ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
பத்திரிகையில் உள்ளடக்கப்படக் கூடிய தகவல் கட்டமைப்புக்களுள் கேலிச்சித்திரம், கருத்துப்படம் எனும் இரண்டும் வேறுபட்ட வரைபடங்கள் இருவேறுபட்ட வடிவங்களில் உள்ள. அடுத்துவரும் பிரசுரிப்பில் கருத்துப்படம் பற்றி நோக்குவோம். இதில் கேலிச்சித்திரம் பற்றி நோக்குவோம்
கேலிச்சித்திரம்
பத்திரிகையில் உள்ளடங்கும் விடயங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை யானவை. அவற்றுள் கேலிச்சித்திரமும் ஒன்றாகும். இதனை கார்ட்டூன் என்றும் கூறுகின்றர்கள். இதன் தேற்றத்தைப் பற்றி முன்னைய பதிப்பில் நோக்கினோம்
சைகை மொழி-கட்புல சைகைகள் என்பதில் கேலிச்சித்திரங்களும் உள்ளடங்கும். தேசிய மற்றும் சர்வதேச செய்திகளுக்கு அப்பால் பத்திரிகை களிலும் கேலிச்சித்திரப் படைப்புக்கள் உள்ளடங்கும். கேலிச்சித்திரங்கள் ஊடகவும் தொடர்பாடலின் தகவல் வழங்கும் பணி நிகழ்த்தப் படுகின்றது. கேலிச்சித்திரங்கள் முக்கியமான தகவல்களை படைப்பாக்க வழிகளில் தருவனவாக இருக்கும். காலத்தின் மிகமுக்கிய நிகழ்வுகள், முதல்நாள் இடம்பெற்ற மிகமுக்கிய செய்திகள் போன்றன கேலிச்சித்திரங்களில் கருப்பொருள்களாக சித்தரிக்கப்படமுடியும். செய்திப் பத்திரிகை யொன்றில் படைப்பாக்க வழியிலான வஞ்சப் புகழ்ச்சியின் பயன்பாடு இயலுமை கொண்டதாக இக்கேலிச்சித்திரம் காணப்படும். செய்திப்பத்திரிகை ஊடக வியலாளரின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் இக்கேலிச்சித்திரம் காணப்படும். செய்திப்பத்திரிக்கையின் உள்ளடக் கத்தின் பிரதான பகுதிளில் இக்கேலிச்சித்திரம்; காணப்படாவிட்டாலும் பத்திரிகைக்கு இக்கேலிச்சித்திரம் சிறப்பான மதிப்பை சேர்க்கின்றன. ஒரு செய்திப்பத்திரிகையின் முதற்பக்கத் தில் உள்ளடக்கப்படக்கூடிய தகவல் கட்டமைப்புக்களுள் இக்கேலிச்சித்திரமும் அடங்கும். சுவர்ச்செய்திப் பத்தி ரிக்கையிலும் பயன்படுத்தக்கூடிய காட்சி வெளியீட்டு விதிகளில் கேலிச் சித்திரம் ஒன்றாகும்
நவீன ஒலி-ஒளி ஊடகம், இணையம், திரைப்படம், பல்லூடகம், விளம்பரம் என அனைத்திலும் மக்களிடம் செய்திகளைக் கொண்டு செல்வதற்கு கேலிச்சித்திரம் இன்றும் ஒரு வலுவான ஊடகமாகவே உள்ளது.
கேலிச்சித்திரங்கள் அங்கதச்சுவை (மற்றும் நித்தாஸ் சுவை) உணர்வினை அரும்ப வைக்கும் வகையில் வரையப்படுபவை. அவை பல இலச்சம் சொற்களில்; எழுதி புரியவைக்க முடியாத கருத்துக்களைக்கூட பொருள் செறிவும் நிறைந்ததாக -புதுமையாக இலகுவில் உணர்த்தி விடுகின்றன. கேலிச்சித்திரங்கள் வெகுசன அறிவுப்புப்பணியினை செய்யும் ஊடகங் களில் விசேடவிதமாக பத்திரிகைத்துறையில் பாரியளவில் இன்று வளர்ச்சி பெற்று வருகின்றன.

கேலிச்சித்திரம் வெளிப்பாட்டின் ஒரு வடிவம். இது வாசகர்கள் கண்களுக்கு விருந்தாகி சிந்தனை நரப்பை சுண்டி ஈர்க்கும் ஒரு காட்சி ஊடகம். இவ்வாறு உருவாகும் சிந்தனை அரசியல் சமூகக் கேலிச்சித்திரம் நாட்டின் மக்கள் எவ்வாறு பயனடைகின்றார்கள் என்பதனை பொருள்கோடல் செய்துகொள்வ தற்கும்-புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் வாசகர்களுக்கு உதவுகின் றன. அரசியல் கேலிச்சித்திர அமைப்பு கேலிச்சித்திரம் வரைபவரை சுற்றியுள்ள நிலைமைகiளால் ஈர்க்கப்பட்டு கேலிச்சித்திரத்தினூடாக அவர் நோக்கும்-நம்பும் விடங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
'"
ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு வேறாக இருக்க, ஒரு கேலிச்சித்திரம் வரைபவர் அரசியல் கட்சியை - நகர்வை புரிந்துகொண்டு குறித்து ஒரு நிலைமை வர்ணிக்க வேண்டும், ஆனால் அதிலிருந்து மோசமான சுவை தரப்படுவதிலிருந்து தம்மைத் தவிர்க்கவேண்டும்.
'கேலிச்சித்திரம் வரைபவர்கள்;" வாசகர்களின் மனதில் எப்போதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்து கின்றனர் என்பது ஒருசாதாரன சொல்லல்ல. அவர்கள் மிகவும் பயனுள்ள தகவற்தொடர்பாளர்கள், ஒரு சில வரிகளில், ஒரு நாளின் மிக முக்கியமான நிகழ்வை சிந்தனையைத் துண்டும் விதமாகச் சித்தரிப்பவர்கள்.
மூத்த செய்திக் கேலிச்சித்திர வரைபவர் மற்றும் கர்நாடக கேலிச்சித்திர சங்கத்தின் தலைவரக இருந்த எஸ்.வி. பத்மநாபா கூறுகிறார், 'என்னைப் பொறுத்தவரை கேலிச்சித்திரம் என்பது கவிதை வரிகளைப் போன்றது. இது ஒரு சிலவரிகளில் சிறந்த பொருளைக்-கருத்தக்களை அடுக்கடுக்காக வெளிக் கொணரும் வல்வமை கொண்டது," ஒரு சிறந்த கேலிச்சித்திரம் அது வெளிப்படுத்துவதை விட அதிகமாக விடயங்களை தன்னகத்தே மறைத்து வைக்கவேண்டும். ஒரு சிறந்த கேலிச்சித்திரம் ஒருவர் பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தங்களைத் தரவேண்டும்
கேலிச்சித்திர வரைபவர்கள்
கேலிச்சித்திர வரைபவர்கள் விசேடவிதமான திறமைகளைக் கொண்ட படைப்பாற்றல் மிக்க தைரியசாலிகள். அவர்கள் தங்களது கேலிச்சித்திர த்தின் ஊடாக, அரசியல், ஊழல் மற்றும் ஏனைய முக்கிய (உணர்ச்சியான) பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கிறார்கள். இன்று நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகளும், அபத்தங்களும், ஊழல்களும், சகிப்புத்தன்மை யின்மையும், அதிகாரத்துக்கு வெறிபோன்றவற்றிற்கு எதிரகவும்,ஆளும் அமைப்புகளை விமர்சிக்கதிறன் கொண்டவர்கள் கேலிச்சித்திரம் வரைபவர் கள்.
அங்கதச் சுவைமிக்கதாக புத்திசாதுரியமான–சரசமான–நகைச்சுவையாக-தமாசாக தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதான முறையில் வரைகின் றார்கள். இச்செயற்பாடு அவர்களின் நேர்மை மற்றும் துணிச்சலை எடுத்துக் காட்டுகின்றது.
காலம்காலமாக கேலிச்சித்திரம் வரைபவர்கள் எல்லாத்தரப்பு வாசகர்க ளையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பவர்களாக உள்ளனர். நகைச்சு வைத்திறன், கலாரசனை, கற்பனைத்திறன், படைப்பாக்கத்திறன், ஒரு வெற்றிகரமான கேலிச்சித்திரம் வரைபவர் நாளாந்த நிகழ்வுகளையும் சர்ச்சைகளையும் கூர்ந்து கவனிப்பவராகவும், பலகோணச்சிந்தனை கொண் டவராகவும் நல்ல வரை திறன், புதுப்புது எண்ணங்கள், அதைப் படங்களாக மாற்றும் திறன் ஆகியவை ஒரு கேலிச்சித்திரம் வரைபவரக்கு தேவை. கணனி அறிவும் ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு அவரது எண்ணத்தை முழுமையாக்க உதவும். ஒரு நல்ல கேலிச்சித்திரம் வரைபவருக்கு கூர்மை யான கருத்தும் ஆழமான சிந்தனையும் வினைத்திறனான தொடர்பாடலும் ஆதாரம். அந்தந்தச் சூழல்களுக்குத் ஏற்ப தன் தூரிகையால் வரைந்த கேலிச்சித்திரங்கள் வழியாக எதிர்வினை புரிபவராக இருக்கிறார். வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல கேலிச்சித்திரம் வரைபவரை சிறந்த கேலிச்சித்திரம் வரைபவராக மாற்றக்கூடியது. கேலிச்சித்திரம் வரைபவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் சம்பவத்தை புராணக் கதைகள் ஊடாக பழ மொழிகள் ஊடாக ஒப்பிட்டுச் சித்திரிப்பதன் மூலம் தமது அபிப்பிராயத்தை சுருக்கமாக வெளிக்காட்டு கின்றார்.

கேலிச்சித்திரம் மற்றும் ஆசிரியர் தலையங்கங்கள் (வேறுபாடுகள்)
ஆசிரியர் தலையங்கங்கள் ஒரு செய்தித்தாள் நிறுவனத்தினுடைய நிர்வாகத்தின் தோற்றப்பாட்டை கொண்டு பொதுவாகவே-இயல்பாகவே அதன் பக்கச்சார்புடையதாகவே உள்ளன என்பது பிரபல மான நம்பிக்கை அல்ல்து நம்பப்படுகின்றது. அதேவேளை கேலிச்சித்திரம் பக்கச்சார் பற்றதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஓர் ஆசிரியர் தலையங்கம், புத்திஜீவிகள் மற்றும் உயர்ந்தோர் கருத்தாக கருதப்படுகிறது. அதேவேளை கேலிச்சித்திரம் பற்றி இந்த விடயம் மிகவும் அரிதாகவே கூறப்படுகிறது.
பத்திரிகைகளில் நகைச்சுவைக் கீற்றுகள் இறந்து கொண்டிருக்கின்றன என்று யாரும் கூறிவிடாவண்ணம், (புகைப்படம் மற்றும் அனிமேசன் தொழில் நுட்பப்படங்கள் தொழினுட்ப உலகில் வந்திருந்தாலும்), கேலிச்சித்திரம்; செய்தித்தாள்களில் தங்களது சொந்த இடத்தைக் நிலையாக நிருபித்துக் கொண்டிருக்கின்றன. கேலிச்சித்திரம் செய்தித்தாள்களின் ஓர் ஒருங்கிணை ந்த பகுதியாகும், அவை பொதுமக்களுடைய பொதுவான கருத்தை குறையே துமின்றி கூறுகின்றன. அவை சித்திர அமைப்பைக் கொண்டதாக அல்லது எந்தவொரு முக்கிய நிகழ்வுவின் அல்லது ஆளுமையின் முன்னுரையாக கருதப்படுகின்றன. அத்துடன் வாசகர்கள் அவற்றை நிறையவே நேசிக்கிறா ர்கள்.
தொடரும்…
உசாத்துணை நின்றவை:-
- https://en.wikipedia.org/wiki/Cartoon, Accessed on 15.05.2020
- https://www.ukessays.com/essays/media/cartoon-entertainment-is-not-only-for-kid-media-essay.php, Accessed on 15.05.2020
- https://www.researchgate.net/publication/320583716_NEWSPAPER_CARTOONS_AS_NATIONAL_INTEREST_AGENDA_SETTING_TOOL-EXAMPLES_FROM_PAKISTAN, Accessed on 15.05.2020
- https://www.thehindu.com/news/national/karnataka/cartoons-add-value-to-newspapers/article7884141.ece, Accessed on 15.05.2020
- https://pdfs.semanticscholar.org/9cc9/5bc5eebbf18d483958f7b5369c8ff764c3c3.pdf, Accessed on 15.05.2020
- http://www.sci-int.com/pdf/636446896679486612.pdf, Accessed on 15.05.2020
- https://askopinion.com/do-you-love-daily-cartoons-in-newspapers, Accessed on 15.05.2020
- http://americainclass.org/sources/becomingmodern/prosperity/text1/politicalcartoons.pdf, Accessed on 15.05.2020
- https://ict4peace.files.wordpress.com/2011/03/madyawalokana-tamil.pdf, Accessed on 15.05.2020
- https://www.vikatan.com/lifestyle/kids/151108-a-story-of-walt-disney-to-create-disneyland
- http://14.139.13.47:8080/jspui/bitstream/10603/102770/9/09_chapter%203.pdf, Accessed on 15.05.2020
- https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/200114/12/12_chapter%205.pdf, Accessed on 15.05.2020
- http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on 15.05.2020
- https://doenets.lk/documents/evaluation-reports/old/29%20-Communication%20%20&%20Media%20stu.pdf, Accessed on 15.05.2020
- http://archives.thinakaran.lk/2011/01/04/_art.asp?fn=d1101041, Accessed on 15.05.2020
- http://srilankamuslims.lk/gce-al-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/, Accessed on 15.05.2020
No comments:
Post a Comment