகக் கூறமுடியும் என்பதும் கேள்வியாகுகின்றது. அத்துடன் இம்மாற்று ஊடகங்கள் இணையத் தளத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் பின்நவீனத்துவ தொழில்நுட்பம் பற்றித் தெரியாத சாதாரணமக்களைச் சென்றடைய முடியாதனவாக இவ் ஊடகங்கள் காணப்படுகின்றதும் ஒரு பெரும் குறையே. எமது சூழமைவில் 'சரிநிகர் மற்றும் சற்றடேரிவியூ (ளுயவரசனயல சுநஎநைற) என்பன மாற்று ஊடகங்களுக்கு உதாரணமாக்க குறிப்பிடலாம். அவை காலப்போக்கில் இன்று தமது வெளியீடுகளை நிறுத்திக்கொண்டன வேதனையே.



பல்துறைசார் மாற்றத்தைச் சமூகத்தில் உருவாக்ககூடிய, அடித்தட்டு மக்களுடைய பேசப்படாத பல பிரச்சினைகளை உண்மையின் பக்கம் சாய்ந்து பேசவேண்டிய மாற்று ஊடகங்கள் அவசியம். அடித்தட்டு மக்களின் சவால்களை, துயரங்களை சோகங்களை சொல்லெண்ணக் காவியங்களை சொல்லோவியங்களான  சித்திரிக்கின்ற மாற்று ஊடகம் இன்று மகத்தனது. எனவே மாற்று ஊடகங்கள் சமூகமாற்றத்திற்கான பணியை முன்னெடுப் பதில் இன்று மேலும் வலுவாக வேண்டியது அனைவரது கடமையும் கூட. எதிர்காலத்திலும் சமூக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு ஆரோக்கியமான மாற்று ஊடகவியல் அவசியம். 

மாற்று ஊடகம் பற்றி சில சுருக்க வரையறைகள்


மாற்று ஊடகமும் எதிர்ப்பு ஊடகமும்

  • சமூகத்தின் பிராதான காணப்படுகின்ற வெகசன ஊடகங்களுக்கு எதிராகவும் சமாந்தரமாகவும் சிறப்பக்குழுக்களை அல்லது சமூகவகுப்புக்களை  மையப்படுத்தி இயங்குகின்ற ஊடகமே மற்று ஊடகம் ஆகும். 
  • பிரதான நீரோட்டத்துக்கு வெளியே செயற்படும் ஒரு வெகுஜன ஊடகப் பாணி இதில் காணப்படும் 
  • மரபுரீதியான பலம் பொருந்திய ஊடக நிறுவனஙக்ளுக் கெதிராக உருவாக்கப் படுதல்
  • இங்கு செய்திகள், பொதுவான தகவல்கள், சிறப்பம்சங்கள் முக்கியத்துவம் பெறும் ஒருவர் அல்லது சிலர் சேர்ந்து கொண்டு நடத்துதல்.
  • ஓவ்வொரு ஊடகமும் பல்வேறு கொள்கைகளை கொண்டு செயற்படுகின்றன. அதேபோல் பெறுநரும் பலவெறுபட்ட மனநிலைகளில் செய்திகளை எதிர்பார்க் கின்றான். அந்தபெறுநர் எதிர்பார்ப்பதை ஊடகம் வழங்காவிட்டால் அப்பெறுநர் மாற்றூடகத்தை நாடிச் செல்கின்றான்.
  • இவ்வூடகங்கள் பிரதான கம்பனிகளினால் நிறுவன ரீதியாக வெளியிடப்படுவதோ அல்லது விநியோகிக்கப்படுவதோ அல்ல.
  • வெறும் இலாப நோக்கிலன்றி கொள்கை விடயங்களுக்காக நடத்தப்படல்.
  • பயனாளிகள் வட்டம் சிறிதாயினும் சமூகத்தில் கூடிய செல்வாக்குச் செலுத்துதல்.
  • உள்ளடக்கம் பிரதான நீரோட்டத்தின் உள்ளடக்கத்தில் இருந்து வேறுபட்டது.
  • உலகமயமாக்கல் விரோதம், இனவாத விரோதம், சுற்றாடல் மற்றும் சிறு குழுக்க ளுடன் கருத்துகள் இவற்றில் பெருமளவில் பிரதிபலிக்கும்.
  • நவீன சமூகப் பெறுமானங்கள், அர்த்தங்கள் இதன் மூலம் சமூக மயமாக்கப் படுகின்றன.
  • நுகர்வு வாதத்துக்கும் சனரஞ்சக கலாசாரத்துக்கும் வெகுஜன கலாசாரத்துக்கும் எதிராக முன்வருதல்.
  • சமூகத்தின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்துதல்.
  • சமூகத்தை ஒரு புதிய திசையில் இட்டுச் செல்ல முயற்சித்தல்.

மாற்று ஊடகமும் பிரதான ஊடகத்திற்கும் இடையேயான வேறுபாடுகள்:- 

மாற்று ஊடகம்:  
  • சிறிய அளவிலான பெறுநர்கள் -பயனாளிகள் மட்டத்தினைக் கொண்டது
  • ஆதாயங்களை பெறும் ஆனால் அதனைப் பெறுவது பிரதான நோக்கம் அல்ல
  • சமூகத்தின் ஆபிவிருத்தி புதிய மாற்றத்தினைக் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது
  • அரசியல் குழுக்களை சார்ந்ததாகக் காணப்படாது
  • யதார்த்தமான ஊடகமாகும் 

பிரதான ஊடகம்  

  • அதிகளவிலான பெறுநர்கள் - பயனாளிகள் வட்டத்தினைக்கொண்டது 
  • வர்த்தக இலாபநோக்கத்தினை பிரதானமாகக் கொண்டது 
  • அரசியல் குழுக்களை சார்ந்ததாகக் காணப்படும்
  • ஜனரஞ்சக ஊடகமாகும்

மாற்று ஊடகங்கள் எதிர் நோக்கும் சவால்கள் 

  • பிராதான ஊடகங்களுடன் போட்டி போட்டு இயங்கவேண்டிய சூழல் காணப்படுகிறது
  • சுமூகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கு மாற்று ஊடகங்கள் செயற்படுவதால் பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பக்களை எதிர்நோக்குகிறது
  • மாற்று ஊடகங்களின் பெறுநர்கள்-பயனாளிகள் மிகக் குறைவாக இருப்பதால் வெகுசன ஊடகப் பயனாளிகளிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிரர்ப்பக்கள் ஊருவாகுகின்றன.
  • பிரதான ஊடகங்களின் போக்கிலிருந்து வேறுபட்ட செயற்பாட்டுச் செயற்படுவதனால் இதன் விற்பனை மட்டம் மற்றும் விற்பனை வீச்சு மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.
  • இவ்ஊடகங்களிற்கு அரசியல், பொருளாதார குழுக்களின் ஆதரவு மிகக் குறைவாக காணப்படுவதாலும் பல சவால்களை எதிர் நோக்குகின்றன



உசாத்துணை நின்றவைகள்
The followings were viewed on 15.05.2020
  1. https://en.wikipedia.org/wiki/Alternative_media,
  2. http://nie.lk/pdffiles/tg/t12tim42.pdf, viewed on 12.05.2017
  3. https://smallbusiness.chron.com/mainstream-vs-alternative-media-21113.html,
  4. https://libraryguides.mta.ca/alternative_media
  5. https://www.definitions.net/definition/ALTERNATIVE+MEDIA
  6. https://www.oxfordreference.com/view/10.1093/oi/authority.20110803095406512
  7. https://medium.com/real-social-post/top-10-alternative-media-list-1ed52befa70c
  8. https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/02/fourth-estate-media-right-or-wrong-2856075.html
  9. http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/alternative-media-for-social-change
  10. http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10/3579-2010-02-15-05-57-27
  11. https://www.scrippscollege.edu/hi/2001-fall/alternative-media-and-the-public-sphere
  12. https://www.researchgate.net/publication/298699054_Alternative_media_and_the_public_sphere_in_zimbabwe


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff