Tuesday, November 20, 2012

பாதங்களை கழுவும் மாமன்னராய் மாறுவோம்


25.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் கிறிஸ்துவை அரசராக நினைந்து விழாக்கொண்டாடுவதற்கு தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. இன்நற்செய்தி 'கிறிஸ்துவை அரசர்" என்பதன் உட்பொருளை ஓரளவு உணர்துகின்றது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்.

நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து தேடி வந்து உலக அரசரைப் போல் அவர் இருப்பார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்றார்கள்."  கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.

இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார்து. இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்"

மூன்றாவது சம்பவம் எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிஷரூபணமானது.

நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம் கொண்ட பிலாத்து, இயேசுவிடமே நீர் அரசரா? என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டு பிடிக்கவும் பிலாத்து பயந்தார்.

ஐந்தாவது பிலாத்துவும் யூதர்களின் தலைமைக்குருக்களும் இடையில் நடந்த உரையாடல் காட்டுகின்றது: யூதரின் அரசன்  என்று எழுதவேண்டாம் மாறாக  யூதரின் அரசன் நான் என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்  என்று கேட்டுக்கொண்டனர்  பிலாத்து நான் எழுதியது எழுதியது தான் என்றான்.

'அரசர்" என்று இயேசு அழைக்கப்பட்ட ஆறவதான நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக் கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்." என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது.'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்".

சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன? உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட போது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. இயேசு தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, இயேசு அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.

இதுவரை நாம் சிந்தித்த மற்ற நிகழ்வுகளிலும் இயேசு தவறான முறையில் 'அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டு கொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால் என்னவே அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என உறுதிகூறுகின்றார் இயேசு.

இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இதுதான் அவர் நிறுவ வந்த அரசு. இதற்குதான் அவர் அரசர். இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள். இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருநாள் தான் கிறிஸ்து அரசர் பெருவிழா.

Saturday, November 17, 2012

எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை எம்மில் வளர்ப்போம்.

19.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே இயேசு இன்னும் அவரின் முதல் வருகையையின் பணியை முழுவதுமாக முடிக்கவில்லை. 'அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும் நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும் வான்வெளிக் கோள்கள் அதிரும்." இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 

இது இன்றுவரை ஒரு முடிவில்லாதப் பிரச்சினை. இயேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனித்தால்: 'இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்". அவர் எந்த ஒரு தேதியையும் உறுதியாக சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, அல்லது தமது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!
கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இயேசுவின் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மனித உருவெடுத்து, தொடர்ந்து பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு  இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார். என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம்.

இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது என வினாவினால் அது ஒரு நல்ல கேள்விதான். நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதும், நமது பணிகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றுவதுமே இரண்டாம் வருகைக்கான நமது தயாரிப்பு.

இயேசு தம் சீடர்களுக்கு இன்னுமொரு விடையத்தை கூறுகின்றார் அது நிறைவுக் காலம் பற்றியது. கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த நிறைவுகாலம் எமக்கு எதிர்காலத்தில் தான் வரும் என்கிறார் இயேசு.
இன்று நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? எப்படி அதை அறிய ஆசைப்படுகின்றோம் என்பது சுவாரிசமானதுதான். கத்தோலிக்கர்கள் என மார்புதட்டிக்கொண்டும் பங்குத்தளங்களில் உள்ள பக்திக்குழுக்களில் பைபிளை தூக்கிக்கொண்டு வேதம் ஓதியபின். கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து நல்ல சாத்திரக்காறரை நாடிச்சென்று கேட்டு தம்வாழ்வையும் மட்டுமல்லாது தம் அன்பர்களில் வாழ்வையும் பாழாக்குபவர்கள் பற்றி நாமறிவோம் அப்பப்பா இன்னும் எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். எதிர்காலம் முழுவதும் நல்ல காலம் பொறக்குது என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால் ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று பிரச்சினையில் வருத்தப்படுவோம்.
எனவே எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். எதிர்காலம் என்பதில் பிரச்சனை கூட்டமாக சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெறவேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம். இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்களான தானியேல், மாற்கு நற்செய்தியின்  இறை வார்த்தைகளைக் பகுதிகளை கேட்போம்

Wednesday, November 7, 2012

முக மலர்ச்சியைக் பெற்றுத்தரும் தான தர்மங்களைச் செய்வோம்.

11.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
அன்னை தெரசா ஒருமுறை  சொன்னார்: "புiஎந வடைட வை hரசவள " 'கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." இதனை எண்ணும்போது நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் கொடுத்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.

தன்தை வருத்தி தன்னை பாதிக்கும் அழவுக்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்திய ஏழைக் கைம்பெண்ணின் செயலை இன்று நற்செய்தி கூறுகின்றது. இதனை உற்று நோக்கிய இயேசு இதனை பாராட்டுகின்றார். ஆனால் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். அந்த கைம்பெண தன்னிடம் இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல்.

எம்மில் பலர் இன்று கடவுள் என் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று பலவெளிவேடங்களை செய்கின்றோம். இந்தக் கண்ணோட்டம் ஒரு வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் அல்லது செய்கின்றேன் நீ இவ்வளவு தாரும் என்று பேரம் பேசுகின்றோம்.  ஆனால் இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் கொடுத்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் அவள் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டிருப்பாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை.
கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற செயல் நடந்தால் அது கொடுமைதான். இதனை இயேச கண்டிக்கின்றார். இயேசு பாராட்டும் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. 'உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார்.

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தியாகம் செய்வதால் தானாக அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெரிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இன்று நற்செய்தியில் காண்கிறோம். இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவை வெளி அடையாளங்கள் கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

இயேசு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பொழுதுமே பொன்னுக்கோ பொருளுக்கோ அல்ல. மனிதனுக்கே முதலிடம், முக்கியத்துவம். ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை." பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்". பாவத்தை அல்ல, பாவியை பெரிதாக கருதுபவர். இவ்வாறு மனிதனையும் அவனது மனநிலையையும் முதன்மைப்படுத்துவதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களின் எதார்த்தமும் வெளிப்படுகிறது. தியாகம், காணிக்கை, பிறருக்குக் கொடுத்தல் இவற்றின் உட்பொருள், உள் நோக்கம் இவற்றை உணரமுடிகிறது. தன்னில் ஒரு தாக்கத்தை, இழப்பை ஏற்படுத்தாத எச்செயலையும் தியாகம், காணிக்கை என்று கணிக்கமுடியாது. ஏழைக் கைம்பெண் தன்  வறுமையில் இருந்த அனைத்தையும் போட்டாள். இது தியாகம். பணக்காரன் பல கோடியில் பல இலட்ஷத்தில் பலரும் பாராட்டும் மண்டபம் கட்டுவதில் என்ன தியாகம் இருக்கிறது என்பது இயேசுவின் பாராட்டில் புதைந்திருக்கும் பூதாகாரமான கேள்வி. இந்த கேள்வியின் பதிலே சம தர்ம சமூகத்தின் வாழ்வாதாரம். இதுவே இயேசு விரும்பும் காணிக்கை, தியாகம்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும்.

Wednesday, October 31, 2012

அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

04.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா,நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை நம்மிடையே தலைதூக்குகின்றமையை நாம் பல தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.

இயேசுவுக்கும் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசுவிடம் தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் மறைநூல் அறிஞருள் ஒருவரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு என்ன அருமையான ஒரு பதில் சொல்கிறார். இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதிலாகின்றது. மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் கடந்தும் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டவரிடம் இயேசு, உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. 

கத்தோலிக்க சமயம் இரண்டு முக்கிய விடயங்களை கத்தோலிக்கர்களாகிய நமக்கு வலியுறுத்துகிறது. முதலாவது முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்வது. இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல நம் அயலானை நேசிப்பது. அதற்கு இந்த இரண்டு விடயங்களும் வழிவகுக்கின்றன. இறைவனை நேசிப்பது என்பது எல்லோராலும் மேற்கொள்ளப்படும் விடயம்தான். எனினும் நாம் நம் அயலானை நேசிப்பதென்பது அதுவும் நம்மை நாம் நேசிப்பது போன்றே அயலானையும் நேசிப்பது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இங்கு முதலில் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் கேள்வி:  நம் அயலான் என்பவன் யார்? என்பதுதான்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் அல்லது அடுத்திருப்பவர் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்;லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

எனவே என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருந்தும்;, நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம். 'இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி புநழசபந ஊயசடin என்னும் அறிஞர் கூறியுள்ளார்.

'என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான். கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

மேலும் அயலான் என்பவன் யார் என்பதை இயேசு நல்ல சமாரியன் உவமை மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் உதவுபவன் உதவிக்காக காத்திருப்பவன் அயலான். இயேசு குறிப்பிடுகின்ற அயலானாக நாம் இருக்கின்றோமா? அடுத்தவர் அன்பைப் பற்றி சமய உலகம் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இன்று பேசி வருகின்றனர். அயலானை இனம் காண்போம் அன்பு செயல்கள் ஆற்றுவோம்.

Wednesday, October 24, 2012

'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என எவராவது கேட்கமாட்டார்களா என்று ஏங்குவோருக்கு எங்கள் பதில் என்ன?

 28.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும்.  இதனை விளக்க ஒரு சிறு கதை: கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வருகிறார்கள். தினமும் கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி, துணிகளைக் காய வைப்பதைப் பார்ப்பார். பின்பு கணவனிடம் அந்தபெண்ணுக்கு சரியா துணி துவைக்கத் தெரியவில்லை துவைச்ச பின்பு பாருங்கோ எவ்வளவு அழுக்கா இருக்கு என முறையிடுகிறார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் மனைவிக்கு ஒரே ஆச்சரியம். கணவன் வந்ததும் மனைவி சொன்னார்: 'அங்கே பாருங்கோ. நான் மூன்று நாளாக சொல்லிகிட்டிருந்தது அவளுக்கு காதுல கேட்டிருக்கு என நினைக்கிறேன். இன்று அந்தத் துணியெல்லாம் சுத்தமா துவைக்கப்பட்டிருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக 'அடுத்த வீட்டுலே ஒன்றும் குறையேயில்ல. இன்று எம்முடைய ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.


இன்று நற்செய்தியில் கதாநாயகன் பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு. அவர் இயேசுவிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்: 'ரபூணி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்". அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும். தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும். பார்வையற்றவராக இருந்தபோதிலும் அவர் இயேசுவை உண்மையிலேயே 'பார்க்கின்றார்". எரிக்கோ நகரத்து நடை பாதையை மாளிகையாக்கி அதன் வழியே வருவோர் போவோர் கொடுத்த உணவையும் பணத்தையும் நம்பிவாழும் அவனிடம் கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அவன் அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான். பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தி நிறைவைத் தேடினான். எனவே நாமும் பார்வை பெற வேண்டும். அடுத்தவரைச் சரியான உண்மையான கண்ணோட்டத்தில் காண இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

பெரிய மனிதன் செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு பணிவடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இறைவன் இயேசு ஒரு செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர் இருந்தும் 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"என்று பாதையோரம்; படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா? இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து விழிநீருடன் எங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு எங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். அப்போது நம்மிடம் இயேசு அதே வார்த்தை கேட்பார்.

 கத்தோலிக்க சமயம் வலியுறுத்தும் ஒரு பண்பு சீடத்துவம். ஆனால் இன்றைய நாட்களில் இச் சீடத்துவம் குறைந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துச் செல்வதைக் காண்கிறோம். பக்தர்கள் கூட்டத்தினால் இறையரசுப் பணியில் எந்தப் பங்களிப்பும் இல்லை என்றே கூறவேண்டும். இயேசு எருசலேமை நோக்கிப் போகிறார். தான் சாவைக் குறித்து கடைசியாக கூறி விட்டார். இவை எல்லாம் தெரிந்தும் அதே பாதையில் சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் பர்த்திமேயு என்ற மனிதன். இவன் இயேசு கூறிய பின்பற்றுதலின் இலக்கணமாகின்றான். 'ஒருவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் " என்ற வாக்கு இம்மனிதனின் வாழ்வில் நியமாகிறது. இது தான் சீடத்துவம். சீடர்களை உருவாக்கும் திருப்பணியாளர்களாக மாறி நாமும் சீடர்களாக மாறுவோம்.

ஒரு குருடன் அல்லது அங்கவீனரான ஒருவன் இறைவனை நல்லவர் என்றோ, அவர் இரக்கமுள்ளவரென்றோ ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவனோ இறைவனின் இரக்கத்தை வாஞ்சித்து கதறினான். அந்தக் கதறலைக் கேட்ட இயேசு அவனை அழைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவன் இயேசுவின் அழைப்பைக்கேட்டவுடன் தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு அவரிடம் வந்தான். சிலுவையின் பாதையில் மரணத்தின் பாதையில் துணிவோடு நடக்கின்றான் கண்பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை அடையாளம் 'கண்டுகொண்டார்" நாமும் இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம். அப்போது புதிதாகப் பார்வைபெற்ற பர்த்திமேயுவைப் போன்று நாமும் புதுப் பார்வை பெற்ற மனிதர்களாக மாறுவோம்; பார்வைகளைச் சீர்படுத்தி வாழ்கைப் பாதையை வளப்படுத்துவோம். இயேசுவோடு 'வழி நடந்து செல்ல" முன்வருவோம்.

Sunday, October 21, 2012

நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா? தேர்ந்து கொள்ளுவோம்.

21.10.2012
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்


செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை  அணுகிச் சென்று அவரிடம், நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என்று வேண்டினர்.

அரியணை பற்றி இன்று சிந்திப்போமானால்  நாற்காலி, சிலுவை என்னும் இரண்டும் அரியனைகள் ஞாபகத்திற்கு வரலாம.; நாற்காலி அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், எடுத்தவர்களும் உண்டு.

ஒரு முறை, அன்னை திரேசாவுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: எனக்கு யாராவது பத்தாயிரம் டொலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: நானும் அப்படித்தான். பத்தாயிரம் டொலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம். இப்படி பணி செய்த அன்னை திரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள் மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பலரை வரலாறு மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர். அன்னையை அல்ல

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. பணியாளர் தலைமைத்துவம் என்பது அண்மையில் பலராலும்  பேசப்படும் ஒரு கருத்து. பணியாளர் தலைமைத்துவம் பற்றி விக்கிபீடியாவில் தேடிய போது வரலாற்றில் பலர் சொன்ன கருத்துக்களோடு, இயேசு இன்றைய நற்செய்தியில் சொன்ன கருத்துக்களும் உள்ளன. இயேசு என்ற தலைவர் அவருடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய செயலும் பணியாளர் தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அங்கு சொல்லப் பட்டுள்ளது. இந்த பணியாளர் தலைமைத்துவத்தில் பல அம்சங்கள் உள்ளன: பரிவோடு குறை கேட்பது, மற்றவரை உற்சாகப்படுத்துவது, மற்றவரின் திறமைகளை வெளிக் கொணர்வது... என இப்படிபல பேசப்படுகின்றன.

11வயதில் ஒரு சிறுவன் பங்கு சந்தையில் ஈடுபட்டான். 14 வயதில் அந்த சிறு கம்பெனியை ஆரம்பித்தான். இன்று தனது 79 வது வயதில், 63 பெரும் நிறுவனங்களுக்கு அதிபராக இருந்து உலகின் பெரும் செல்வந்தர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் அவர் - வாரன் பபெட். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே எளிய வீட்டில் வாழ்கிறார். அது அரண்மனை அல்ல. தன் காரைத் தானே ஓட்டுகிறார். அவர் ஒரு விமான கம்பெனியை நடத்தினாலும், சொந்த விமானம் இல்லை. ஒரு செல்போன், ஒரு கணனி இல்லாத அந்த மனிதர் - பல தலைவர்களுக்குப் பாடம்.

நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்: இந்தியாவில் சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். பல அதிரடி மாற்றங்கள். நேர்மையாய் உழைக்கும் அதிகாரிகள், முதல்வர்களை வைத்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இவரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டனவோ என்று பலரும் எண்ணியதுண்டு. அப்படி நேர்மையாக, சிறப்பாக செயல் பட்டவர்.

ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக நடந்து சென்றபோது, ஒரு இடத்தில் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேற சிரமமாக இருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: என்ன பிரச்சனை? சாக்கடை அடைச்சிருக்கு. அது தெரியுது. சுத்தம் செய்யிறதுதானே. ஒரே நார்த்தமாக இருக்கு, எப்படி இறங்குறதுன்னு தெரியவில்லை. அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி அவர் வழி போனார்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை திரேசா கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர். வாரன் பபெட் பணத்தையே வாழ்க்கையில் தெய்வமாக வழிபடும் பல நிறுவன முதலைகளுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற ஒரு பெரிய செல்வந்தர்.

அரசு அதிகாரிகளும் நேர்மையாக, திறமையாக உழைக்க முடியும். அது வெறும் சினிமா கதை அல்ல என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியர். பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள. உலகின் பெரிய, பெரிய வியாபார நிறுவனங்களெல்லாம் பணியாளர் தலைமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், செயல் படவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல் வழி படுத்த வேண்டுவோம்.
நாற்காலி, சிலுவை, இரண்டுமே அரியணைகள்தாம். நாற்காலியா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுவோம்.

எம்மை ஏழைகளுக்குக் கொடுப்போம்

14.10.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

செல்வந்தர்கள் வாழ்க்கை இன்று எப்படிப்பட்டதாக இருக்கிறது. செல்வந்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையே அதிகமாகிறது. இதனால் கடன்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இன்று மனஉளைச்சலுக்கு ஆளானவர்களே இன்னும் அதிகம். இந்த நிலையில் உள்ளதையெல்லாம் விற்று, கொடுத்துவிட்டு வந்து என்னை பின் செல்லுங்கள் என்ற இறைவார்த்தை அர்த்தத்தை இழக்கிறதோ என எண்ணத் தோன்டுகிறது. இயேசு சொன்னதைக் கேட்டதும் இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதர்; முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்.

எத்தனை இளைஞர்கள் இன்று முக வாட்டத்தோடு அலைகிறார்கள். போதை, மது, கேளிக்கை இவற்றால் நிம்மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பணத்தையும் உடலையும் உள்ளத்தையும் இறுதியில் வாழ்க்கையையும் இழந்து தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த இளைஞன் இயேசுவிடம் வந்தான்.  இயேசு அவனிடம், 'நீ நல்லவன். ஆனால் உன்னிடம் உள்ள பணம், சொத்து உன்னை மயக்கிவிட்டது. அதை தவறாகப் பயன்படுத்தி நீ உன் வாழ்வை அழித்துக்கொண்டாய். நீ தவறு செய்யவில்லை. ஆனால் நல்லது செய்ய தவறிவிட்டாய். அதுதான் நீ சந்தோஷமில்லாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே இன்றிலிருந்து சில நல்லவற்றைச் செய்யத் தொடங்கு மீட்படைவாய்" என்கிறார்.

நாற்செய்தியின் படி மீட்படைந்தோர் யார் என்னும் ஒரு ஆய்வை செய்தால் பல விடைகளை காணலாம். இயேசுவை, இறையரசை, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் மீட்படைந்தனர் என்று எளிதாக கூறிவிடலாம். இன்னும் கொஞ்சம் ஆழமாக பாத்தால்: கூரைப்பிரிப்பில் விசுவாசம் வெளிப்பட்டது. திமிர் வாதக்காரன் மீட்படைந்தான். பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்திமரத்தில் ஏறியதில் விசுவாசம் வெளிப்பட்டது. சக்கேயு மீட்படைந்தான். தொட்டால் போதும் என்பதில் இறையரசு இருந்தது. கனானேயப் பெண் மீட்படைந்தாள். என்னையும் மன்னிப்பார் என் தந்தை என்ற நினைவு இருந்தது. ஊதாரி மகன் மீட்படைந்தான். என்னை நினைத்தால் போதும் என்ற ஆசை இருந்தது. சிலுவையிலேயே கள்ளன் மீட்படைந்தான்.

மீட்படையக் கேட்டவர்கள் யார் என் நோக்கினால்: ஒரு சட்ட வல்லுநர் மீட்படைய என்ன செய்ய வேண்டும். 'சட்டங்களை விட, சாதி சம்பிரதாயங்களை விட, அயலானை நேசிப்பதே மீட்படைய வழி என்பது பதிலானது" ஒரு செல்வர் - மீட்படைய என்ன செய்ய வேண்டும்? 'பணத்தை வைத்துப், பரிமாறிக் கொள்வது, பகிர்ந்து கொள்வது மேலானது என்பது பதிலானது". செபதேயுவின் மக்கள் யோவான்-யாகப்பர் வந்தனர். இடுக்கான வாயில் வழியே நுழையுங்கள் என்றதன் மூலம் சிலுவை வழியே மீட்பு உண்டு என்பது அறிவிக்கப்பட்டது.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று. எனவே, 'நிலைவாழ்வை"அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர்.

நாம் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறோம். வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே  இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேட்போம் அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது இருந்தது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவேதான் இயேசுவிடம் வந்துள்ளான் எனலாம். இயேசுவோடு; வாழ்வின்; ஆழத்துக்குள் செல்லுவோம். எங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுவோம். எங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுவோம். அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல எங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும். நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். 'நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்". எங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு எங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார். மகிழ்வோடு ஏற்று வாழுவோம். நிறை வாழ்வைக் காண்போம்.

“மனிதாபிமானம் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் மணமுறிவு தேவையா

07.10.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலர் பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர்;. சிலர் நேர்மையான உள்ளத்தோடு இயேசுவை அணுகியதுண்டு. வேறு சிலர் 'இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்; கேள்வி கேட்டார்கள்". பரிசேயர் அவரை அணுகி மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒருமறு கேள்வியைக் கேட்கிறார்: 'மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?. கணவன் மணவிலக்குச் சான்று எழுதி தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதில் சொல்லுகின்றார்கள். உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி கட்டளைகள் கொடுத்ததாக பெரிதாக வேதாகமத்தில் இல்லை ஆனால் மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே அக்காலத்தில் சட்டமாக இருந்திருக்கின்றது. இவற்றை வைத்துப்பார்க்கும் போது அக்காலத்தில் திருமணஉறவு சீர்குலையத் தொடங்கியது என்பது தெரிகிறது.


இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. மேற்குலக நாடுகளில் பத்தில் ஆறு திருமணங்கள் முறிந்துவிடுவதாக கணிப்பு. நம் நாட்டிலும் விவாகரத்து விரிந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் திதமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திருமணங்களின் முறிவு மனித வாழ்வின் சீரழிவின் அடையாளம். ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைந்த பின் இறுதிவரை இணைந்து வாழும்போது மனித சமுதாயம் வாழும். திருமண முறிவு, விவாகரத்து தொடருமாயின், ஒரு தலைமுறையோடு தலைமுறை வாழ்ந்து அழியும். திருமணத்தில் இணைந்தவரைப்; பிரிக்கும் முயற்சி, தலைமுறையை அழிக்கும் முயற்சி.

அன்றிலிருந்து இன்று வரை மனிதருள் பலர் திருமண உறவை எப்படி பிரிப்பது? என்று சுயநலத்தோடு முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அத்தகைய முயற்சிகளுள் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் காணலாம். தங்களின் சுயநல முயற்சிக்கு பக்க துணையாக வேதாகமத்திலிருந்து மோசேயை துணைக்கு காட்டுகின்றனர். ஆனால் இயேசுவோ தன்னுடைய பதிலின்மூலம் அவர்களுக்கு உண்மை நிலையை உறுதிப்படுத்துகிறார். திருமணங்கள் கடவுள் இணைக்கும் ஒரு அருங்கொடை. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஆண்டவன் செயல்பட உதவும் இன்றியமையாத கருவிகள். இந்தச் சமுதாயம் அவர்களுக்கு உதவும் கரங்கள். எனவே இதனை  பிரிக்கும் அதிகாரம் மனிதர்கள் யாருக்கும் இல்லை. ஆகவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்கின்றார் இயேசு.

அன்று தொடங்கிய இந்த திருமண முறிவு பிரச்சினை இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், சம்பிரதாயங்கள் கடைபிடித்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ விளக்கங்கள், வியாக்கியானங்கள் கொடுத்தும் நிறைவடைந்தபாடில்லை. இந்த கெடுபிடி தொடர்வதற்குக் காரணம், எல்லா மதமும் மனித கலாசாரமும் திருமணத்தை தெய்வீக அனுபவமாகப் பார்க்கின்றன.  இத்தெய்வீகத்தன்மை திருமணத்தில் ஊடுருவிப் பரவி படர்ந்திருப்பதால்,  திருமண உறவு முறிவு ஏற்பட்டிருக்காது எனலாம். மனிதன் மனித பலவீனம், உலக ஆசைகள், நவீன பொருளாதாரம், நுகர்;வு கலாசாரம், பண்பற்ற பாலியல் அறிவு இவற்றால் பாதிக்கப்பட்டு, திருமணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?"  என்று பரிசேயத்தனமாக சிந்திப்பதற்குப் பதிலாக வாழ வைப்பதற்கான வழியைச் சிந்திப்பது நல்லது.

சட்டத்திற்கு எப்போதுமே சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் சட்டமாகிவிடக்கூடாது.  கணவனும் மனைவியும்  ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" இதுதான் சட்டம்.

ஒருவன் திருமணம் முடித்த பின் அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். இது மேசே காலத்து வளக்கமாக இருந்திருக்கிறது. இது விதிவிலக்கு. இந்த விதிவிலக்கும் கூட முறையானதல்ல என இயேசு கூறுகிறார். அவர்களது கடின உள்ளத்தின் பொருட்டே இந்த விதிவிலக்கு தரப்பட்து. அறிவு வளர்ச்சியின்றி, கல்வியும் கலாசாரமும் இல்லாது காட்டுமிராண்டியாக கடின உள்ளத்தோடு மிருகமாக வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற விதிவிலக்கு தேவைப்பட்டது. இயேசுவின் காலத்திலேயே அந்த விதிவிலக்கு கேள்விக்குறியாகிவிட்டது.

இன்று அறிவும் அறிவியலும், கல்வியும் கலாசாரமும், மனிதமும் மனிதாபிமானமும் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் காலத்தில் மணமுறிவு கேட்டு விண்ணப்பிப்பம் தேவைதானா. நம் அறிவு, மனிதாபிமானம், கலாசாரம், மனோதத்துவம், இறை நம்பிக்கை இவற்றை எல்லாம் கையாண்டு, கணவனையோ மனைவியையோ ஏற்றுக்கொண்டு இல்லறம் நடத்தினால்; வாழ்வில் எல்லாம் நிறைவாக இருக்கும்.

Thursday, September 27, 2012

“மற்றவருக்கு வெட்டும்”-தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் இந்த செய்தியை இனிநாமகற்றுவோம்

30.09.2012.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் இன்று நற்செய்தி நம்மை வியக்கவைக்கின்றது. இயேசுவை சாந்திராத, சீடர் என வரையறுக்கப்படாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று. அவரைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் நம்பிக்கை பதில் எல்லாரையும்; வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்.

இயேசு இத்தகு பொறாமையை நிராகரிக்கிறார். “நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்”. இயேசுவின் செய்திக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்னும் சீடர்களின் உணர்வுக்கு இந்த அகன்ற அடிப்படைத் தத்துவம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இயேசுவைத் தாங்கள் மட்டுமே பின்பற்றவேண்டும் என்று சீடர்கள் பேராசைப்படுவது ஒரு தடைக்கல்லாகும். அது இயேசுவை தூரத்தில் இருந்து பின்பற்றுவேரை துரத்திவிடும். நற்செய்திக்கு விளக்கமளிக்கத் தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என எண்ணும் உட்கட்சியினரை இயேசு கண்டிக்கின்றார். குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள் ஆகின்றனரே.

இன்றைய சிந்தனைளை இன்ஒரு பார்வையில் நோக்கினால் இன்றைய நற்செய்தியை “நற்செய்தி” என்று சொல்வதற்கே கொஞ்சம் பயமாயிருக்கின்றது என்றும் கூறலாம்.  ஏனெனில், இயேசு கையை, காலை வெட்டி கண்ணை பிடுங்கி எறிந்து விடுங்கள் என் கடுமையாப் பேசியிருக்கார். ஆனால் இங்கு நல்லவேளை, இயேசு ஒருவர் தம்முடைய கண்ணையோ, கையையோ, காலையோ வெட்டச்செல்கிறாரே தவிர மற்றவர்களுடையதையல்ல. ஆனால் இன்று நாம்வாழும் இந்த மண்ணிலே மற்றவர்களை வெட்டும் செய்தி தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் செய்தியாகின்றது.

இன்றுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசுவே அவர்களைப் பார்த்து “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு". என்று முற்றிலும் மாறுபட்ட பாடங்களைச் கற்பிக்க ஆரம்பித்தார்.

இப்படி சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யூதர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோபமாக, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அப்போது இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந் சொல்லுகின்றார் என உணர்வது அவசியமாகிறது.  ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும் போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன?  சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால்லை வெட்டி போடுங்கள் என்று கோபமாகச் சொல்வது போல் தெரிகிறது.

எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக வாழும் போது, மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். பழக்கங்களை மாற்றிக் கொள்வோம். கட்டுப்பாட்டுடன் வாழ்வோம். தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்குவோம். இவைகள் எல்லாருக்குமே நல்லதுதானே. இயேசு இவைகளைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ என்பதல்ல மாறக அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன் படி வாழ்வது நமக்கு நல்லதுதானே.

Tuesday, September 18, 2012

எம்மைப் பற்றியும், எம் வாழ்வின் இலக்கு பற்றியும் தெளிவாக இருப்போம்

23.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கத்தோலிக்க நம்பிக்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்றவர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் திரிபுக்கதைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு.  இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அவருடைய சீடர்கள் 'துன்புறும் மெசியா" வை ஏற்க மறுத்தார்கள். தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். இயேசு துன்புறப் போகிறாரே என கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் 'தங்களுள் யார் பெரியவர்" என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

உலகத்தின் கண்களுக்குப் பெரியவர் என்றால் எல்லாராலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு, உயர்நிலையில் வைக்கப்படுகின்ற ஒருவர்.இயேசுவின் பார்வையில் பெரியவர் அனைவரிலும் சிறியவராக மாற வேண்டும். உலகப் பார்வையில் சிறப்பு மிக்கோர் பிறரிடமிருந்து பணிவிடை பெறுவார்களே தவிர பிறருக்குப் பணிவிடை செய்பவர்கள் அல்ல. இக்கருத்தையும் இயேசு புரட்டிப் போடுகின்றார். இயேசு இவ்வாறு உலகப் பார்வைக்கு நேர்மாறான கருத்தை ஏன் கூறுகிறார்: மனிதர் எப்போதுமே சிறப்பான நிலையை அடைய விரும்புகிறார்கள்.ஆனால் சிறப்புநிலை எதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. பிறருக்குத் தொண்டுசெய்வதும் பிறரைத் தமக்கு உயர்ந்தவராகக் கருதுவதும் உண்மையான சிறப்புக்கு அடையாளம்.

இயேசுவின் வாழ்வில் துலங்கிய மதிப்பீடுகளை அவருடைய சீடர்களும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி எழுவதே சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். உண்மையான சிறப்பு பிறருக்குப் பணிசெய்வதிலே அடங்கும் என்று போதித்த இயேசு அதை முழுமையாகத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் தம் சீடருடைய காலடிகளைக் கழுவினார்.எனவே, இயேசுவைப் பின்செல்வோருக்குத் தரப்படுகின்ற வழிமுறை இவ்வுலகப் பார்வையைப் புரட்டிப்போடுகின்ற வழிமுறை. அவ்வழியே நாம் நடந்தால் நாமும் கடவுளின் பார்வையில் சிறப்புடையோர் ஆவோம்.

இயேசு குழந்தையை ஏன் சீடர்கள் மத்தியில் வைத்தார்? என்றால் சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? சீடர்கள் மத்தியில் இது ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும். இயேசு, தன் கேள்விகளுக்கு'மெசியா"என விடையளித்த பேதுருவைப் புகழ்ந்தார். பேதுரு கொடுத்த அந்த  பட்டத்தில் மமதை கொண்டு இயேசு மயங்கிப் போகவில்லை. மாறாக அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை பற்றி இயேசு பேசினார். இயேசுவின் இந்த பேச்சு சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே,பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்து கொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாக பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம்.

இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல்.ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, 'வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பதில் வரவில்லை. அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

அதற்கு இயேசுவின் பதில், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்". இந்த கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்த சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார். 

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார். 'எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஒரு அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, சம்மனசுக்கான இறக்கைகள் மறைந்து விடுகின்றன. குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம்.அவர்களை நம்மைப் போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

Wednesday, September 12, 2012

நான் யார் என்று தெரிகின்றேன்


16.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையா ளர்

'நான் யார்?"இந்தக் கேள்வியைச் சிந்திக்காதவர்களே இல்லை எனலாம். இன்று நம்மில் பலருக்கு இது எப்;போது எழும் ஒரு கேள்வியாக இருக்கலாம். ஆனால்இ அறிஞர்களும் ஞானிகளும் 'நான் யார்?" என்றத் தேடலில் வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டுள்ளனர். நான் யார் என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள் உள்ளன: என் குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில் நான் யார்? நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது இன்று நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாகிறது.

இயேசுவூக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. 21நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'யார் இந்த இயேசு?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனா;. இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியின் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

21நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம். ஈராயிரம் ஆண்டுகள் இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையூம் பொய்யூம். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவூக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவூ சொல்லியூம் இயேசுவைப் பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான் இப்படித்தான் என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை வரையறைகளை வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு. யோவான் தன் நற்செய்தியின் இறுதியில் எழுதியூள்ள வரிகள் நாம்; நினைத்துப் பார்க்கலாம்: இயேசு செய்தவை வேறு பலவூம் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப் பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. ஆனால்இ இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியூம். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க இரவானாலும் புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவூளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.

இன்று எங்களிடம் இயேசு 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவூளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

Thursday, September 6, 2012

கனல் கக்கும் எம் மணல்பரப்பை நீர்த் தடாகமாக்குவோம்

09.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு தன்னை தேடிவந்த நோயாளர்களைக் பல்வேறு வழிமுறைகளில் குணமாக்கியுள்ளார். சிலரைத் தொலைவிலிருந்தே குணமாக்கினார்.சிலரைத் தொட்டுக் குணமாக்கினார்.சிலரைத் தொடாமல் 'உம் நம்பிக்கை உம்மைக் குணமாக்கிற்று"என்று சொல்லிக் குணமாக்கினார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கும் காது கேளாத, திக்கிப்பேசும் மனிதரை இயேசு குணப்படுத்திய முறை வித்தியாசமானது.'இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டு, பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி,'எப்பத்தா"அதாவது 'திறக்கப்படு" என்றார்." உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன் நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.இந்த மனிதரைக் குணமாக்க இயேசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார் என கருதலாம்.

செவிடர்களும் வாய்பேச முடியாதவர்களும் நம்மிடையே இல்லையா?  இன்று நாம் வாழும் சூழலில் பலபாழ்பட்ட விடயங்கள் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லையே. இங்கு ஏன் யாருமே தட்டிக் கேட்கவில்லை. ஏன் யாருக்கும் காது கேட்கவில்லையா? அல்லது எல்லோருமே ஊமைகளா? ஏன்னும் கேள்விக் விடைகளை தேடி அலைகின்றன. இன்று இதுபோன்ற நிகழ்சிகளைக் கண்டும் காணாமலும் கேட்டும் கேளாமலும் சென்றால், இயேசுவின் வைத்தியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாம்தான் காது கேளாதவர். நாம்தான் திக்கு வாயுள்ளவர்கள். வாய்பேச இயலாதவர்கள். நம் காதுகளுக்குள் இயேசுவின் சில அதிரடி வைத்தியம் தேவைப்படும். நாம் நம் காதுகளைத் திறந்தால், நம் வாயைத் திறந்தால், வாய் பொத்தி,காதுகளை பொத்தி வாழும் எத்தனையோ குரல் இழந்த அடித்தள மக்களுக்கு குரலும் வாழ்வும் கொடுத்த இயேசுவைபோல் புதிய மனிதர்களாக மாறுவோம். எங்களைப் பார்த்து, இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார் என்பார்கள்.

இயேசு ஆற்றிய புதுமைகள் அக்கால மக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நல்ல செய்தியைக் தருகின்றன. அவற்றை நன்குணர்து வாழ்வாக்கினால். நம் காதுகள் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழும் அதிசய செயல்களை நம் வழியாகச் இயேசு செய்வார். தன்பணிவாழ்வில் இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு ஒரு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை இன்று நமக்கும்  விடுக்கிறார்.

இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும். தன் குறைகளைப் பார்த்து இயேசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவனாக அவன் இருந்திருக்கவேண்டும். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு குணமாக்கினார்.இயேசுவின் இந்த செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது: 'உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."என கூறிவிடலாம். எனவே நாமும் தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி கற்றுத்தந்த பாடத்தை வாழ்வாக்குவோம்.

இயேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக இயேசுவிடம் வரவில்லை. அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவிடம் அவனை கொண்டு வந்தனர்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களாக நாம் இன்று மாறுவோம். இயேவைப்போல் நாமும் எம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லுவோம். நல்லவைகளைப் பார்ப்போம், நல்லவைகளைப் பேசுவோம், நல்லவைகளைக் கேடபோம். கனல் கக்கும் எம் மணல்பரப்பு நீர்த் தடாகமாக்குவோம்

கிளாலி புனித கண்மணி மாதா ஆலயத்தில் 15 வருடங்களின் பின் முதல் நன்மை அருட்சாதன திருப்பலிக் கொண்டாட்டம்.





























01.9.2012 அன்று மேற்படி ஆலயத்தில் அருள் தந்தையர்கள் டியுக் வின்சன், பங்குத்தந்தை பத்தினாதர் தலைமையில் 10 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டு திருப்பலி கொண்டாடப்பட்டது. இத் திருப்பலியில் மறையுரை அற்றிய அருள் தந்தை டியுக் வின்சன், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று தன்னை அறிவித்தார். அவரை நாம் இன்று முதல் முதலில் அருந்தபோகின்றோம். எனவே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதே கேள்வியை எம்மையும் பார்த்துக் கேட்கின்றாh.; விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து நமக்கு வாழ்வு வழங்க காத்திருக்கும் இயேசுவை நாமும் உட்கொண்டு அவரோடு இருப்போம். அவரைப்போல் வாழ்வோம்; என தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து தற்போது 15 வருடந்களுக்குப் பின்பு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆலயம் முற்றக சேதமாக்கப்பட்டிருந்தாலும் அம்மக்களின் அயராத உழைப்பாலும் உதவியாலும் புனரமைக்கப்பட்டு அந்த அலயத்தில் பங்குத்தந்தை  மடுத்தீன் பத்தினாதர் தலைமையில் இவ்வருடம் வழமைபோல் திருப்பலி கொண்டாடப்பட்டுவருகின்றது. இன்னிலையில் மறைஆசிரியர் செல்வன் கிறிஸ்ரி கொண்சலஸ் அவர்களின் வழிநடத்தலில் 10 சிறர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்ட திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Sunday, September 2, 2012

Catholic Dog

 A joke to enjoy

Catholic Dog
-------------

A farmer named Muldoon lived alone in the Irish countryside with a pet dog he doted on. The dog finally died and Muldoon went to the parish priest and asked, "Father, the dog is dead. Could you be saying a mass for the creature?"

Father Patrick replied, "No, we cannot have services for an animal in the church, but there's a new denomination down the road, no telling what they believe, but maybe they'll do something for the animal."

Muldoon said, "I'll go right now. Do you think $50,000 is enough to donate for the service?"

Father Patrick asked, "Why didn't you tell me the dog was Catholic?"

Friday, August 31, 2012

உதட்டையும், உள்ளத்தையும் இணைத்தே இறைபுகழ் பாடுவோம்.


02.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நம்முடைய வழிபாடு,இறைப்பற்று பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்ய இன்றைய ஞாயிறு அழைப்பு விடுக்கிறது. பலதடவைகள் நாம் இறைவனை மேலோட்டமாக வழிபட்டிருக்கின்றோம்;. இதுதான் உதட்டால் செய்யும் வழிபாடு. இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று எசாயா வழியாக இறைவன் முன் அறிவித்ததை இயேசு யூதர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. தம் காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த வழிபாட்டு, ஆன்மீக முரண்பாடுகளை இயேசு இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

ஆன்மீகத்தைப் பல வழிகளில் வரையறை செய்யலாம். முரண்பாடற்ற வாழ்வு என்பது அவற்றுள் ஒன்று.யாரெல்லாம் தங்கள் வாழ்விலும், பேச்சிலும் முரண்பாடற்று வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் சிறந்த வகையில் தங்கள் ஆன்மீகத்தை வாழ்கின்றனர் என்று சொல்லலாம். செபம், வழிபாடு, இறைவார்த்தை இவற்றில் அதிக ஆர்வம் காட்டிவிட்டு, அதே வேளையில் வாழ்வில் நேர்மையற்ற தன்மை, பணிகளில் குறைபாடு, உறவுகளில் போலித்தனம் கொண்டவர்களாக வாழ்ந்தால், எசாயா குறிப்பிடும் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிடுவோம். 

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞனிடம் அதிகாரி சொன்னார்:“இங்கு இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன. முதலில் 2-வது விதியைச் சொல்கிறேன். தூய்மை என்பது இங்கு மிக முக்கியம்.” பிறகு அவனிடம் நீ இங்கு உள்ளே நுழையும்போது உன் கால்களை மிதியடியில் தேய்த்துத் துடைத்துக்கொண்டு வந்தாயா? என்று கேட்டார். அவன், “ஆம், நிச்சயமாக,” என்றான். “நல்லது”என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “இங்குள்ள முதலாவது முக்கிய விதி உண்மை பேசுதலாகும்.” “ஆனால் இங்கே மிதியடியே கிடையாது” என்றார். வெளித் தூய்மையை மட்டுமே நாம் போற்றினால் நம்மிடம் அகத்தூய்மை இல்லாதுபோகும். அகத்தூய்மை இல்லாத தூய்மை, தூய்மையேயில்லை. அப்படியானால் நம்மிடம் உண்மையே இல்லை. அப்போது நம்முடைய வழிபாடு உதட்டினால் மட்டுமே கடவுளைப் போற்றுவதாக அமைந்துவிடும். சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாடாகிறது. நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் யூதர்களின் வெளிவேடத்தை நாம் பலதடவை பார்த்திருக்கின்றோம். ஆனால் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று அவரது அன்பை அருகிலிருந்து சுவைத்த யூதாஸ் இயேசு நம்பிக்கை வைப்பதை நிறுத்திய பின்னரும் அவரைத் தொடர்ந்து பின்செல்வதற்கு எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுவது வெளிவேடமே, நேர்மைக்குறைவே.இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யூதாஸின்  போலித்தனம் இங்கு வெளிவேடமாகிறது.

இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம்,நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என உண்மையாக தன் உள்ளக்கிடக்கையை உதட்டினால் உரைத்தார். ஆனால் யூதாஸ் விதிவிலக்காக இருந்தார், யூதாஸ் நேர்மையாளராய் இருந்திருந்தால், வெளிவேடமற்றவனாக இருந்திருந்தால், அவனும் இயேசுவை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் இயேசுவோடு இருக்கவே முடிவு செய்தார், இது, யூதாஸ் இயேசு மீது கொண்டிருந்த பற்றுறுதியாலோ அல்லது அன்பாலோ அல்ல, மாறாக, தனது போதகர் மீதி பழிவாங்கும் இரகசிய ஆசையாலே இயேசுவோடு இருந்தார். இது வெளிவேடமே. இறுதியில் யூதாஸ் இயேசுவை விட்டு இறந்துபோனான். வெளிவேடம் எம்மை அழிவிக்கே இட்டுசெல்லும.; வெள்ளை உள்ளம் இறைவன்பால் எம்மை இட்டுச்செல்லும். யூதாஸ் உள்ளத்தல் உண்மையாகவே இறைபற்றற்றவனாக இருந்தான். புனித பேதுரு வெள்ளை உள்ளம் கொண்டிருந்தார். இயேசுவில் வாழ்வடைந்தார். எனவே புனித பேதுரு செய்தது போல நாமும் இயேசுவில் பற்றுறுதி கொண்டு உள்ளத்தில் வெளிவேடமற்று வாழ்வோம். இயேசுவோடும் அனைத்து மக்களோடும் எப்போதும் நேர்மையாய் வாழ உறுதிபூணுவோம்  

இன்று எம் தடுமாறும் வாழ்க்கையிலே தறிகெட்டலைந்து தடுக்கிவீழ்ந்தாலும் நாம் வெளிவேடத்துடன் வாழாது இறைவனே எம் வாழ்வினிலே ஆணி வேராய் ஆழப் பதிந்திருக்கிறார். எனவே நமது வாழ்வு இறைவனுக்கு ஏற்றதாக அமையவேண்டும். விழிப்பாய் இருப்போம். நம் உதடுகளும், நம் உள்ளமும் இணைந்தே இறைபுகழ் பாடட்டும். நம் வாழ்வும், வழிபாடும் முரணின்றி அமையட்டும் 

Saturday, August 25, 2012

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா? இயேசு பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்விக்கு விடைபகிர்வோம்.


26.08.2012 

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் சீடரில் பலரும் இயேசுவின் போதனைகள் சிலவற்றைப் பற்றி, குறிப்பாக தமது உடலை உணவாகத் தருவது பற்றி இயேசு குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்று பேசிக் கொண்டது ஒரு வியப்பான தகவல்தான். தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று என்பதைத் இன்றைய நற்செய்தி வாசகம்; பதிவு செய்திருக்கிறது.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே என்றும் கூறிவிடலாம். இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை. நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? இயேசு தன் சீடர்களிடம் கேட்ட இந்தக் கேள்வியை இன்று நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக் கொண்டால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் எம்முள்ளிருந்து பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறதை நாம் காணலாம். இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், இறைவழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைவதை காணலாம்.  உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர் என்றுதான் இன்று கூறத்தோன்றுகின்றது. எனவே எம்மைப்பார்த்து இயேசு கேட்கிறார்: நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” எனவே நாம் ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோம் “நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு விடைபகர்வோம்.

நாம் வாழும் இக்காலத்தில் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்  வாழ்வது எளிதான காரியம் அல்ல, இது, கிறிஸ்துவின் காலத்திலும் எளிதாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றும் பொழுது எதிர்படும் இடையூறுகளிலிருந்து நீந்திச் செல்லுமாறு இயேசு தம்மைப் பின்செல்லுவோரைக் கேட்கின்றார். இயேசு தன்சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்று உறுதியாக  உரைத்ததைக் கேட்டு அவரைப் பின்சென்ற பலர் அவரை விட்டு விலகிச் சென்றதை படம்பிடித்துகாட்டுனின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

எனினும் இயேசு தமது போதனைகளை கைவிடவில்லை;. உண்மையில் இயேசு தமது பன்னிரண்டு திருத்தூதர்கள் பக்கம் திரும்பி நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்வி இயேசுவின் பன்னிரு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்தின் விசுவாசிகளுக்கும் முன்வைக்கப்படுகிறது.  இன்றும்கூட கிறிஸ்தவ விசுவாசத்தின் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளால் பலர் துர்மாதிரிகை அடைகிறார்கள். இயேசுவின் போதனை கடினமாகத் தோன்றுகிறது, செயல்படுத்துவதற்கு அது மிகவும் கடினமாக இருக்கின்றது என்பது, கிறிஸ்துவைக் கைவிடுபவர்களும் அவரது போதனையைப் புறக்கணிக்கிறவர்களும் சொல்வது. இவர்கள் காலத்தின் அமைப்புகளுக்கு ஏற்ப வார்த்தையை வடிவமைத்து அவற்றின் அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் சிதைப்பவர்கள். இயேசு தம்மைப் பின்செல்லுவோரின் மேலோட்டமான வாழ்க்கையில் திருப்தி கொள்ளவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவரின் சிந்தனைகளிலும் அவரது திட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். இந்த மாதிரியான வாழ்வே நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும், நம் இருப்புக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கும், எனினும் இயேசுவைப் பின்செல்லும் இவ்வாழ்வு இன்னல்களையும் சுயமறுப்புக்களையும் கொண்டு வரும், ஏனெனில் இதில் அடிக்கடி தற்போதைய உலகின் போக்கிற்கு எதிராகச் செல்ல வேண்டியிருக்கும். 

ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்று இயேசுவிடம் அறிக்கையிட்ட தூய பேதுருவின் பதிலையும் கருத்தில் கொள்ளவேண்டும். நமது மனிதப் பலவீனங்களைப் புரிந்து கொள்ளும் அதேவேளை, தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து பேதுரு போல நாமும் இயேசுவிடம் சொல்வோம். ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம். கடினமானதாக இருந்தாலும், உமது வார்த்தைகள்தான் எங்களை வாழவைக்கும் என்று கூறி அவரிடமே அடிபணிவோம். 

Friday, August 17, 2012

Cell Phone vs... Bible

"Cell Phone vs... Bible"
கைத்தொலைபேசியை  எதிர் வேதாகமத்தை

1. I wonder what would happen if we treated our Bible like we treat our cell phones?
வேதாகமத்தை எங்கiளுடைய கைத்தொலைபேசியை நாம் பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தினால் எவ்வாறு இருக்கும் என் அறிய எண்ணினால் :


2. What if we carried it around in our purses or pockets?

 எமது பயணப்பையிலோ அல்லது சட்டைப்பையிலோ வேதாகமத்தை போகுமிடமெங்கும் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?

3. What if we turned back to go get it if we forgot it?

வேதாகமத்தை எம்முடன் எடுத்துச்செல்ல மறந்திருந்தால் திரும்பிசென்று எம்முடன் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?

4 What if we flipped through it several times a day?

ஒருநாளைக்கு பலதடவை வேதாகமத்தை திறந்து திறந்து பார்த்தால் எப்டியிருக்கும்?

5.What if we used it to receive messages?

(குறுகிய) செய்திகளை பெறுவதற்கு வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?

6. What if we treated it like we couldn't live without it?

வேதாகமம் இல்லாவிட்டால் எம்மால் வாழமுடியாது என்னும் நிலைக்கு வந்தால் எப்டியிருக்கும்?

7.What if we gave it to kids as gifts?

எமது சிறாருக்கு பரிசாக வேதாகமத்தை வழங்கினால் எப்டியிருக்கும்?

8.What if we used it as we travelled?
பிரயாணம் போகுமிடமெங்கும் வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?

9 What if we used it in case of an emergency?

மிக அவசரவேளைகளில் வேதாகமத்தை  பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?


10. What if we upgraded to include 24/7 tech service from the Holy Spirit?
பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்ற புதிய தொழில்நுட்பங்களை (27ஃ7) பயன்படுத்தி வேதாகமத்தை  மேம்படுத்தினால் எப்டியிருக்கும்?

11. This is something to make you go...hmmm...where is my Bible?

இவை அனைத்தும் உங்களை வேதாகமத்தை நோக்கி செல்வதற்கான ஒரு முயற்சியே… எங்கே என்னுடைய  வேதாகமம்? விடைதேடுவோமா?.


12.Oh, and one more thing. Unlike our cell phones, we don't ever have to worry about our Bible being disconnected because Jesus already paid the bill!

ஓம் இன்னுமெரு முக்கிய விடையம் எமது கைதொலைபேசிபோல் நாம் ஒருபோதும் கவலைப்படதேவையில்லை. வேதகமம் -ஒருபோதும் தொடர்பு துண்டிக்கப்படமாட்டது ஏனெனில் ஏற்கனவே இயேசு அதற்கான பில்லை- சிட்டையை  கட்டிவிட்டார்

Monday, August 13, 2012

The picture was taken by me-M.Francisk when  Rev.Fr.Paul Robinson was in a healing service at Thumpalai St Lourdes’ Grotto in Point Pedro, Jaffna, Sri Lank.

வாழும் உணவாகிய இயேசுவை உண்பதன் மூலம் புதிய மனிதராக மாறுவோம்

19.08.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மாணவிகள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு விடுதிக்கு இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை வந்திருந்தான். அங்கு சனிக்கிழமை மட்டுமே மாணவிகளை சந்திக்க அனுமதி உண்டு. நடுத்தர வயதுள்ள ஒரு பெண் பொறுப்பாளராக இருந்தார். அவரிடம்; அவன் குறி;ப்பிட்ட ஒரு மாணிவியின் பெயரைக் கூறி அவளைத் தான் பார்க்கவேண்டும் என்றான். அவளுக்கு ஓர் ஆச்சரியமாக இருக்கட்டுமே என்று தான் செவ்வாய்க்கிழமை வந்ததாகவும் தான் அவளுடைய சகோதரன் என்றும் சொன்னான். அப்போது அந்தபொறுப்பாளர் அவனிடம் நிச்சயமாக அவள் உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவாள். ஆனால் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாய் இருக்கிறது. ஏனெனில் நான் அவளுடைய அம்மா என்றார்.

நம் வாழ்வில் சில காரியங்கள் நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. எனது சதை உண்மையான உணவு எனது இரத்தம் உண்மையான பானம் என்று இயேசு சொன்னது யூதர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவருடைய சதையும் இரத்தமும் ஓர் அடையாளத்தைத் தருகின்றன. இவ்வாறு, இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் நற்கருணை எனும் அருள்சாதனமாகச் சித்தரிக்கிறார். எனவே இது யூதர்களுக்குப் புரிந்துகொள்ளமுடியாத ஆச்சரியத்தை அளித்தது. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது நமக்கு நம்புகிற ஆச்சரியம், அற்புதம். இது விண்ணினின்று இறங்கிவந்த உணவு, மன்னாவை உண்டவர் இறந்தனர். இதை உண்ணும் நாம் இறப்பதில்லை மாறாக, இயேசுவோடும் தந்தையோடும் இணைந்து விடுதலையும் வாழ்வும் பெறுவோம்.



ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, நிலைவாழ்வு தரும் உணவைப் பற்றி இயேசு பேசுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டைநோக்கிச் செல்லும் பாதையில், இஸ்ரயேல் மக்களுக்கு வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கப்பட்டதை நாம் அறிந்திருக்கின்றோம். தன்னிடம் வந்த பெருந்திரளான மக்களுக்கு மன்னாவைத் தாண்டி இன்று முடிவற்ற உணவு தானே என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். நிலையாக நிறைவு தரும் விண்ணக உணவாகிய தன்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார். யூதமக்கள்; பாலைநிலப் பயணத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையும் வரை அவர்களுக்கு மன்னா வாழ்வளித்தது. இப்பொழுது இயேசு, விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாகிய தன்னைப் பற்றி பேசுகிறார். அவரே நிலைவாழ்வு தரும் உணவு, தந்தையின் அன்புக்குரிய அவரில் மனிதரின் வாழ்வு முழுமையைக் காண்கிறது. இங்குகடவுளின் வாழ்வில் மனிதருக்கு அறிமுகம் கிடைக்கிறது.

கடவுளின் திருவுளத்தை அறிந்து, வாழ்வின் சரியான பாதையை கண்டுகொள்ள உதவும் மோசேயின் சட்டத்தில் இருந்த கடவுளின் வார்த்தையே வானிலிருந்து இறங்கி வந்த உண்மையான உணவு என்பது யூதர்களின் எண்ணம். இப்பொழுது இயேசு, விண்ணக உணவாக வருகின்றார். தானே கடவுளின் வார்த்தை, மனித உடலெடுத்த வார்த்தை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் காணப்படும் யூதர்களைப் போல இயேசுவின் இறைத்தன்மையில் சந்தேகம் கொள்வது கடவுளின் செயலை எதிர்ப்பதாகும். மனித தோற்றங்களைத் தாண்டிச் சென்று, மனித உடலெடுத்த கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். புனித அகுஸ்தீன் இவ்வாறு விளக்குகிறார்: அவர்கள் அந்த விண்ணக உணவில் இருந்து தூரமாக இருந்தார்கள், அவர்களால் அதற்கான பசியை உணரமுடிய வில்லை. அவர்களது இதயத்தின் வாயில் நோய் உள்ளது... உண்மையில், இந்த உணவு மனிதனின் உள்ளார்ந்த பசியைப் போக்கும்.

உண்மையாகவே நாம் கடவுளின் வார்த்தைக்கானப் பசியை உணர்கிறோமா என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். அகுஸ்தீன் மேலும் கூறுகிறார்: வாழும் உணவாகிய இயேசுவை உண்ண வேண்டும். அவரை உண்பதன் மூலம், காண முடியாத மறுபிறப்பை அடைந்து, புதிய மனிதராக மாற முடியும். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழும் உணவாகிய இயேசுவால் நாம் ஆழமாகப் புதுப்பிக்கப்படுவோம். நற்கருணை, மனிதனை இயேசுவின் இறைவாழ்வில் ஐக்கியமாக்குகிறது. அவன் இயேசுவின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்செல்லவும் பிறருக்குக் கொடையாக மாறவும் உதவுகிறது. இது விண்ணக அரசை நமக்குத் திறந்து வைக்கின்றது. மனிதருக்கு முழு நிறைவான வாழ்வை வழங்கவும், மனிதரை இறைவாழ்வுக்கு அறிமுகம் செய்யவும் இறைமகன் வானிலிருந்து உணவாக மண்ணுலகுக்கு இறங்கிவந்தார். நாம் இயேசுவிற்;காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு நற்கருணை உதவுகிறது. இந்த மாற்றம் தற்போதைய உலகுக்கு மிகவும் தேவைப்படுகிறது. மாறுவோம் மனுவுருவான இறைவார்த்தையை எம் வாழ்வாக்குவோம்.

Thursday, August 9, 2012

பலியாக இறந்து மற்றவரக்கு வாழ்வாக மாறுவோம்.

12.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்கிறார் இன்றைய நற்செய்தியில் இயேசு. வாழ்வு தரும் உணவாக வருகின்ற இயேசு தம்மையே பலியாக்குகிறார். அவர் பலியாக இறப்பதுதான் நமக்கு வாழ்வாக மாறுகிறது. இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தபின்புதான்,முடிவில்லாத வாழ்வு ஒன்று உண்டு, அவ்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு வழியும், ஊற்றும் இயேசுவே என வெளிப்பட்டது.  தந்தையாம் இறைவன் தமது ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கம் நாம் நிலைவாழ்வு பெறுவதற்காகத்தான் என்று நற்செய்தியாளர் புனித யோவான் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகின் பெரும் பகுதி கடவுளைவிட்டுத் தூரமாகச் செல்வது போன்றும் விசுவாசம் கடந்த காலத்தின் ஒரு பொருளாக நோக்கப்படுவது போல் தெரிந்தாலும் வாழ்வுதரும் உணவான இயேசுவை உட்கொள்ள ஏங்குவோரையும் காண முடிகின்றது. எனவே புதிய, முடிவற்றவாழ்வைப் பற்றி இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை நாம், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலானதாக கொள்ளவேண்டும். இவ்வுலகத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதை விடுத்து, அதையும் தாண்டி நாம் செல்வதற்கு உதவ இயேசு விரும்புகிறார். வாழ்வுக்கு முழு அர்த்தத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் நம் இருப்பின் மையம் இயேசு கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமே. புனித யோவான் நற்செய்தியில் காணப்படும் வாழ்வின் அப்பம் குறித்த உரையாடலை நோக்கினால் , வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் இவ்வுலகத் தேவைகளைத் தாண்டிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் என்பது தெளிவாகும். இஸ்ராயேலர்களுக்கு வானிலிருந்து வழங்கப்பட்ட மன்னாவைக்காட்டிலும் மேலான ஒன்றால் விசுவாசிகள் ஊட்டம் பெற்றுள்ளார்கள், அதுவே இயேசு, ஏனெனில் அவர் ஏதாவது ஒன்றை வழங்குபவராக மட்டுமல்ல, தன்னையே பலியாக்கி வழங்குபவராக வருகின்றார். நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவர் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வை நிறைவாகப் பெறுவோம்.

நாம் பிறருக்கு வாழ்வு தர வேண்டும் என்றால் நாமும் நம்மைப் பலியாக அர்ப்பணிக்க வேண்டும். நம் உயிரை இழக்கும்போதுதான் நாம் பிறருக்கு வாழ்வு அளிக்க இயலும். இயேசு அவ்வாறே செய்தார். சிலுவையில் அவர் தம் உயிரை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு நிலைவாழ்வை அவர் வழங்கினார். இயேசுவின் சீடராக வாழ விரும்புவோரும் இயேசுவைப் பின்பற்றித் தம் உயிரையே காணிக்கையாக்கும்போதுதான் பிறருக்கு அவர்கள் வாழ்வு தரும் ஊற்றாக அமைந்திட இயலும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிகம் முக்கியத்துவம் பெறாத இன்னொரு அந்த செய்தியைப் பற்றி சற்று நோக்குவோம். தாமே உயிர் தரும் உணவு என்று இயேசு கூறியதால், யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். இயேசுவும் அவர்களைப் பார்த்து உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம் என்று கூறுகிறார். முணுமுணுப்பு என்பது என்ன? ஒரு செய்தியை, ஒரு நபரை ஏற்றுக்கொள்ள முடியலவில்லை. அதே வேளையில் அந்த செய்தியை, அந்த நபரைத் தள்ளவும் முடியாது என்ற இக்கட்டன நிலையில் சில மனிதர்கள் செய்வதுதான் முணுமுணுப்பு. இவர்களுக்கு உண்மையை உரக்க பேச தையிரியமில்லை. காரணம், தாங்கள் உண்மையின் பக்கம் இல்லை என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே வேளையில், உண்மையை ஏற்றுக்கொள்கிற நேர்மையும், மனத் துணிவும் இவர்களுக்கு இல்லை. எனவே, ஒரே வழி மனம் புழுங்கி முணுமுணுப்பது. இது ஒருவகையான உளவியல் நோய்தான். யூதர்களுக்கு இயேசுவுடன் வாதிட்டு வெல்லவும் முடியவில்லை. அவர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எனவேதான் முணுமுணுத்தனர்.
 
நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில் நம் இல்லத்தில், பணியிடத்தில், பயண நேரங்களில் உண்மையை உரத்தப் பேசவும் முடியாமல், அநீதியைத் துணிவுடன் தட்டிக்கேட்கவும் முடியாமல் நாம் செய்வதெல்லாம் மெல்ல முணுமுணுப்பதுதான். இன்று இயேசு நம்மிடம் சொல்கிறார்; எங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். எனவே முணுமுணுப்பதை விடுத்து உண்மையின் வறுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் உண்மையின் ஒளிக்கு அவர்களை அழைத்து வரும்  பணிக்கு தயாரவோம். கடவுள்தாமே கற்றுத் தருவார். கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார் என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேற்கோள் காட்டுவதைக் காண்கின்றோம். நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கையாகட்டும். இதுவே நமது பட்டறிவாகட்டும். எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார்.

Thursday, August 2, 2012

வாழ்வு தரும் வார்த்தைக்காக தேடி வருவோம்.

05.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்று இயேசு கூறியதை கேட்ட ஒரு குடிகாரன் அவரது குடிப்பழக்கம் காரணமாக அவனருடைய குடும்பம் மிக்க பிரச்சினைக்குள் இரும்பதை அறியாமல் தொடர்ந்தும் அதே நிலையில் வாழ்ந்துவந்தான். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பதில் செலவிட்டு வந்தார். அவர்ஒரு நாள் கேரளத்தில் உள்ள தியான மடம் சென்று திரும்பினார். இயேசுவின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டார். இயேசுவின்மீது கொண்ட பக்தி காரணமாக அவன் குடிப்பதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னர் அவரோடு குடித்துக் கொண்டிருந்த ஒருவரை சந்தித்தார். நண்பா நீ இப்போதெல்லாம் குடிப்பதற்கு வருவதில்லையே என்று கேட்டார். நான் இயேசுவைச் சந்தித்தேன். அவரை நான் நம்புகிறேன். இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார். ஓ நீ இயேசுவை நம்புகிறாயா. அவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதாக சொல்லப்படுவதையெல்லாம் நம்புகிறாயா எனக் கேட்டார். இயேசு தண்ணீரை இரசமாக மாற்றியதை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் பீரையும் விஸ்கியையும் என் குடும்பத்தில் அனைவருக்கும் உணவாகவும் உடையாகவும் மாற்றியுள்ளார் என்பதை நம்புகின்றேன் என்றார். நான் இப்பொது அழிந்து போகும் உணவுவை அல்ல  அழியா வாழ்வு தரும் உணவை அன்றாடம் அருந்த ஆவலாய் இருக்கின்றேன் என்றார்.

நாம் இரு விதமான உணவுகளைக் காண்கிறோம். அழிந்து போகும் உணவு. இந்த உணவுக்காகத்தான் நாம் அனைவரும் ஆர்வத்துடன் உழைக்கின்றோம். இடையூறுகளைச் சகித்துக்கொள்கின்றோம்.அழியாத வாழ்வு தரும் உணவாக இறைமகன் இயேசு இருக்கிறார். அவரது மொழியும், உடலும் நிலைவாழ்வைத் தருகின்றன. ஆனால், இவற்றின்மீது ஆர்வமற்றவர்களாக,  நம்மில் பலரும் வாழ்கிறோம். மெல்ல, மெல்ல நாம் இறைப்பற்றை, ஆன்மீகத்தின் அடிநாதத்தை இன்று இழந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இறைவன் தரும் அமைதி, ஆற்றல், மகிழ்ச்சியைவிட உலக இன்பங்கள், உணவு, உல்லாசங்கள் பெரிய மதிப்பீடுகளாக மாறி வருகின்றன. நாம் வயிறே நிஜம், வயிறே வாழ்வு, வயிறே தெய்வம், என்பதைப் போல அற்ப வயிற்றுப் பசிக்காக, உண்மையான வாழ்வு தரும் கடவுளை ஏற்க மறுக்கின்றோம். போதைப் பொருட்களில் சுற்றிச் சுற்றி வந்து சுகம் அடைந்தவன் போல, திருட்டுப் பழக்கத்தில் திருடித் திருடி மகிழ்ந்தவன் போல பிறரைப் பற்றிக் குறைகூறிக் குறைகூறி மீள முடியாதவன் போல நாம் செற்ப வாழ்வு கிடைத்தும் அற்ப வயி;றறுப் பசிக்காக அற்ப உணவிற்காக அண்டவரை அவமதிக்கின்றோம். எனவே, இன்று நற்செய்தியில் இயேசு நமக்கு ஓர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கின்றார்; போலும். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் தருவார். எனவே, நம் அன்றாட வாழ்வில் இறைவார்த்தைக்கும், நற்கருணைக்கும், இறைத் திருவுளத்துக்கும் நேரமும், ஆற்றலும் செலவழிக்க முன்வருவோம். அப்போது மற்ற அனைத்தையும் இறைவன் நமக்கு நிறைவாகத் தருவார்.
 
அனைத்தும் அளித்த இறைவன், மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவது போல, பெற்றெடுத்தவர்கள் பேணி வளர்ப்பது போல அழைத்து வந்த இறைவன் எமக்கு  நிலைவாழ்வு தரும் உணவை அளிக்க காத்திருக்கின்றார். அழிகின்ற உடலை அதிகம் பேணும் போதும், அதிகம் பராமரிக்கின்ற போதும் அழியாத ஆன்மா நினைவுக்கு வருவதில்லை. இன்றையச் சமுதாயத்தில் தேடல்கள் பலவாயுள்ளன. சிலர் வேலைக்காக அலைகின்றார்கள். வேலை கிடைத்தால் பணத்துக்காக அலைகின்றார்கள் பணம் கிடைத்தால் புகழுக்ககாக அலைகின்றார்கள். தேடுவது அனைத்தும் நல்லவை தான். ஆனால் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வு தரும் வார்த்தைக்காக தேடி ஓடுவோம்.  பல மைல்கள் கடந்து வாழ்வு தரும் வார்த்தைக்காக அவரிடம் தேடி ஓடி வருவோம். இயேசு, அங்கே உண்மையான வார்த்தைகளை அள்ளிக் தாருவார் அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத நிலையான உணவிற்காகவே உழைப்போம்.
 
அமெரிக்கா அதிபராக நிக்சனின் இருந்தகாலத்தில் அவரது  அலுவலகத்தில் பணிபுரிந்த சார்லஸ் கோல்சன் கொடிக்கட்டி பறந்தவர். அவருக்கு இருந்த அணையாத தாகம் கடவுள் இல்லாமையே. இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியாகது என உணர்ந்தார். அன்றிரவே தனியாகச் செபிக்க ஆரம்பித்தார். அவர் மனமாற்றம் பெற்றார். அவர் தனது பணியை உதறிவிட்டு இயேசுவின் பக்தராக மாறினார்.அமெரிக்கா முழுவதும் ஆச்சரியப்பட்டது. அமெரிக்காவின் செய்தி ஏடுகள் சார்லஸ் கோல்சன் மனம் மாறி கிறிஸ்துவின் சீடரானார் என அவரை வர்ணித்தன.
 
இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியன்று. இவையாவும் இன்றிருந்து நாளை மறையக் கூடியன. அழிந்து போகும் உணவுக்கு ஒப்பானவை. அழியும் இன்பங்களில் அமிழ்ந்து அழிந்துவிடாது நாம் சாதுரியாமாக வாழ்வோம். இயேசுவில் நிலைவாழ்வை, நிறைவாழ்வைப் பெறுவோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff